பிக்பாஸில் முதல்முறையாக துப்பாக்கிச்சூடு...கமல் எதற்காக சொன்னார்
சென்னை: கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் உள்குத்தோடு பேசுவார் என்பது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டியாளர்களையும் கலங்க வைத்துக்கொண்டிருக்கும் கமல்ஹாசன் இன்றைய ப்ரோமோவில் கலக்கியிருக்கிறார்.
அபிஷேக் பார்த்து வார்த்தைகளால் வம்பிழுக்கும் கமல்ஹாசனை பார்த்ததும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடங்கிவிட்டார் ஆண்டவர்
துப்பாக்கி சூடு பற்றியும், தூங்காதே தம்பி தூங்காதே என இவர் கூறிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அபிஷேக் முழித்துக் கொண்டிருக்கும்போது ரசிகர்கள் அபிஷேக்கை கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த நாளுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர் காரணம் அபிஷேக் பற்றி கமலஹாசன் என்ன சொல்லப் போகிறாரோ என்று தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம்தான்.

யூடியூபர் அபிஷேக்
இந்த சீசனில் பல போட்டியாளர்கள் புதுமுகங்களாக இருந்தாலும் யூடியூபர் அபிஷேக் பலருக்கும் பரிச்சயமானவர் தான். யூடியூப் சேனலில் தன்னை ஒரு சினிமா பையன் என்று தானே அறிமுகம் செய்துகொண்டு சினிமா பிரபலங்களை பேட்டி கண்டு அவர்களின் வாயிலிருந்து வார்த்தை களை பிடுங்குவதில் வல்லவர். இவர் பேட்டி எடுத்த பிறகு ஏன்டா இவருக்கு பேட்டி கொடுத்தோம் என்று நடிகர்கள் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இவர் பேசும் வார்த்தைகளை கேட்டதும் நெட்டிசன்கள் ஒவ்வொரு வீடியோவுக்கும் மலை போல கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

ரிவ்யூ வீடியோ
அவர் சினிமா பிரபலங்களை மட்டுமல்லாமல் ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி நன்றாகவே தெரிந்து கொண்டவர் போல ரிவ்யூ கொடுக்கிறேன் என்று ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களை பற்றி கிழித்து எடுத்துக் கொண்டிருப்பார். போட்டியாளர்களை மட்டுமல்லாமல் தொகுப்பாளராக களமிறங்கியிருக்கும் கமல்ஹாசனையும் இவர் விட்டு வைக்கவில்லை. மேடை நிகழ்ச்சி ஒன்றில் தான் நன்றாகவே அனைத்தையும் தெரிந்தவர் போல இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி பேசியது இவரே எதிர்பார்க்காத இந்த நேரத்தில் இது வைரலாகி வருகிறது.

விசாரணை தொடங்கிடுச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் ஒருவாரம் செய்யும் கலவரங்களை சனிக்கிழமை பட்டியலிட்டும் குறும்படம் காட்டியும் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் ஷாக் கொடுக்கும் விதத்தில் கமல்ஹாசன் செய்து கொண்டிருக்கிறார். இந்த சீசனில் இந்த நாளுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருந்த நேரத்தில் இன்றைய ப்ரோமோ லேட்டாகத்தான் வெளியானது. அதில் அவர் முதலில் பிரியங்காவை விசாரிக்கத் தொடங்கி அதற்குப்பிறகு அண்ணாச்சியை வம்பு இழுத்து விட்டு கடைசியாக அபிஷேக்கை பற்றி தன் கருத்தை தொடங்கியிருக்கிறார்.

பாட்டுப்பாடி கலாய்ப்பு
கமல்ஹாசனை பற்றி அபிஷேக் பேசிய வீடியோ வைரலாக வந்த நிலையில் எப்படியும் அதை பற்றி கேட்பார்...எப்படி கேட்பார் என்று பல ட்ரோல் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இவர் அந்த வீடியோவை பற்றி எதுவும் பேசாமல் இவர் தூங்கும்போது துப்பாக்கி சத்தம் கேட்டு இவரை எழுப்பி விட்டதை வைத்து அவரை கலாய்க்க தொடங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கடைசியில் அவரை பார்த்து தூங்காதே தம்பி தூங்காதே என்று பாட்டு பாடியிருக்கிறார். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் இதற்காகவே இன்று எபிசோடை பார்த்துட வேண்டியது தான் எனக் கூறி வருகின்றனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications