ஆர்த்தி ரவிக்கு பதிலடி கொடுத்து ரவி மோகன் அறிக்கை.. அடுத்த நொடி கெனிஷாவின் அதிரடி பதிவு
சென்னை: நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி)யின் குடும்ப பஞ்சாயத்து சோசியல் மீடியா முழுவதும் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் ரவி மோகனின் மனைவி நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து ரவி மோகன் இன்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதே நேரத்தில் ரவிமோகனின் தோழியான கெனிஷா தன்னை பற்றி வந்த பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து தன் சந்தோஷத்தை பகிர்ந்து இருக்கிறார்.

ஜெயம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரவி மோகன் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தாலும் கடந்த வருடத்தில் இவர்களுக்குள் இருந்த பிரிவு வெளியே தெரிய ஆரம்பித்தது. தான் தன்னுடைய மனைவியை ஆர்த்தி பிரிய போகிறேன் என்று ரவி மோகன் நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார்.
விவாகரத்து வழக்கு
அதைத் தொடர்ந்து விவாகரத்து வழக்கும் தொடுத்திருந்தார். இவர்களுடைய வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் பழகி வருவது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. அதற்கு ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் மறுப்பு தெரிவித்திருந்தனர். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறியிருந்தனர்.
ஆர்த்தி ரவி பதிவு
ஆனாலும் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திருமண நிகழ்ச்சிக்கு ரவி மோகன் கெனிஷாவும் ஒரே வண்ண உடையில் ஜோடியாக வந்திருந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அந்த நாள் முழுக்க அவர்கள் பற்றிய செய்திதான் சோசியல் மீடியா முழுவதும் பரவி வந்தது. அன்று மாலையே ஆர்த்தி ரவி இரண்டு பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டிருந்தார். நான் இவ்வளவு நாள் அமைதி காத்து வந்தேன் என்னுடைய குழந்தைகளுக்காக போராடுவேன்.
பத்திரிக்கையில் முன்னாள் மனைவி என்று குறிப்பிடுகின்றனர். இந்த பிரச்சனை தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் போய்க்கொண்டிருக்கிறது முன்னாள் மனைவி என்று சொல்ல வேண்டாம், என்னுடைய குழந்தைகளுக்காக நான் தொடர்ந்து பல்வேறு அவமானங்களையும் சந்தித்து வருகிறேன் என்று நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ரவி மோகன் பதிவு
இதைத்தொடர்ந்து இன்று ரவி மோகன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் நான்கு பக்கத்திற்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் இத்தனை வருடமாக என்னுடைய முதுகில் குத்தப்பட்டு இருந்தேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. எனது முன்னாள் மனைவியை மட்டுமே விட்டு விலக முடிவு செய்தேன், எனது குழந்தைகள் அல்ல. எனது குழந்தைகள்தான் என்னுடைய பெருமை, மகிழ்ச்சி. அவர்களுக்காக அனைத்துமே செய்வேன்.
சில நாட்களாக எனக்கு இருக்கும் வருத்தம் 16 ஆண்டு கால துயரமான வாழ்க்கையை விட பெரிதல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளாக எனது வருமானத்தை பெற்றோருக்கு கூட அனுப்ப மறுக்கப்பட்டேன். இத்தனை நாட்களாக அமைதியாக பொறுமையாகவும் இருந்தேன். எனது அமைதிக்கும் எல்லை உண்டு. என்னுடைய வீட்டை விட்டு ஏதுமில்லாமல் நான் வெளியேறிய போது எனக்கு அழகான துணையாக நின்றவர் கெனிஷா பிரான்சிஸ். அவர் ஒரு அழகான துணை.

நண்பரின் பதிவு
நான் வாழ்க்கையில் சந்தித்த சட்ட உணர்வு ரீதியான எல்லா பிரச்சனைகளிலும் என்னுடன் இருந்தவர். என்னுடைய கதையை கேட்டு அடுத்த நொடியே ஒரு மனநல ஆலோசகராக இல்லாமல் தோழியாக இருந்து உதவினார். நான் கண்ணீர், ரத்தம் என துடித்துக்கொண்டிருந்தபோது என்னை துன்பங்களில் இருந்து வெளியே கொண்டு வந்தவர் கெனிஷா. எந்த ஆதரவும் இன்றி வீட்டை விட்டு வெளியே வந்த போது அவர்தான் என் வாழ்க்கையில் ஒளியை கொண்டு வந்தவர்.
கெனிஷாவை அவமதிக்கும் எந்த செயலையும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று ரவி மோகன் அந்த பதிவில் கூறி இருக்கிறார். ரவி மோகன் பதிவு வெளியிட்ட அடுத்த நொடி கெனிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தன்னுடைய நண்பர் ஒருவர் பகிர்ந்த பதிவை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார். அதில் ஒரு கதைக்கு எப்போதும் இரண்டு பக்கம் இருக்கும். மறுபக்கம் இப்போது வெளிச்சத்திற்கு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்ன நடக்கிறது என்பது தெரியாமலும், அது அமைதியாக இருக்கும் போது மக்கள் இது இப்படித்தான் என்று எடை போடுகிறார்கள்.
எதுவும் உண்மை இல்லை
கெனிஷா நீங்கள் தைரியமானவர், கனிவானவர், வெளிப்படையாக பேசக்கூடியவர். நல்ல நோக்கமுள்ள ராக்ஸ்டார். இணையத்தில் உங்களைப் பற்றியும் உங்களுடைய கேரக்டர் பற்றியும் சொல்லப்பட்ட எல்லா பயங்கரமான விஷயங்களையும் படித்த போது நான் மிகவும் வருத்தப்பட்டேன். ஒரு வருடத்திற்கு மேலாக தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் உங்களை அறிந்திருப்பதால் இந்த விஷயங்கள் உண்மை இல்லை என்று நான் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
கெனிஷாவின் பதிவு
நீங்கள் பலருக்கு உதவி செய்து இருப்பதை மட்டுமே பார்த்திருக்கிறேன். பதிலுக்கு எதுவும் கேட்கவில்லை. உங்களை சுற்றி வந்த அத்தனை அவதூறு சொற்களும் உண்மை கிடையாது என்று அந்த பதிவில் கூறப்பட்டிருக்கிறது. அதை கெனிஷா தன்னுடைய ஸ்டோரியில் பகிர்ந்து "நன்றி என் அருமை சகோதரரே. நீங்கள் எனக்கு சொந்தமாக பிறந்திருக்க விரும்புகிறேன். ஆனால் உங்கள் ஆதரவையும் புரிதலையும் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த வார்த்தைகளுக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications