Rangaraj: மிரட்டுறாங்க! என் குழந்தைக்கு ஏதாவது ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் தான் பொறுப்பு! ஜாய் பேட்டி
சென்னை: கடந்த சில மாதங்களாகவே மாதம்பட்டி ரங்கராஜன் பற்றிய செய்திகள் சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜன் பற்றி அடுத்தடுத்து செய்திகளையும், போஸ்ட்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து தனக்கோ, தன்னுடைய குழந்தைக்கே ஏதாவது ஆனால் அதற்கு மாதம்பட்டி ரங்கராஜன் தான் காரணம் என்று பரபரப்பாக பேசியிருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜன் சோசியல் மீடியா பயன்படுத்தும் பலருக்கும் நன்கு பரிட்சயமானவர்தான். சமையல் கலைஞராக youtube சேனலில் இவர் செய்யும் வித்தியாசமான சமையல் அனைவரையும் கவர்ந்தது. பிரபலம் வீட்டு பங்க்ஷன் என்றாலே அங்கு மாதம்பட்டி ரங்கராஜனின் சமையல் இருக்கும். மாதம்பட்டி ரங்கராஜன் சமையல் இருந்தால்தான் அது பிரபலமான பங்க்ஷனாக இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு எல்லா பிரபலங்கள் வீட்டில் விசேஷங்களிலும் இவர்தான் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அதோடு தான் செய்யும் சமையல் வீடியோக்களையும், அதற்கு பிரபலங்கள் கொடுக்கும் ரிவியூக்களையும் கூட சோசியல் மீடியாவில் மாதம்பட்டி ரங்கராஜன் வெளியிட்டு வந்தார். இது அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அந்த நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் விலகியதும் இவர் நடுவராக வந்தார். அதற்குப் பிறகு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக தொடங்கி விட்டார்.
அதற்கு முன்பு இவர் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் மாதம்பட்டி ரங்கராஜனோடு தனக்கு திருமணம் நடந்து விட்டது என்று போஸ்ட் போட அது சோசியல் மீடியாவில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாதப்பட்டி ரங்கராஜனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறது இதனால் இவருக்கு முதல் மனைவியோடு விவாகரத்து ஆகிவிட்டதா? என்ற கேள்விகள் வந்தது.
அப்போது முதல் மனைவி மாதம்பட்டி ரங்கராஜன் உடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு என்னுடைய க்யூட்டான பேமிலி என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். இதனால் ஜாய் பொய் சொல்கிறாரா? என்ற கேள்விகளும் வந்தது. அப்போது ஜாய் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு காரணம் மாதம்பட்டி ரங்கராஜன் என்றும் போஸ்ட் போட தொடங்கினார். தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜன் தன்னை ஏமாற்றிவிட்டதாக வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே ஜாய்க்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. அப்போது மாதம்பட்டி ரங்கராஜன் அந்த குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும், அது என்னுடைய குழந்தை என்று உறுதியானால் நான் அந்த குழந்தைக்கு வாழ்க்கை முழுக்க கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று அறிக்கை விட்டிருந்தார். ஆனால் அறிக்கை விட்ட ஒரு மாதமாகிவிட்டது ஆனாலும் டிஎன்ஏ டெஸ்ட்க்கு மாதம்பட்டி ரங்கராஜன் வரமாட்டேங்குகிறார் என்று ஜாய் கலாய்த்து போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தார்.
மேலும் தன்னுடைய மகன் ராகா ரங்கராஜ் பெயரிலும் ஒரு இன்ஸ்டா ஐடி ஓபன் செய்து அதிலும் போஸ்ட் போட தொடங்கியிருந்தார். இந்த நிலையில் அந்த ஐடி இப்போது ரிப்போர்ட் செய்து நீக்கப்பட்டு இருக்கிறதாம். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜாய் கிரிஸிடில்லா நான் என்னுடைய மகன் ராகா ரங்கராஜ் பெயரில் ஒரு இன்ஸ்டா ஐடி ஓபன் பண்ணி இருந்தேன் அதை மாதம்பட்டி ரங்கராஜன் அவருடைய அணியில் உள்ளவர்களிடம் சொல்லி ரிப்போர்ட் செய்து அந்த ஐடியை நீக்க வைத்து விட்டார்.
இதுகுறித்து நான் சைபர் கிரைமில் கம்ப்ளைன்ட் செய்யப் போகிறேன் அதுமட்டுமல்லாமல் மாதம்பட்டி ரங்கராஜன் பலரிடம் என்னுடைய செல்போன் நம்பரை கொடுத்து எனக்கு மெசேஜ் செய்ய சொல்கிறார். அவர்கள் என்னை மிரட்டுகிறார்கள். எனக்கோ அல்லது என்னுடைய குழந்தைக்கோ ஏதாவது ஆனால் அதற்கு முழு பொறுப்பு மாதம்பட்டி ரங்கராஜ் தான். அவர் ஒரு மாதத்திற்கு முன்பு instagramயில் அறிக்கை வெளியிட்டார். ஆனால் டி என் ஏ டெஸ்ட் இன்னும் வரவில்லை அவருக்கு தைரியம் இருந்தால் டிஎன்ஏ டெஸ்ட்க்கு வர வேண்டியதுதானே என்று ஜாய் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications