Joy Criszilda: மாதம்பட்டி ரங்கராஜன் சிக்கிட்டாரு! இந்த எவிடென்ஸை பாருங்க! ஜாய் கிரிஸில்டா பதிவு
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜன் பற்றி தினமும் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கும் ஜாய் கிரிஸில்டா இப்போது தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு மாதம்பட்டி ரங்கராஜன் வசமா சிக்கிட்டாரு, இதற்காகத்தான் அவர் டிஎன்ஏ டெஸ்ட்க்கு வரல என்று ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கவனத்தை பெற்று வருகிறது.
சமையல் கலைஞராகவும், நடிகராகவும், குக் வித் கோமாளி நடுவராகவும் பிரபலம் அடைந்த மாதப்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகார் கோர்ட்டில் விசாரணையில் இருக்கிறது. தன்னை திருமணம் செய்து கர்ப்பமாகி ஏமாற்றி விட்டதாக அந்த புகாரில் ஜாய் தெரிவித்து இருந்தார்.

அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், அந்த திருமணமே கட்டாயத்தின் பேரில் தான் நடந்தது. அதேபோல ஜாய் குழந்தைக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்து அந்த குழந்தை என்னுடையது என்று நிரூபணம் ஆனால் அந்த குழந்தையை ஆயுள் முழுக்க நான் கவனித்துக் கொள்கிறேன் என்று மாதம்பட்டி ரங்கராஜன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து ஹே புருஷா டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க ரெடியா?.. தைரியம் இல்லையா? என்று போஸ்ட்கள் போட்டுக் கொண்டு வருகிறார். அதோடு மாதம்பட்டி ரங்கராஜ் டி.என்.ஏ டெஸ்ட்க்கு பயந்து போய் தலைமறைவாக இருக்கிறார், அவரை ஏதாவது நிகழ்ச்சியில் பார்த்தால் எனக்கு டிஎம் செய்யவும், அவர் பணம் கொடுத்து டெஸ்ட்டை செட் அப் செய்ய நேரம் எடுக்கிறார் போல என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கிடையில் தனக்காக மாதம்பட்டி ரங்கராஜன் ரொமான்ஸ் ஆக பேசிய வீடியோக்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஜாய் வெளியிட்டு வருகிறார். அதிலும் புருஷா 5.0 என்ற பெயர் வைத்து வரைக்கும் வீடியோ வந்துவிட்டது. அடுத்ததாக ஆறாவது வீடியோவும் சீக்கிரமாக வரும் என்று போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று வெளியிட்ட ஒரு பதிவில் தன்னுடைய குழந்தையின் கைவிரல்கள் புகைப்படங்களை பகிர்ந்து மாதாம்பட்டி ரங்கராஜ் போன்ற தன்னுடைய மகன் ராகா ரங்கராஜன் தனது பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து வைத்திருப்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.
அதோடு "அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் டிஎன்ஏ டெஸ்ட் வேண்டும் என்று கேட்டார். மகன் ராகா ரங்கராஜ் அப்பாவுக்கே ஆப்பு வைத்தான். இதைவிட என்ன டிஎன்ஏ ஃப்ரூப் வேண்டும் உங்களுக்கு கணவரே? சிக்கிட்டாரு.. அப்பாவை போன்ற மகனும் கைவிரல்களை வைத்திருக்கிறான், ஒரே ஜீன்" என்று ஜாய் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications