டைட்டில் ஜெயித்த எனக்கு சாக்லேட்.. ஆனா, சிவகார்த்திகேயனுக்கு..! கலக்கப்போவது யாரு வெங்கடேஷ் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரையில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக கலந்து கொண்டு கலக்கப்போவது யாரு சீசன் இரண்டில் டைட்டில் வெற்றி பெற்ற வெங்கடேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தான் வெற்றி பெற்ற போது தனக்கு சாக்லேட் மட்டும் கொடுத்திருந்தார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் வெற்றி பெற்ற போது அவருக்கு பரிசு தொகை கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றாலே அதைத்தொடர்ந்து அதே போல அடுத்தடுத்த சேனல்களிலும் நிகழ்ச்சிகள் தொடங்கிவிடும். அது போல தான் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்களின் ஃபேவரைட் நிகழ்ச்சிகளில் அந்த நிகழ்ச்சியும் இடம் பிடித்திருக்கும். அதுபோல அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

Vijay TV Sivakarthikeyan

அதில் அசத்தப்போவது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். அதில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட வெங்கடேஷ் இந்த நிகழ்ச்சியின் மூலம் நன்கு பிரபலமாகி இருந்தார். அவர் பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் பேசுகையில், எல்லோருக்கும் என்னை தொலைக்காட்சி மூலமாகத்தான் தெரியும். நாங்க காமெடி பாய்ஸ் என்ற ஸ்டேஜ் காமெடி பண்ணிட்டு இருந்தோம். அதன் மூலமாகத்தான் ஸ்டாண்டட் காமெடி என்கிற பயணம் ஆரம்பித்தது. ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டதே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். ஒரு சேனலில் இருக்கிற ப்ரோக்ராம் அப்படியே இன்னொரு சேனலில் காப்பி அடிச்சு அதுல சக்ஸஸ் ஆனதும் எங்களுடைய நிகழ்ச்சி மட்டும்தான்.

கலக்கப்போவது யாரு சீசன் 2வில் டைட்டில் வெற்றி பெற்றேன். எனக்கு அப்போ சாக்லேட் பேக் தான் பரிசா கிடைச்சது. ஆனா அந்த நிகழ்ச்சி மூலமாக தான் நான் நல்லா ரிஜிஸ்டர் ஆனேன். விஜய் டிவியில் ஒருவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் பங்கு பெரிய அளவில் இருக்கிறது. விஜய் டிவியில் இருந்து பலர் பெரிய இடத்திற்கு வந்துட்டாங்க.

எனக்கு அடுத்த சீசனில் தான் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு டைட்டில் வின் பண்ணுனாரு‌. அவருக்கு பரிசு தொகை கிடைத்தது. அதற்குப் பிறகு நான் விளம்பரத்திற்கு போயிட்டேன். விளம்பரத்தில் பிஸியாக வலம் வரதுனால என்னால சினிமாவில் நடிக்க தனியா நேரம் செலவிட முடியல. அது மட்டும் அல்லாமல் விளம்பரங்களில் நடித்து நான் இரண்டு நேஷனல் அவார்டு வாங்கி இருக்கிறேன்.

சிவகார்த்திகேயன் கொடுத்த பிரம்மாண்ட விருந்து..காரணம் இதுதானா? குவியும் வாழ்த்துக்கள்
நான் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னாடியே இந்த துறையில் பயணிக்கிறேன். ஆனாலும் என்னுடைய நண்பர்கள் பலர் இவங்கதான் பிசியா இருக்காங்களே இவங்களை கூப்பிட்டா அதிகமா சம்பளம் கேட்பாங்க என்று என்னை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அதனாலயே எனக்கு சினிமாவில் அதிகமான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் மக்கள் எதுவும் தெரியாமல் நீ எல்லாம் கூத்தாடி பையன் தானே என்று டக்குனு பேசிடுவாங்க அவர்களை பற்றி என்னென்னு தெரியாம பேசுவாங்க. ஆனால் நான் ஒரு வார்த்தை விடுறதுக்கு அவ்வளவு யோசிப்பேன் என்று அந்த பேட்டியில் வெங்கடேஷ் பேசியிருக்கிறார்.

சின்னத்திரையில் இருந்து பலர் வெள்ளித்திரையில் கலக்கில் கொண்டிருக்கிறார்கள். அதில் சிவகார்த்திகேயன் முக்கிய நபராக இருக்கிறார். ஆரம்பத்தில் போட்டியாளராக விஜய் டிவியில் கலந்து கொண்டு பிறகு தொகுப்பாளராக மாறி இருந்தார். அதிலிருந்து சினிமாவில் கதாநாயகனான அறிமுகமானார். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான மற்றும் கிராமப்புற கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது மிரட்டலான காட்சிகளிலும் நடித்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+