கனா காணும் காலங்கள் சீரியல் "ஜோ” திடீரென வெளியிட்ட புகைப்படம்... இப்படி மாறிவிட்டாரே?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் "ஜோ"வாக நடித்த யுதன் பாலாஜி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் யுதன் பாலாஜி சமீபத்தில் செய்யும் வேலை மற்றும் அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது

பள்ளி பருவ வாழ்க்கை
90ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத சீரியல் மற்றும் இப்போதும் நினைத்து பார்க்கும் சீரியல் என்று சொன்னாலே டக் என்று நினைவிற்கு வருவது விஜய் டிவியில் ஒளிபரப்பான கனாக்காணும் காலங்கள் சீரியல் தான். இந்த சீரியல் 2006 முதல் 2009 வரை ஒளிபரப்பான பள்ளி பருவ வாழ்க்கையை சென்டிமென்ட், காதல், குடும்பம், நண்பர்கள், கலாட்டா என எல்லா எமோஷன்களையும் பேசி இருக்கும் இந்த சீரியல்கள் பலருடைய வாழ்க்கையோடு ஒன்று போயிருந்தது. குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த ஃபேவரைட் சீரியலாக வந்தது. அதனாலேயே இந்த சீரியலின் நடிகர்களும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தனர்.

ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த நடிகர்களின் பெயர்களை விடவும் அந்த சீரியலின் கதாபாத்திரங்களின் பெயர்கள் தான் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. இப்பவும் மனதில் நின்று வருகிறது. ராகவி, பாலா, வினித், பாண்டி, க்ரிஷ், பச்சை, ரிஷி, ஜோ, உன்னி, சங்கவி, ஜீவா என இந்த சீரியலில் பல கேரக்டர்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. அதில் ஒருவராக இருப்பவர்தான் ஜோ கேரக்டரில் நடித்த யுதன் பாலாஜி. இவர் இந்த சீரியலில் வெற்றியை தொடர்ந்து பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், நகர்வலம் என்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

பட்டாளம் திரைப்படம்
ரசிகர்களை அதிகமாக கவர்ந்த கனாக்காணும் காலங்கள் சீரியலின் முதல் பாகம் முடிவடைந்ததும் அந்த சீரியலை அதிகமானோர் மிஸ் பண்ணிய காரணத்தினால் தான் அதில் தொடர்ந்து இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல இதில் நடித்த பல பிரபலங்கள் ஆபீஸ் சீரியலிலும் தொடர்ந்து நடித்தனர். அது மட்டும் அல்லாமல் இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் பலர் திரைப்படங்களிலும் நடித்தனர். குறிப்பாக பட்டாளம் திரைப்படத்தில் இதே சீரியலில் இருந்த கேரக்டரின் அடிப்படையிலே நடித்திருந்தனர். இந்த சீரியலில் வெற்றியைப் போலவே பட்டாளம் திரைப்படமும் அனைவராலும் பாராட்டப்பட்டது. கனா காணும் காலங்கள் சீரியலிலும், பட்டாளம் சீரியலிலும் ஜோ கேரக்டரில் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த யுதன் பாலாஜி பட்டாளம் திரைப்படத்தில் கடைசியாக இறப்பது போன்று சீன் இருக்கும்

தற்போதைய நிலை
அதைத்தொடர்ந்து அவர் காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தில் கல்லூரியில் படிப்பது போன்ற சீன்கள் இருக்கும். அவரை விட வயதில் சீனியர் பெண்ணை காதலித்து வருவார். ஆனால் இந்த திரைப்படத்திலும் கடைசியில் இவர் இறந்து விடுவார். அதற்கு பிறகு நகர்வலம் என்ற திரைப்படத்தில் மட்டும் நடித்துவிட்டு கடந்த 2016ஆம் ஆண்டு பிரீத்தி என்பவரை திருமணம் செய்து அதன் பின் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அது மட்டும் அல்லாமல் அவர் தற்போது தமிழ்நாட்டில் இல்லையாம் ஆஸ்திரேலியாவில் இப்போது செட்டில் ஆகிவிட்டாராம் இந்த நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஆஸ்டிரேலியாவில் இருந்தபடியே இவர் சில புகைப்படங்களை வலைதளத்தில் பதிவிடவே இவரை பார்த்து பல வருடம் ஆகிவிட்டதே எப்படி மாறிவிட்டார் என்று இவருடைய ரசிகர்கள் இவரை குறித்து பதிவு கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
-
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications