பிரம்மாண்டமாக நடந்த கனா காணும் காலங்கள் நடிகர்கள் திருமணம்..கடைசியில் டிவிஸ்ட்..கண் கலங்கிய தீபிகா
சென்னை: டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் சீரியலில் அபியாக நடிக்கும் தீபிகா மற்றும் கௌதமாக நடிக்கும் ராஜா வெற்றி பிரபு திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிவடைந்தது.
அவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.
தாலி கட்டும் நேரத்தில் தீபிகா கண்கலங்கி அழுத புகைப்படங்கள் பரவி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் வெற்றியைத் தொடர்ந்து தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் புது கனா காணும் காலங்கள் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே பிரபலம் அடைந்திருக்கின்றனர்.
அதில் அபி கேரக்டரில் நடித்து வரும் தீபிகாவும், கௌதம் கேரக்டரில் நடித்து வரும் ராஜா வெற்றி பிரபுவும் அண்மையில் தான் திருமணத்தை அறிவித்திருந்தனர். அதில் தன்னுடைய ஆறு வருட நண்பனை தான் திருமணம் செய்ய போவதாகவும் இது அரேஞ்ச் மேரேஜ் என்றும் தீபிகா தெரிவித்திருந்தார். ஆனால் காதலன் யார் என்பதைப் பற்றி தீபிகா தெரிவிக்கவில்லை.

ஆனாலும் தன்னுடைய சமூக வலைதளத்தில் இவர் தன்னுடைய பெயருக்கு பின்னால் V என்ற இன்சியல் வைத்திருந்ததை வைத்தும்,, சில கெஸ்கலை வைத்தும் ரசிகர்கள் அது ராஜா வெற்றி பிரபுதானா என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தான் தன்னுடைய எங்கேஜ்மெண்டில் தான் ராஜா வெற்றி தான் கல்யாணம் பண்ணிக்க போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து தன்னுடைய ஒவ்வொரு பங்க்ஷன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் திருமணத்தில் தாலி கட்டும் போது தீபிகா மகிழ்ச்சியில் கண் கலங்கி இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications