சினேகனின் "காதல் கவிதையால்" தூக்கத்தை தொலைத்த கன்னிகா! பண்றதையும் பண்ணிட்டு முழிக்கறத பாருங்க
சென்னை: சினேகன்- கன்னிகா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் இன்றுடன் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் தனது இரு குழந்தைகள் செய்யும் சேட்டை குறித்து கன்னிகா வெளியிட்டுள்ளார்.
சினேகன், கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதி, கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சென்னை, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பாடலாசிரியர் சினேகன், தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடந்தது.
கன்னிகா, சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு தொடரில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தேவராட்டம், ராஜவம்சம் படங்களிலும் பிரதான வேடங்களில் நடித்துள்ளார். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
இதுகுறித்து சினேகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது. தாயே எந்தன் மகளாகவும்... மகளே எந்தன் தாயாகவும் இரு தேவதைகள் பிறந்து இருக்கிறார்கள்" என அறிவித்திருந்தார்.
இதையடுத்து தனது தேவதைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த சினேகன், சில தினங்கள் கழித்து கமல்ஹாசன் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றார். அங்கு அவரிடம் குழந்தைகளை காட்டி ஆசி பெற்றனர். குழந்தைகளுக்கு தங்க வளையல் அணிவித்தார் கமல்ஹாசன்.
பின்னர் இரு குழந்தைகளுக்கும் பெயர் வைக்க சொன்ன போது ஒரு குழந்தைக்கு காதல், இன்னொரு குழந்தைக்கு கவிதை என பெயர் சூட்டினார். இதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோவையும் சினேகனும் கன்னிகாவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.
அதில் காதலர் தினத்தில் எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையலோடு "காதல் கன்னிகா சினேகன்" என்ற பெயரையும், "கவிதை கன்னிகா சினேகன்" என்ற பெயரையும் அணிவித்து வாழ்த்திய நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்மபூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள் என்று தெரிவித்திருந்தனர்.
பொதுவாக குழந்தை பிறந்த வீட்டில் வேலை இருந்து கொண்டே இருக்கும் என்பார்கள். அது போல் குழந்தையை பெற்ற தாய்க்கு உண்பதற்கும், உறங்குவதற்கும் நேரம் இருக்காது என்பார்கள். அந்த வகையில் கன்னிகா ஒரு இன்ஸ்டா போஸ்ட்டை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் வடிவேல் காமெடியை போட்டு தான் உணவு உண்பதற்கு காலதாமதம் ஆவதாக வீடியோ போட்டிருந்தார். அது சிரிப்பை வரவழைத்தது. ஒரு மனுசன் காலையில எத்தனை மணிக்கு சாப்பிடுவான், நான் 12.30 மணிக்கு சாப்பிடுகிறேன்" என்ற போது கன்னிகா பழங்களை சாப்பிடும் போது 12.30 மணி என நேரத்தை காட்டுகிறார்.
இப்படியே அந்த காமெடியில் அப்ப மதியான சாப்பாடு 4.30 மணிக்கு, அப்ப ராத்திரி, விடிஞ்சிருங்க! அப்ப தூக்கம், அட நீங்க வேற சாப்பிட்டு ஏப்பம் விடுவதும் சேவல் கூவுறதும் ஒரே கோரஸாக இருக்கும். இந்த அளவுக்கு உங்களை கொடுமைப்படுத்துறது யாருங்க என அந்த காமெடி முடியும். அப்போது கன்னிகா கையில் இரட்டை குழந்தைகளை வைத்துக் கொண்டு இவங்க தான் என சொல்வது போல் இருக்கும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications