சில வருடங்களுக்கு முன்பு ஜூலிக்காக..சிதற விட்டதை எண்ணி சிரிக்கும் நெட்டிசன்கள்
சென்னை:பாலமேடு ஜல்லிக்கட்டு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்... அந்த ஜல்லிக்கட்டுக்காக ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து போராடிய பல்வேறு நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழக இளைஞர்களின் ஒற்றுமையையும், பலத்தையும் உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்த அந்த நிகழ்வு பலரது கண்முன்னே இன்னும் பசுமையான நினைவாக இருப்பதாகவும், அந்த நாள் திரும்ப வராதா...!!?? என்று ஏங்குவதாகவும் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வீரத் தமிழச்சி
பல மீம்ஸ்கள் ஜல்லிக்கட்டை மீட்ட தமிழக இளைஞர்களின் கலாச்சார தாகத்தையும், ஒற்றுமையையும் நினைவூட்டுவதாக இருந்தாலும், அதே நேரத்தில் அந்த போராட்டத்தில் தன் வித்தியாசமான கூவலால் உலக பேமஸ் ஆனவர்..'வீரத் தமிழச்சி' என்று அழைக்கப்படும் அளவிற்கு பெர்பாமன்ஸ் பண்ணிய ஜூலியின் வீடியோக்களும், அதற்கு அப்போதைய நெட்டிசன்களின் கமெண்டுகளும் கூடவே வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் கொடுத்த கமெண்டுகள் சில
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விட்ட சவுண்டை பார்த்து நமது நெட்டிசன்கள் ஆஹா..!! ஓகோ..!! என்று சில்லறையை எடுத்து சிதற விட்டனர்.ஆனால் தற்போது அந்த கமெண்டுகள் பார்த்தால் அவர்களே தங்களைத் தாங்களே நொந்து கொள்வார்கள் தான் போல..!!??ஜூலியின் பெர்பாமன்சுக்கு அந்த நேரத்தில் நம்ம நெட்டிசன்கள் கொடுத்த கமெண்டுகள் சில. "புலியை முறத்தால் விரட்டியடித்த பெண் என்பார்கள்.. உங்களைப் பார்த்தால் தான் அது உண்மை என்று தோன்றுகிறது" , "வீரத்தமிழச்சி.. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் ரசித்த வீர தமிழச்சி..எத்தனை முறை உன்னை கண்டாலும் சளிக்கவில்லையே..!!" கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

உருக்கமான பீலிங்
, அதுபோல "இவள் தமிழ்நாட்டில் பிறந்ததற்காக தமிழுக்கும், நாட்டிற்கும் பெருமை", "லவ் ஃபீல் எல்லாம் வரணும்னா.. இந்த மாதிரி ஒரு பொண்ண பார்க்கணும்." "வேலு நாச்சியாரை நான் கண்டதில்லை.. உன் உருவத்தில் அவரைப் பார்க்கிறேன்.. வீரத்தமிழச்சி." அதிலும் ஒருத்தரு ரொம்ப ஃபீல் பண்ணி "நீ என் மகளாக பிறக்க எனக்கு இன்னொரு ஜென்மம் வேண்டும், நீ வாழ்க.. உன்னை பெற்ற தாய் தந்தை வாழ்க.. தமிழுக்கு தவமாய் பிறந்த தமிழச்சியே.."ஜூலிக்காக உருகி உருகி கமெண்ட்களை அனுப்பியிருந்தனர்.

ரசிகர்களின் செயல்பாடுகள்
சமூக வலைதள வாசிகள் இந்த ரேஞ்சுக்கு ஃபீல் பண்ற அளவுக்கு பெயர் எடுத்து வைத்திருந்த ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அந்தப் பெயரை தலைகீழாக மாற்றிக் கொண்டார்.தற்பொழுது அவர் என்ன செய்தாலும்.. என்ன போஸ்ட் போட்டாலும்.. அதை கண்டம் பண்ணும் நம்ம நெட்டிசன்கள் அவருக்கு அளித்த ஆதரவை பார்க்கும்பொழுது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நல்ல விஷயங்களையும் நல்லவர்களையும் எப்பொழுதும் ஆதரித்து.. தங்கள் முகம் தெரியாவிட்டாலும், அவர்களை தங்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நெட்டிசன்கள், அவர்களது குணங்களும், நடவடிக்கைகளும் நெகட்டிவாக மாறும்பொழுது அவர்களை தலையில் இருந்து தூக்கி எறிந்து துவம்சம் செய்து விடுவார்கள்..என்பதற்கு ஜூலியும், தற்பொழுது அஸ்வினும் விதிவிலக்கல்ல என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications