சிவகார்த்திகேயன் குடும்பத்தில் எளிமையான பங்க்ஷன்.. குவிந்த மக்கள்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மூன்றாவது மகன் பவனுக்கு காது குத்தும் விழாவை திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவீழிமிழலையில் உள்ள குலதெய்வ கோவிலில் எளிமையாக நடத்தி இருக்கிறார். அங்கு சிவகார்த்திகேயனை பார்ப்பதற்காக ஊர்மக்கள் பலர் திரண்டு இருக்கிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் பல நடிகர்கள் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். ஆனால் இப்போது மாஸ் ஹீரோவாக மாறி இருக்கிறார்.

தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் அவரோடு இணைந்து நடித்த சிவகார்த்திகேயன் அதற்குப் பிறகு சூரி மற்றும் சிவகார்த்திகேயன் காம்போவில் ஒரு சில காமெடி படங்கள் கிட் அடித்தது. பல நடிகர்கள் சினிமாவில் சாதித்து அதற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் இணைந்து இருக்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருக்கும் போது ஆர்த்தி என்பவரை 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
ஆர்த்தி சிவகார்த்திகேயனின் முறை மாமன் பொண்ணு தான். குடும்பத்தினரின் விருப்பப்படி ஆர்த்தியை திருமணம் செய்து கொண்ட சிவகார்த்திகேயன் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். அதில் அவருடைய மூத்த மகள் ஆராதனா உடன் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா திரைப்படத்தின் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடியிருந்தார்.

ஆர்த்தியை தொடர்ந்து முகன் தாஸ் என்ற மகன் பிறந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பவன் என்று மூன்றாவது மகன் பிறந்தான். ஏற்கனவே தன்னுடைய குடும்ப புகைப்படத்தை ஒவ்வொரு பண்டிகையின் போதும் வெளியிட்டு இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய மூன்றாவது மகனுக்கு சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் திருவீழிமிழலையில் உள்ள குலதெய்வ கோவிலில் எளிமையாக காதணி விழா நடத்தி இருக்கிறார்.
மகா மாரியம்மன் என்ற குலதெய்வ கோவிலில் இன்று சிவகார்த்திகேயன் தன்னுடைய உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சூழ தன்னுடைய மூன்றாவது மகனுக்கு காதணி விழா நடந்திருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் குலதெய்வ கோவிலுக்கு வந்திருக்கிறார் என்ற செய்தியை கேட்டதும் பக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் எல்லாம் அந்த கோவிலுக்கு வந்திருக்கிறார்கள்.

அவர்களோடு சிவகார்த்திகேயன் புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார்கள். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிறகு தொகுப்பாளராக மாறி மெரினா என்ற திரைப்படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் பல வெற்றி படங்களையும் ஒரு சில தோல்வி படங்களையும் கொடுத்திருக்கிறார்.
நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்து வெளியான அமரன் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஹிட் கொடுத்தது. இந்த படம் கொடுத்த வரவேற்பு காரணமாக இப்போது சுதா கெங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 25 வது படமான பராசக்தி என்ற படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். என்னதான் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் தன்னுடைய குடும்பத்தினரோடு சிவகார்த்திகேயன் கோவிலுக்கு சென்று வருவதையும் வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications