Kanmani Serial: சூப்பர் சீன்ப்பா... அழறதா? பாராட்டறதா?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் பெரிய மனிதர் சாவு என்றால் அந்த வீடு எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக காண்பித்து இருக்கிறார்கள். செலவை பற்றி கவலைப்படாமல் காட்சிகளை ரொம்ப இயற்கையாக எடுத்திருந்தார்கள்.
கண்ணனின் மாமா தர்மதுரை ஹார்ட் அட்டாக்கில் இறந்து விடுகிறார். பெரிய மனிதர் வீட்டு சாவு என்றால் எப்படி கூட்டம் மாலையுடன் வந்து சேருமோ, பாடை செய்வது பறை கொட்டுவது என்று சாவு வீட்டு மூடை கொண்டு வந்து நம்மையும் அதற்குள் இழுத்துவிடுகிறார்கள்.
பள்ளி வழக்கம் போல நடக்கவில்லை,இப்படி எதெது காலாகாலத்தில் நடக்க வேண்டுமோ அத்தனையும் ஸ்தம்பித்து நின்றுவிடுகிறது. உண்மையில் கிராமத்தில் இந்த மாதிரி மனிதர்களை சம்பாதிப்பது என்பது அபூர்வம்.

இத்தனை பேருமா
தர்மதுரை ஐயாவுக்கு உடம்பு சரியில்லாத மாதிரி சோர்வா பேசறார்.கையை வலிக்குதுன்னு தடவி விட்டுக்கறார்.என்றும் இல்லாத திருநாளாக பகலில் அசதியா இருக்கு தூங்க போறேன்னு சொல்றார். பொண்டாட்டி நான் உங்க கூட இருக்கேன்னு சொல்ல வேணாமா? பொண்ணு கீழ விழுந்து லேசா தசை பிசகிருச்சு, இதை காமிக்க காரில் குடும்பமே திரண்டு ஆஸ்பத்திரிக்கு போறாங்க. இது எந்த வீட்டில் நடக்கும்னு தெரியலை.

காமிக்குது சகுனம்
புருஷன் தர்மதுரையிடம் சொல்லிட்டு, விஜயலட்சுமி அம்மா காரில் ஏறப்போக கொண்டையில் இருந்த மல்லிகைப் பூ கீழே விழுந்து சகுனம் காமிக்குது. அப்போது கூட, விஜயலட்சுமி பூ விழுந்துருச்சு பாருன்னு சொல்லி எடுத்து தர்றார். அப்போதாவது சுதாரிச்சுக்கிட்டு விஜயலட்சுமி அம்மா நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க.நான் வீட்டில் அப்பா கூட இருக்கேன்னு சொல்ல கூடாதா?

கதிரேசனுடன் தனியாக
கதிரேசன், முத்துவுக்கு வாங்கின நகைகளைத் திருடி தனது வைப்பட்டியிடம் கொடுத்து இருப்பதை அறிந்த தர்மதுரை, கதிரேசனிடம் தனியாக பேசணும்னு கூப்பிடும் போதே, இவருக்கு உயிர் இவ்வளவுதான்னு நினைப்பு வந்து நெஞ்சை வாட்டுது. இருவருக்கும் வாக்குவாதம் நடக்க ,கதிரசன் தர்மதுரையை தள்ளிவிட, அவருக்கு அட்டாக் வந்துருது.கதிரேசா அந்த மாத்திரையை எடுத்து கொடுன்னு கெஞ்சறார்.

தனி ஒருவர்
ஜாமீன் வீட்டில் தனியாக ஒருவர் வீட்டில் இருந்துவிடக் கூடாது.வீட்டில் இருப்பவர்களே தங்களுக்கு எதிரிகளாக இருக்கக் கூடும். இப்படித்தான் கதிரேசன் தர்மதுரைக்கு மாத்திரை எடுத்து கொடுக்காமல் விட, தர்மதுரை இறந்துடறார். தர்மதுரை தூங்குவது போல அவரை செட் செய்துட்டு வந்துடறான் கதிரேசன்.விளைவு இறந்து பல மணி நேரமாகியும் அவர் தூங்கறார்னே நினைச்சுகிட்டு இருக்காங்க விஜயலட்சுமி.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications