ஏமாற்றம், வலி.. அதிகமாக இருக்கிறது! உருக்கமாக போஸ்ட் போட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைக்கும் வகையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருக்கும் பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவர் இயக்குனராக இணைந்துள்ள "நீளிரா" படத்தை மையமாக வைத்து, தனது மனதில் இருந்ததை மிகவும் திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் பதிவு
"என் அன்பான தமிழ் ரசிகர்களுக்கு" என்று தொடங்கும் அந்த பதிவில், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த "நீளிரா" திரைப்படம் உருவாகி வந்ததாகவும், பல சவால்கள் இருந்தாலும் அதில் உள்ள நம்பிக்கை ஒருபோதும் குறையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த படம் வெறும் ஒரு திரைப்படம் அல்ல, நல்ல சினிமாவுக்கான ஒரு முயற்சி என்றும், "A great start for a film movement" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நல்ல திரைப்படங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு தியேட்டர்களில் கிடைக்க வேண்டிய ஆதரவு கிடைப்பதில்லை என்பதில் தான் தனது கவலை இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மக்கள் "படம் நல்லா இருக்கு" என்று சொல்லுவது மட்டும் போதாது, தியேட்டருக்கு சென்று பார்த்தால்தான் அந்த படங்களுக்கு உயிர் கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வருத்தமான வார்த்தைகள்
"Word of Mouth" மட்டும் போதாது... மக்கள் நேரடியாக வந்து பார்த்தால்தான் நல்ல சினிமா வாழும் என்றும், OTT-யில் வரும் வரை காத்திருக்காமல் தியேட்டரில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுவரைக்கும் ஓடிடி பற்றி எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்பதால் ஓடிடிக்கு வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்காமல் தியேட்டருக்கு வந்து பார்க்கும்படி வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
ரசிகர்களின் சப்போர்ட்
நல்ல சினிமாவை உயிருடன் வைத்திருக்க ரசிகர்களின் பங்கு மிக முக்கியம் என்பதையும் தனது பதிவில் அவர் தெளிவாக கூறியுள்ளார். இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இப்படியாக வலியுறுத்தும் "நீளிரா" திரைப்படம் கதை என்ன சொல்லுகிறது என்பதை பார்த்தால், அது ஒரு சாதாரண கதையல்ல என்பது தெளிவாகிறது.
நீளிரா படத்தின் கதை
1988-ஆம் ஆண்டு இலங்கை வடக்கு பகுதியை பின்னணியாகக் கொண்டு நகரும் இந்த படம், போர்ச் சூழலில் சிக்கிய ஒரு சாதாரண குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டுள்ளது. வாசுகி என்ற பெண்ணின் வீட்டில் மறுநாள் மகளின் திருமணம் நடக்க இருக்க, வீடு முழுவதும் உறவினர்கள் கூடி கொண்டாடும் நேரத்தில், இந்திய அமைதிப் படையினர் அப்பகுதியில் நடக்கும் தாக்குதலுக்காக வந்து அங்கு பதுங்குவது கதையை பதற்றமான நிலைக்கு கொண்டு செல்கிறது.
நீளிரா படத்தில் நடிகர்கள்
ஒரு வீடு, ஒரு இரவு, வெளியே போரின் அச்சம், உள்ளே குடும்பத்தின் பயம்... இந்த ஒரே இரவின் வழியாக போரின் வலியையும், சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் மனஅழுத்தத்தையும் படம் மிக நுணுக்கமாக சொல்லுகிறது.
வாசுகியாக நடித்துள்ள கபிலா வேணு தனது நடிப்பால் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார். இந்திய ராணுவ அதிகாரியாக நடித்த நவீன் சந்திரா கதையை முன்னேற்றும் வகையில் பொறுப்பான நடிப்பை வழங்கியுள்ளார். ரூபா கொடுவாயூர், சனந்த், நமச்சிவாயம், ரோஹித் கொகாடே உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்கான இடத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இளம் நடிகர்கள் சிது குமரேசன், 'கயல்' வின்செண்ட் ஆகியோரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

உண்மை சம்பவம்
இந்த படம் மிகச் சிறிய இடத்தில்-ஒரு வீட்டு சூழலில்-நடந்தாலும், அதில் வரும் காட்சிகள், ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவை சேர்ந்து பார்ப்பவர்களை அந்த சூழ்நிலைக்குள் இழுத்துச் செல்கின்றன. 80களின் ஈழ வாழ்க்கை, கல்யாண வீட்டு காட்சிகள், போரின் தாக்கம் ஆகியவை மிக எதார்த்தமாக காட்டப்பட்டுள்ளன.
படத்தில் வரும் வசனங்களும் மிகுந்த தாக்கம் கொண்டவை. "போரில் எப்படி அமைதியை தேடுவீர்கள்?", "எல்லா ராணுவமும் ஒன்றுதான்" போன்ற உரைகள் நேரடியாக மனதை தொடும் வகையில் அமைந்துள்ளன.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications