Jailer 2 OTT : சைலன்டாக இன்று ஓடிடியில் வந்த ஜெயிலர் 2.. மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த ஜெயிலர் 2 திரைப்படம் இன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் வெளியாகி வசூலில் பெரிய சாதனை படைத்த இந்த படம் இப்போது ஓடிடி ரசிகர்களின் பார்வைக்கு வந்திருக்கிறது. பெரிய அளவில் தனி நிகழ்ச்சி எதுவும் இல்லாமல் நேரடியாக ஓடிடியில் படம் வெளியாகி இருப்பதால் பலரும் இன்று காலையிலேயே படத்தை தேடி பார்க்க தொடங்கியுள்ளனர்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் ஆக நடித்துள்ள ஜெயிலர் 2 படம் தியேட்டரில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து விட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு ரீலிஸ் ஆன ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவான இந்த படத்தின் 2வது பாகம் அக்டோபர் 15ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆனது. முதல் பாகத்தில் சொல்லப்படாமல் ரகசியமாக வைத்த சில ட்விஸ்ட்டுகள் காரணமாகவே அடுத்த பாகத்தில் என்ன சொல்லப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே இருந்தது.

ஜெயிலர் 2 மொத்த வசூல்
அதனாலயே படத்தில் வசூல் பெரிய அளவில் கிடைத்தது. அதுவும் 28 நாட்கள் முடிவில் இந்த படம் உலக அளவில் சுமார் 830.30 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் 553.25 கோடி கிராஸ் வசூலும், 473.05 கோடி நெட் வசலும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து சுமார் 277.05 கோடி வசூல் கிடைத்திருக்கிறது. எப்படியும் இந்த படம் 1000 கோடி வசூலில் இணைந்து விடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனாலும் தமிழ் சினிமாவில் அதிக வசூல் பெற்ற படங்களின் ஜெயிலர் 2வும் இடம் பிடித்து விட்டது.

ஓடிடியில் எதிர்பார்ப்பு
குறிப்பாக ரஜினிகாந்த் படத்துக்கு வெளிநாடுகளிலும் கிடைத்த வரவேற்பு படத்தின் மொத்த வசூலிலும் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுபோல ஓடிடி ரிலீஸில் ரசிகர்களிடம் இன்னொரு எதிர்பார்ப்பும் இருந்தது. தியேட்டரில் வெளியான ரிலீஸில் மோகன்லால், சந்தானம் நடித்த சில காட்சிகள் வரவில்லை. அதனால் அந்த காட்சிகள் எல்லாம் ஓடிடியில் சேர்த்து வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அமேசான் வீடியோவில் வெளியாகி உள்ள படத்தில் நேரம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள். இது தியேட்டரில் வெளியான பிரிண்ட் நேரத்துடன் ஒத்துப் போகிறது. அதனால் அண்கட் வர்ஷன் ஓடிடியில் வரவில்லை என்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.
16 வது நாளில் வேகம் குறைந்த ஜெயிலர் 2 வசூல்..ஆனாலும் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா? கலக்கும் ரஜினி
அதுபோல ஜெயலர் 2 தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போது சில காட்சிகள் ட்ரோல் செய்யப்பட்டது. இப்போ ஓடிடிக்கு வந்துவிட்டது, நெட்டிசன்கள் இனி இதை வைத்து ட்ரோல் செய்யப் போகிறார்களா? அல்லது படத்தை பாராட்ட போகிறார்களா? என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.


Click it and Unblock the Notifications
