சின்மயிக்கு நடந்தது துரோகம்.. எனக்கு அவரை ஒன்பதாம் வகுப்பிலேயே தெரியும்.. ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
சென்னை: தக் லைஃப் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய "முத்த மழை" பாடல் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சின்மயிக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். இசை அமைப்பாளரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் சின்மயி குறித்து பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.
சோசியல் மீடியா மூலமாக ஒருவர் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலமடைய முடியும் என்பதற்கு சான்றாகத்தான் இப்போது பாடகி சின்மயியும் மாறி இருக்கிறார். பாடகி சின்மயி இதுவரைக்கும் எத்தனையோ ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் இவருக்கு பல விருதுகளையும் வாங்கி கொடுத்தது. அதுபோல லேசா லேசா உட்பட பல ஹிட் பாடல்களுக்கு சொந்தமான சின்மயி சில வருடங்களாக பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

சின்மயி பாட தடைக்கு காரணம்
சின்மயி நடிகர் சங்கத்திற்கு ரூ.250 சந்தா செலுத்தாத காரணத்தால் அவர் சினிமாவில் தொடர்ந்து பாடுவதற்கும் டப்பிங் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி இப்போது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சின்மயி பாடிய முத்தமழை பாடல் ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து அவருக்கு ஏன் நடிகர் சங்கம் தடை விதித்தனர் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
ஜேம்ஸ் வசந்தன் பேட்டி
இந்த நிலையில் சின்மயிக்கு ஜேம்ஸ் வசந்தன் ஒரு பேட்டியில் தன்னுடைய சப்போர்ட்டை தெரிவித்திருக்கிறார். அதில் ஜேம்ஸ் வசந்தம் பேசும்போது, சின்மயிக்கு நடந்தது முழுக்க முழுக்க துரோகம், அநியாயம் என்றுதான் சொல்வேன். சின்மயி நடிகர் சங்கத்தின் மீது சில புகார்கள் கொடுத்திருந்தார். அதற்கு பழிவாங்குவதற்காக சின்மயிக்கு பாடுவதற்கு தடை விதித்தனர். ஆனால் அதற்கு அவர்கள் சொன்ன காரணம் சின்மயி சந்தா செலுத்தவில்லை என்று சொன்னார்கள்.
சின்மயி டப்பிங் பிரச்சனை
அதற்கு சின்மயி நான் 70 படங்களுக்கு மேலே டப்பிங் பேசி இருக்கிறேன் அதற்கு குறிப்பிட்ட சதவீதம் டப்பிங் யூனியனுக்கு பணம் செலுத்தி கொண்டிருக்கிறேன். அதுவே பல லட்சங்கள் தாண்டி இருக்கும். ஆனால் என்னால் ஒரு 250 ரூபாய் சந்தா செலுத்த முடியாதா? ஒருவேளை நான் மறந்திருந்தால் கூட அவர்கள் நினைவுபடுத்தி வாங்கி இருக்கலாம். இதே சங்கத்தில் பலருக்கு டப்பிங் யூனியனிலிருந்து பணம் செலுத்துகிறார்கள். அதுபோல எனக்கு ஏன் செலுத்தவில்லை? இத்தனை வருடங்களாக சங்கத்திற்கு நானும் அதிகமான பணம் கொடுத்து இருக்கிறேன் என்று சின்மயி சொல்லி இருந்தார், என ஜேம்ஸ் வசந்தன் கூறி இருந்தார்.
ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
அதோடு சிம்மயியை எனக்கு அவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே தெரியும். அவ்வளவு அழகாக பாடுவார். ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். அதில் கூட நான் அவருடைய பாட்டை கேட்டு வியந்திருக்கிறேன். அவ்வளவு அழகாக வார்த்தைகளை உச்சரிப்பார் என்று ஜேம்ஸ் வசந்தன் பேசி இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications