சிவகார்த்திகேயன் கொடுத்த பிரம்மாண்ட விருந்து..காரணம் இதுதானா? குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் கமிட் ஆன பராசக்தி திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளை சிவகார்த்திகேயன் எளிமையாக கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு பாராட்டு பெற்று வருகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரையில் அடி எடுத்து வைத்த ஒரு சிலர் நடிகர்கள் மட்டும்தான் கதாநாயகனாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் சிவகார்த்திகேயனும் ஒருவர். ஆரம்பத்தில் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு பிறகு அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் மாறி இருந்தார்.

அதை தொடர்ந்து சில வருடங்களிலேயே வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடங்களில் அறிமுகமாகி பிறகு கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கிவிட்டார். ஆரம்பத்தில் காமெடியான மற்றும் குடும்பபாங்கான கேரக்டரில் நடித்துக் கொண்ட சிவகார்த்திகேயன் இப்போது கெத்தான மற்றும் ரிஸ்க்கான கேரக்டரிலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் குடும்பத்தில் எளிமையான பங்க்ஷன்.. குவிந்த மக்கள்.. குவியும் வாழ்த்துக்கள்
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தது. எதிர்பார்க்காத வசூல் சாதனையை செய்து சிவகார்த்திகேயனுக்கு பெரும் பெயரையும் புகழையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் குறித்த விமர்சனங்களும் இணையத்தில் இருந்து கொண்டே இருக்கிறது.

சிவகார்த்திகேயன் எது பேசினாலும் அதே ட்ரோல் செய்து அவரை திட்டி வருபவர்களும் இருக்கிறார்கள். அதுபோல சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்களும் இருக்கிறார்கள். பொதுவாக ஒரு இடத்தில் இருந்து ஒருவர் முன்னேறுகிறார் என்றால் அதை ஊக்கப்படுத்துபவர்கள் ஒரு சிலர் மட்டும்தான் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அவர் மட்டும் போய்விட்டாரே என்ற ஆதங்கத்திலேயே திட்டி தீர்த்து வருவதை பார்க்க முடியும். இது பக்கத்து வீட்டில் மட்டுமல்ல எந்த பிரபலங்களாக இருந்தாலும் இதே கஷ்டங்களை சந்தித்து இருப்பார்கள்.
அதுபோல சிவகார்த்திகேயனுக்கு அதிகமான நெகட்டிவ் வந்தாலும் அதையெல்லாம் அவர் கண்டு கொள்வதே கிடையாது. அடிக்கடி பிரஸ் மீட்டிங்கிலும் சிறப்பு விருந்தினராக போகும் நிகழ்ச்சிகளிலும் தன்னை பற்றி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் கமிட்டான பராசக்தி என்ற திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது. அந்த திரைப்பட போஸ்டர் வெளியானது தான் தாமதம் பிரச்சனைகளும் தொடங்கிவிட்டது.
தோற்றுப்போன முதல் காதல்.. விஜய் டிவியில் இருக்கும் போது நடந்த சம்பவம்.. மனம் திறந்த சிவகார்த்திகேயன்
பராசக்தி திரைப்படம் ஏற்கனவே நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்டது. அதே தலைப்பில் இன்னொரு படம் எடுக்கக் கூடாது என்று சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்தினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதுபோல பராசக்தி என்ற பெயரில் விஜய் ஆண்டனியும் படம் எடுப்பதற்காக அப்ரூவல் வாங்கி விட்டேன் என்று அவரும் ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார்.

அதனால் பராசக்தி யாருக்கு என்ற கேள்விகளும் எழுந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு பராசக்தி திரைப்படம் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து நடிகர் சிவகார்த்திகேயன் அந்த திரைப்பட பிரபலங்கள் எல்லோருக்கும் மதிய உணவு வழங்கி இருக்கிறார். அப்போது எடுத்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபோல சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications