நெட்பிளிக்ஸ் புதிய வலைத் தொடரில் கஜோல்
மும்பை: அது ஒரு கனவுக் காலம்.. அந்த உதடு எப்ப அசையும்.. அந்த கண்ணு எப்ப விரியும்.. அந்த மூக்கு எப்ப புடைக்கும் என்று பார்த்துப் பார்த்து ரசித்தனர் ரசிகர்கள்... அந்த பெருமைக்குரியவர் கஜோல். அத்தனை அழகு மட்டுமல்ல, நவரசங்களையும் டக் டக்கென மாற்றி மாற்றி முகத்தில் காட்டும் சில்மிஷ நாயகி. ஜோதிகாவெல்லாம் கஜோலுக்கு முன்பு ஜுஜுபிதான்.
கஜோல் இந்தித் திரையுலகை ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரை ரசிகர்களின் மனதிலும் வியாபித்து நின்றிருந்தார். அதிலும் தமிழில் இவருக்கு நிறைய ரசிகர்கள். அவர் ஆடிப் பாடிய அந்த ஊ லலலால்லா பாடலை மறக்க முடியுமா.. அன்பெனும் மழையிலே அகிலங்கள் நனையுமே பாடலும் மறக்க முடியுமா.
இப்போது கஜோல் பார்த்துப் பார்த்து நடித்து வருகிறார். அவரைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கும், குடும்பத்துக்குமே முக்கியத்துவம் கொடுக்கிறார். இதற்காக சில காலம் நடிக்காமல் கூட இருந்தார். இப்போது செலக்டிவாக நடிக்கிறார். தமிழில் கூட வேலையில்லா பட்டதாரி பார்ட் 2வில் நடித்தார். அடுத்து அவர் வெப் சீரிஸில் காலடி எடுத்து வைக்கிறாராம்.

வெப்தொடர் திரிபங்கா
திரிபங்கா என்பதுதான் கஜோல் நடிக்கப் போகும் வெப் தொடரின் பெயராம். இதில் மிதிலா பல்கர், தன்வி ஆஸ்மி, குனால் ராய் கபூர் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். ரேணுகா சஹானேதான் இயக்கப் போகிறார். இவர் ஒரு காலத்தில் டிவியில் பிரபலமான நடிகை என்பது நினைவிருக்கலாம். கஜோலின் கணவர் அஜ்ய தேவ்கன் இணை தயாரிப்பாளராக பணியாற்றப் போகிறார்.

குடும்பக் கதை
ஒரு குடும்பக் கதைதான் இது. அதாவது 3 தலைமுறை குடும்பக் கதை. ஸோ ஒட்டுமொத்த குடும்ப ரசிகர்களையும் ஈர்க்கும் என்ற நம்பிக்கையில் சீரிஸ் குழுவினர் உள்ளனர். நெட்பிலிக்ஸில் இது வரவுள்ளது. உலகம் முழுவதும் இந்த தொடர் போகப் போவது மகிழ்ச்சி தருவதாக ரேணுகா சஹானே கூறியுள்ளார்.

நேற்றும் இன்றும்
மும்பையைக் களமாக கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். 80களில் ஆரம்பித்து இன்றைய காலம் வரை இதில் விவரிக்கப்பட உள்ளதாம். குடும்பங்கள் அன்றும் நேற்றும் இன்றும் என்ற கோணத்தில் இதன் கதைப் போக்கு இருக்குமாம்.

எப்போதும் ரசிக்கலாம்
கஜோலை ஹீரோயினாப் பார்த்தாச்சு.. வில்லியா பார்த்தாச்சு.. காமெடியிலும் பார்த்தாச்சு.. இவ்வளவு ஏன் விளம்பரங்களில் கூட பார்த்தாச்சு அவரின் ரொமான்ஸும் ரசிச்சாச்சு... இப்ப வெப் சீரிஸில் ரசிக்கப் போறோம் இளமை மாறாத அழகு கஜோலை.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications