சம்பந்தி கையை பிடித்து கண்கலங்கிய ஜெயராம்.. மகன் திருமணத்திற்கு முன்பு நெகிழ்ந்து சொன்ன வார்த்தை
சென்னை: நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரணியின் திருமணம் நாளை மறுநாள் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இவர்களது பிரீவெட்டிங் கொண்டாட்டத்தின் போது நடிகர் ஜெயராம் தன்னுடைய சம்மந்தியின் கைகளை பிடித்து கண்கலங்க பேசி இருக்கிறார்.
மலையாள நடிகரான ஜெயராம் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாமல் காமெடி கலந்த ஹீரோவாக பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

அதுபோல கடந்த மே மாதம் தான் ஜெயராமின் மகள் மாளவிகா திருமணம் நடந்து முடிந்த நிலையில் டிசம்பர் 8ஆம் தேதி ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமுக்கும் அவர் காதலித்து வந்த தாரணிக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த திருமண பங்க்ஷன் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. திருமணத்திற்கு முந்தைய பிரீ வெட்டிங் கொண்டாட்டம் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமண வாழ்க்கையில் ஒன்றிணைய உள்ள காளிதாஸ் தாரணி தம்பதியை பலர் வாழ்த்தி உள்ளனர்.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பே முதல்வர் முக ஸ்டாலின், ரஜினிகாந்த், இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்ட பல பிரபலங்களும் ஜெயராம் மற்றும் அவருடைய மனைவி நேரில் சென்று அழைப்பிதழ் வைத்து இருந்தனர். அதுபோல தாரணி-காளிதாஸ் ஜெயராமன், திருமணம் குருவாயூரில் டிசம்பர் எட்டாம் தேதி அன்று நடைபெற உள்ளது.
தாரணி சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு முன்பான ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் ஜெயராம் மற்றும் தாரணி குடும்பத்தினர் சார்பில் நடைபெற்றிருக்கிறது. ஜெயராமின் மகன் காளிதாசன் தன்னுடைய அப்பாவை போல சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்பவும் இளமையா இருக்க காரணம் இதுதான்! அந்த ஹேர் ஸ்டைல் ரகசியம்.. மனம் திறந்த ராம்கி
தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவிற்கு இவருக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை. கடைசியாக தனுஷ் நடித்த ராயன் திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாரணி காலேஜ் படிக்கும் போது இருந்தே மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். பேஷன் ஷோக்கள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா முதல் ரன்னர் ஆப் போன்ற பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று நடந்த பங்க்ஷனில் கலந்து கொண்ட போது ஜெயராம் தாரணியின் அப்பாவிடம் சம்பந்தி தாரணி எனக்கு மருமகள் அல்ல, அவள் எங்கள் வீட்டு மகள் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications