Bigg Boss Hindi 18 winner: இந்த பிரபலம் தான்.. பரிசுத்தொகை இவ்வளவா? அப்போ ஸ்ருதிகா வெளியேற்றம் இதனால் தானா?
சென்னை: பிக் பாஸ் ஹிந்தி 18வது சீசனில் டைட்டில் வின்னர் ஆக கரண் வீர் தேர்வாகி இருக்கிறார். அவருக்கு எவ்வளவு பரிசு தொகை கிடைத்தது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுபோல ரன்னராக விவியன் டிசேனா தேர்வாகி இருக்கிறார். இவர்களுடைய வெற்றி அறிவித்தபோது ஸ்ருதிகா எமோஷனலாக இருந்தார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஒளிபரப்பானது. அதில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக தொகுத்து வழங்கி இருந்தார். அதுபோல நேற்று இந்த நிகழ்ச்சியின் க்ராண்ட் பினாலே நடைபெற்றது. அதேபோல ஹிந்தியிலும் 18-வது சீசன் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தான் தொடங்கப்பட்டது. நேற்று அந்த நிகழ்ச்சிக்கும் கிராண்ட் பினாலே நடைபெற்றது.

இதுவரைக்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்காத ரசிகர்கள் கூட இந்த முறை ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்து வந்தனர். அதற்கு காரணம் நடிகை ஸ்ருதிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய பிசினஸை கவனித்து வந்த ஸ்ருதிகா ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். அதுபோல நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து ஸ்ருதிகா தன்னுடைய விளையாட்டை சிறப்பாக விளையாடி வந்தார்.
இதனால் இவர் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார். அதிலும் டைட்டில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று ஹிந்தி ரசிகர்களும் கூறி வந்தனர். ஆனால் கடந்த வாரத்தில் அதிரடியாக ஸ்ருதிகா வெளியேற்றப்பட்டார். இது பெரிய அளவில் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்ததும் அதற்கு முக்கிய காரணம் ஸ்ருதிகாவின் நண்பர்கள் தான்.
பிக் பாஸ் வீட்டிற்குள் ஸ்ருதிகா கரண் மற்றும் ஜும் என்ற இரண்டு போட்டியாளர்களோடு அதிகமாக நட்பாக இருந்தார். ஆனால் அவர்கள் இருவருமே கடைசியில் ஸ்ருதிகாவிற்கு ஆப்பு வைத்து விட்டனர். இப்படியான நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நடைபெற்றது அதில் ஸ்ருதிகாவும் கலந்து கொண்டார். அதில் பைனலிஸ்ட் ஆக கரண் மற்றும் விவியன் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

கடைசியில் கரண் வின்னர் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது ஸ்ருதிகி தன்னை நம்பியவர்கள் ஏமாற்றி இருந்தாலும் கரணுக்காக கைத்தட்டி தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இரண்டாவது இடத்தை பிடித்த விவியன் எனக்கு கரண் மீது கொஞ்சம் பொறாமை இருக்கிறது, ஆனாலும் கரண் சிறந்த குடும்ப தலைவராக இருந்தார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் கரணோடு எனக்கு பல சண்டைகள் நடைபெற்றது. ஆனாலும் நான் கரணுடன் அதிகமாக சண்டை போட்டு இருக்கிறேன். ஆனால் இறுதி மேடையில் நாங்கள் இருவரும் நிற்கும் போது அவர் வெற்றி என்று அறிவித்ததும் எனக்கு மகிழ்ச்சி தான் என்று விவியன் கூறி இருக்கிறார்.
Bigg Boss Tamil 8 winner ஆனார் முத்துக்குமரன்.. runner ஆன சௌந்தர்யா சொன்ன சூப்பர் வார்த்தை
அதுபோல வெற்றி பெற்ற கரண் வீர்க்கு 50 லட்சம் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் ஹிந்தி போட்டியாளர் ஒருவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக ஸ்ருதிகாவை திட்டமிட்டு உள்ளிருக்கும் போட்டியாளர்கள் வெளியேற்றி விட்டார்கள் என்று ரசிகர்கள் பலர் இணையத்தில் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications