பாடி பில்டர் ரோபோ சங்கருக்கு 6 மாதம் நடந்தது இதுதானா? கடைசி நேரத்தில் பிழைத்த அதிசயம்
சென்னை: சமீபத்தில் நடிகர் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்தது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ரோபோ சங்கரின் உடல்நலம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரோபோ சங்கர் எதார்த்தமாக செய்த செயலால்தான் ஆபத்தான நிலைமையில் இருந்து தான் மீண்டு வந்திருக்கிறாராம்.
ஒரு பாடி பில்டராக இருந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய தனித்துவமான காமெடியின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்து, பார்த்ததும் மனதிற்கு பாசிட்டிவ் எனர்ஜி கொண்டு வந்து விடும் ஒரு நபராகவே ரோபோ சங்கர் இருந்து வருகிறார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் வெற்றி பெற்றவர்களில் ஒருவராக ரோபோ சங்கர் இப்போது வரைக்கும் இருந்து வருகிறார். அடுத்தடுத்து முன்னணி கதாநாயகன்களோடு ஜோடி சேர்ந்து கொண்டிருக்கும் ரோபோ சங்கர் நடிக்கும் திரைப்படங்களில் இவருடைய தனித்துவமான பாடி லாங்குவேஜ் மற்றும் காமெடி பலரையும் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக குழந்தைகளை அதிகமாக கவர்ந்திருக்கிறது.
இதுவரைக்கும் கம்பீரமாக கெத்தாக இருந்து வந்த ரோபோ சங்கரின் திடீரென்று உடல் எடை குறைத்த புகைப்படங்கள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரோபோ சங்கரின் ரசிகர்கள் என்ன ஆனது என்று பெரும் அதிர்ச்சியில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை பாதித்து இருந்ததாகவும், அது அவருக்கு ஆறு மாதங்களாக தெரியாமல் இருந்திருக்கிறது என்றும் பிறகு வெளிநாட்டிற்கு சூட்டிங் சென்றிருந்த இடத்தில் ரோபோ சங்கர்க்கு தீவிரமான வயிற்றுப்போக்கு காரணமாக உடல் நல பிரச்சனை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதோடு உடல்நலம் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் சில மாதங்களாகவே குடியை விட்டிருக்கிறார். ரோபோ சங்கர் அடிக்கடி குடித்து வருவார் என்றும் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சில மாதங்களாகவே அவர் அதை தவிர்த்து இருக்கிறார். அவர் தெரியாமல் செய்த செயலால் தான் தற்போது உயிரே பிழைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு மஞ்சள் காமாலை பாதித்திருக்கும் நிலையில் தீவிரமான மருத்துவ கண்காணிப்பில் இருந்து மீண்டு வந்த போது தான் அவர் மருத்துவர் மற்றும் தன்னுடைய மகளோடு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது உயிர் பிழைத்து மீண்டும் தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், விரைவில் மீண்டும் தன்னுடைய பழைய நிலையில் திரும்பி வரவேண்டும் என்று அவருடைய தீவிரமான ரசிகர்கள் வேண்டிக்கொண்டு இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications