ரவி மோகன் மாமியார் வெளியிட்ட பதிவு.. அதிரடியாக கெனிஷா போஸ்ட்.. ஆனால், தொடரும் பஞ்சாயத்து
சென்னை: நடிகர் ரவி மோகன் குடும்ப விஷயம் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ரவி மோகன் மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ரவி இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு இடையில் ஆர்த்தியின் அம்மாவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் ரவி மோகனின் தோழி கெனிஷாவும் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுடைய திருமணத்திற்கு இரண்டு வீட்டினரும் சம்மதம் தெரிவித்திருந்தனர். கிட்டத்தட்ட 16 வருடங்களாக இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக தான் இருந்தது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வரைக்கும் ரவி மோகன் மற்றும் அவருடைய மனைவி, அம்மா, பெற்றோர் எல்லோருமே சில பேட்டிகளில் கலந்து கொண்டனர். அந்த பேட்டிகளும் இணையத்தில் வைரல் ஆகி வந்தது.

திடீர் விவாகரத்து
ஆனால் கடந்த வருடத்தில் திடீரென்று ரவி மோகன் தான் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அதற்கு சில வாரங்களுக்கு முன்பு இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாக இருந்தது. ஆனால் அது உண்மையாக இருக்காது என்று பலர் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் ஜெயம் ரவியே அது உண்மைதான் என்று அறிவித்திருந்தார்.
வதந்தி
அந்த நேரத்தில் ரவி மோகன் கெனிஷா என்பவர் உடன் நெருங்கி பழகி வருகிறார் என்ற செய்திகளும் பரவி வந்தது. அதற்கு ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் மறுப்பு தெரிவித்திருந்தனர். சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். இதுதான் மீண்டும் பூகம்பத்திற்கு காரணமாக அமைந்தது. அன்றைய நாளில் ஆர்த்தி ரவி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆர்த்தி ரவி அறிக்கை
அதில் தான் தனியாக குழந்தைகளை கவனித்து வருவதாகவும் தன்னுடைய சொந்த வீட்டில் இருந்து தான் வெளியேற்றப்படுவதாகவும் சென்டிமென்டாக குறிப்பிட்டு இருந்தார். அதேபோல ரவிமோகன் ஐந்து பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு ஆர்த்தியின் அம்மா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ரவி மோகன் சொன்னது எல்லாமே பொய், அவரால் நான் கடனில் இருக்கிறேன். அதுவும் 100 கோடி கடனில் நான் சிக்கி இருக்கிறேன் என்று ரவி மோகனின் மாமியாரும் ஆர்த்தி ரவியின் அம்மாவும் ஆன சுஜாதா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கெனிஷா பதிவு
இப்படி இவர்களுடைய குடும்ப பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தாகி கொண்டிருக்கும் நிலையில் கெனிஷாவும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் "சத்தங்களுக்கு இடையே அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது. என் ஆன்மாவின் கஷ்டம் தனியாக நிற்கிறது. ஆனால் அவையெல்லாம் மன உறுதியை கொடுக்கிறது. இசையை பிடித்துக் கொண்டு நிற்கிறேன். காயங்களை பாடங்களால் ஏற்கிறேன். ஆழ்ந்த சோகத்தின் நடுவே மனம் பாடுகிறது. நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது" என அந்த பதிவில் பதிவிட்டு இருக்கிறார். அதோடு கெனிஷா அவர் பாடிய சில வீடியோக்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications