Kalki OTT: இரண்டு ஓடிடி தளத்தில் வெளியானது “கல்கி 2898 ஏடி”.. அதுவும் 5 மொழிகளிலும் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்த "கல்கி 2898 ஏடி" திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.அதிலும் ஒரே நாளில் netflix மற்றும் அமேசான் பிரைம் என்ற இரண்டு ஓடிடி தளத்திலும் வெளியாகி இருக்கிறது. திரையரங்கில் இந்த திரைப்படத்தை மிஸ் பண்ணிய ரசிகர்கள் வீட்டிலேயே இனி பார்த்துக் கொள்ளலாம்.

கல்கி 2898 ஏடி திரைப்படம் பிரம்மாண்டமான பொருள் செலவில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திரைப்படம் கடந்த ஜூன் 27ஆம் தேதி நெடுநாள் எதிர்பார்ப்புக்கு பிறகு வெளியானது. இந்த திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருக்கிறார். மகாபாரத யுத்தமான குருஷேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் கதையாக இந்த திரைப்படம் இருக்கிறது.

Television OTT

கல்கி, சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 180 கோடி வசூலுடன் ஆட்டத்தை தொடங்கி பரபரப்பு ஏற்படுத்தியது.

அதோடு கல்கி திரைப்படம் இதுவரைக்கும் உலகெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. படத்தின் இரண்டாவது பாகத்தை நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Television OTT

கல்வி 2898 ஏடி திரைப்படத்தில் இந்தி மொழி ஓடிடி உரிமையை netflix நிறுவனம் வாங்கியுள்ளது. அதுபோல தென்னிந்திய மொழி உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் வாங்கி இருக்கிறது. இந்த நிலையில் அமேசான் பிரைமில் "கல்கி 2898 ஏடி" திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+