விஜய் இனிஷியல் கூட வேண்டாம், தூக்கி எறிந்த மகன்..! ஜோசன் பெயருக்கு பின்னாடி என்ன சேர்த்து இருக்கிறார் பாருங்க!
சென்னை: நடிகர் விஜய் மகன் ஜோசப சஞ்சய் தற்போது சினிமா உலகில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் இயக்க உள்ள படத்தின் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளிவந்த ஒரு சிறிய விஷயம் கூட சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

'விஜய்' இனிஷியல் இல்லாமல் கையொப்பம்
பொதுவாக தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் குழந்தைகள் தங்களது தந்தையின் பெயரின் முதலெழுத்தை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ஜேசன் சஞ்சய் தனது புதிய படத்திற்கான டைட்டில் கார்ட் மற்றும் கையொப்பங்களில் தந்தையின் பெயரை குறிக்கும் எழுத்தை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
அதற்கு பதிலாக அவர் "Jason Sanjay S" என்ற முறையில் கையொப்பமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் வரும் 'S' என்பது அவரது தாய் சங்கீதா (Sangeetha Sornalingam) பெயரை குறிக்கிறது என சமூக வலைதளங்களில் பலர் கூறி வருகின்றனர்.
குடும்ப சர்ச்சை நடுவில் பேசப்படும் விஷயம்
கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து பல்வேறு வதந்திகளும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் தாயின் பெயரை குறிப்பது போன்ற தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனால் விஜய்யின் பிள்ளைகள் இருவருமே அவரை விட்டு பிரிந்து அம்மாவுடன் மட்டும்தான் இருக்கிறார்கள். அம்மாவுக்கு தான் அவர்களுடைய சப்போர்ட் இருக்கிறது என்று தெரிகிறது என பலருக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தனியாக தொடங்கிய சினிமா பயணம்
சஞ்சய் தனது சினிமா பயணத்தை தந்தையின் ஆதரவை பெரிதாக பயன்படுத்தாமல் தொடங்க முயற்சி செய்கிறார் என்று கூறப்படுகிறது. சினிமா படிப்பை வெளிநாட்டில் முடித்த பிறகு அவர் இயக்குநராக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் தனியாகவே முயற்சி செய்து வருகிறார்.
சில காலமாக அவர் London நகரத்தில் வசித்து வந்ததாகவும், அங்கிருந்து படிப்பு மற்றும் சினிமா தொடர்பான பணிகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியாகவே பயணம்
லண்டனில் இருந்தாலும் சென்னை அல்லது பிற நகரங்களுக்கு சஞ்சய் பெரும்பாலும் தனியாகவே வந்து சென்று வருகிறார். குடும்பத்தின் பெரும் பிரபலத்தையும், தந்தையின் அரசியல் மற்றும் சினிமா பின்னணியையும் பயன்படுத்தாமல் தனது பாதையை தனியாக உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்று சிலர் கூறுகின்றனர்.
இந்த காரணத்தாலேயே அவர் வெளிப்படையாக தனது தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் இருக்கிறார் என்ற கருத்தும் இணையத்தில் பரவி வருகிறது.

முதல் படத்திற்கான எதிர்பார்ப்பு
இப்போது ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள முதல் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே ஆர்வம் அதிகமாக உள்ளது. தந்தை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பதால், அவரது மகன் இயக்குநராக வருவது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் 'Jason Sanjay S' என்ற கையொப்பம் வெளியான தகவல், அவரது குடும்ப பின்னணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவாதங்களையும் மீண்டும் சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது.
இதனால் நடிகர் விஜயின் குடும்பத்தைச் சுற்றி ஏற்கனவே பேசப்பட்டு வந்த விஷயங்களுடன் சேர்ந்து, ஜேசன் சஞ்சயின் இந்த முடிவும் தற்போது புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.
-
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
“15 நாட்களில் 266 குற்றங்கள்!”.. விஜய் அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன் -
பல்கலைக்கழக வேந்தராக மீண்டும் ஆளுநர்? முதலமைச்சர் வேண்டாமா? அமைச்சர் கூறியது என்ன?












Click it and Unblock the Notifications