எதிர் நீச்சல்: குணசேகரன் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.. பல உண்மைகளை உடைத்த ஜான்சி ராணி
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடிக்கும் மாரிமுத்துவின் கேரக்டர் பற்றி அந்த சீரியலில் ஜான்சி ராணி பல தகவல்களை கூறியிருக்கிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கேரக்டரில் விஜே காயத்ரி நடித்து வருகிறார்.
விஜே காயத்ரி எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடிக்கும் மாரிமுத்துவின் உண்மை கேரக்டரை பற்றி பேசியிருக்கிறார்.
கேமரா முன்பு பார்ப்பதற்கும், கேமரா ஆப் செய்த பிறகு பார்ப்பதற்கும் மாரிமுத்துவிற்க்கு அதிகமான வித்தியாசம் இருக்கிறது என்று சில நினைவுகளையும் விஜே காயத்ரி பகிர்ந்து இருக்கிறார்.

சீரியலில் முதல் முறை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து இருக்கின்றனர். இந்த சீரியலில் நடிக்கும் பல நடிகர்கள் பல திரைப்படங்களில் நடித்துதான் முதல்முறையாக இந்த சீரியல்களில் நடித்து வருகிறார்கள். அதில் ஒருவராக இருப்பவர் மாரிமுத்து. இவர் இதற்கு முன்பு பல திரைப்படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தாலும் முதல் முறையாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த சீரியலில் கதாநாயகியை விடவும் இவருக்கு தான் அதிகமான முக்கியத்துவம் இருந்து வருகிறது. வில்லத்தனத்தில் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்று சொல்வது போல தற்போது தனக்கு என்று தனி பாடி லாங்குவேஜ் காட்டி வருகிறார். இது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

வதந்திக்கு விளக்கம்
"ஏம்மா ஏய்" என்கிற இவருடைய பேச்சு வழக்கு தற்போது அதிகமான ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் அதிகமான மீம்ஸுகளில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளத்திலும் இவரைப் பற்றிய சர்ச்சை பேச்சுக்களும், வதந்திகளும் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் நடிகர் மாரிமுத்து ட்விட்டர் பக்கத்தில் தன்னிடம் ஒரு பெண் போன் நம்பர் கேட்ட நிலையில் அதற்கு வெளிப்படையாக அவர் தன்னுடைய போன் நம்பரை பகிர்ந்து இருக்கிறார். அது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு மாரிமுத்து தன்னுடைய பதிலையும் கொடுத்திருந்தார். தப்பு செய்கிறவர்கள் தான் மறைத்து செய்யணும் நான் அப்படி இல்லை. எந்த சூழ்நிலையிலும் வெளிப்படையாக இருக்கிறேன். அதனால் கொடுத்தேன் என்னிடம் பேச வேண்டும் என்று ஒருவர் கேட்கும் போது நான் போன் நம்பர் கொடுத்தால் என்ன தப்பு. என்னுடைய போன் நம்பர் பல பேரிடம் இருக்கிறது. வேண்டுமென்றால் நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தைரியமாக மாரிமுத்து பேசியிருந்தார்.

ஜான்சி ராணியின் விளக்கம்
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கேரக்டரில் நடித்து வரும் விஜே காயத்ரி தற்போது ஒரு பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதில் மாரிமுத்து செய்தது தவறாக எதுவும் இல்லை. பல பேர் செய்து கொண்டிருப்பது தான். அவரும் செய்திருக்கிறார். இதை பலரும் மூடி மறைத்து செய்கிறார்கள். இவர் வெளிப்படையாக செய்து இருக்கிறார். அவருடைய மனதில் தப்பான எந்த எண்ணமும் இல்லாமல் தான் அவர் அப்படி செய்திருக்கிறார். அந்தப் பெண் இவருக்கு தெரிந்தவராக இருந்திருக்கலாம். அல்லது வேறு ஏதும் உதவிக்காக கூட கேட்டிருக்கலாம். இவர் நடிப்பு துறையில் இருப்பதால் அதற்காக வாய்ப்புக்காக கூட அந்த பெண் நம்பரை கேட்டிருக்கலாம். இவரும் கொடுத்திருக்கிறார். அதை எதற்காக இவ்வளவு பெரிய விஷயமாக மாற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நடிகர் மாரிமுத்து இப்படித்தானாம்
அதுமட்டுமல்லாமல் குணசேகரன் நீங்கள் பார்க்கும் போல கரடு முரடானவர் கிடையாது. அவரு முற்றிலும் மாறுபட்டவர். கேமரா ஆன் செய்துவிட்டால் குணசேகரன் ஆக இருப்பவர் கேமரா ஆப் செய்து விட்டால் மாரிமுத்துவாக டக்கென்று மாறிவிடுபவர். மாரிமுத்து எப்படிப்பட்டவர் என்றால் யாராவது அவர் முன்பு நல்ல விஷயத்தை செய்தால் அதை முதலாக பாராட்டக் கூடியவர். நான் முதல் நாள் சூட்டிங் செல்லும்போது அங்கே அனைவரும் பிரபலமான நடிகர்களாக இருந்தனர். அவர்கள் முன்னிலையில் நான் நடித்தேன். அப்போது என்னுடைய நடிப்பை பார்த்து முதல் ஆளாக பாராட்டியது அவர்தான். அதே நேரத்தில் பலமுறை நம்ம ஏதாவது சின்ன சொதப்பல் செய்தால் கூட அதை குறித்தும் கூறுவது அதுவும் அவர்தான் முதல் ஆளாக இருப்பார். என்று மாரிமுத்து பற்றி பல தகவல்களை காயத்ரி பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications