For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீயா நானாவுடன் ஒப்பீடு.. நான் வேலை செய்றேன்! நெட்டிசன் சும்மா இருக்காங்க -வாய் திறந்த கரு.பழனியப்பன்

Google Oneindia Tamil News

சென்னை: நீயா நானா கோபிநாத்துடன் ஒப்பிட்டு தமிழா தமிழா நிகழ்ச்சியை நடத்தி வரும் இயக்குநர் கரு.பழனியப்பனை மீம் கிரியேட்டர்களும் நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.

விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் வாரந்தோரும் ஏதாவது ஒரு வித்தியாசமான தலைப்பை முன்வைத்து விவாதங்கள் நடத்தப்படுவது வழக்கம். சமுதாயத்தில் உள்ள பல பழமைவாதங்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் வேலைக்கு அமர்த்திய குடும்பத்தலைவிகள் vs பணிப்பெண்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதம், படித்த அம்மா VS படிக்காத அப்பா என்ற தலைப்பில் விவாதங்கள் அதிகளவில் பிரபலமானது.

கேந்திரிய வித்யாலயா முதல் ஐஐடி வரை இந்தி மொழி கட்டாயம்.. சர்ச்சையை கிளப்பும் அமித்ஷா குழு பரிந்துரை கேந்திரிய வித்யாலயா முதல் ஐஐடி வரை இந்தி மொழி கட்டாயம்.. சர்ச்சையை கிளப்பும் அமித்ஷா குழு பரிந்துரை

தமிழா தமிழா

தமிழா தமிழா

நீயா நானாவை போன்றே ஜீ தமிழ் நிகழ்ச்சியில் தமிழா தமிழா என்ற விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் கரு.பழனியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தமிழா தமிழாவில் ரக்கட் பாய்ஸ் vs சாக்லேட் பாய்ஸ் என்ற பெயரில் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ரக்கட் பாய்ஸ் விவாதம்

ரக்கட் பாய்ஸ் விவாதம்

இதில் ராக்கட் பாய்ஸ் பிடிக்கும் என்று பேசிய பெண்களில் பலர் ஆண்களை உருவ கேலி செய்ததாகவும், தாடி வளராததை வைத்து விமர்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக இயக்குநர் கரு.பழனியப்பன், பெண்களை ஒருமையில் பேசிய ஆண்களை கடுமையாக கண்டித்ததாகவும், அதே நேரம் ஆண்களை ஒருமையில் பேசிய பெண்களை கண்டுகொள்ளவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது.

கோபிநாத் VS கரு.பழனியப்பன்

கோபிநாத் VS கரு.பழனியப்பன்

அடுத்தடுத்து சமூக அக்கறை கொண்ட தலைப்புகளை எடுத்து விவாதித்ததன் காரணமாகவும், அதில் கோபிநாத்தின் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட பலர் அவரை பாராட்டித் தள்ளி வருகின்றனர். இதில் ஒருசிலர் தமிழா தமிழா நிகழ்ச்சியை நடத்தி வரும் கரு.பழனியப்பனை கோபிநாத்துடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

எல்லை மீறும் மீம்ஸ்கள்

எல்லை மீறும் மீம்ஸ்கள்

இதனை விமர்சிப்பதற்கு உரிமை இருந்தாலும் மீம்ஸ் என்ற பெயரில் எல்லை கரு.பழனியப்பன் விமர்சிக்கப்படுவதாகவே தெரிகிறது. குறிப்பாக நிகழ்ச்சியில் அவர் நடந்துகொண்டதை பற்றி விமர்சிக்காமல் அவர் மீது தனிநபர் தாக்குதல்களை தொடுப்பது, உருவ கேலி செய்வது போன்ற விமர்சனங்களை அதிகம் காண முடிகிறது.

முற்போக்கு தலைப்புகள்

முற்போக்கு தலைப்புகள்

இயக்குநர் கரு.பழனியப்பனும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் சாதி, மத ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும், பெண்கள் ஒடுக்குமுறை, மூட நம்பிக்களுக்கு எதிராகவும் பல முற்போக்கு தலைப்புகளில் விவாத நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பான கருத்துக்களை தெரிவித்தவர்தான் என்று நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

கரு.பழனியப்பன் விளக்கம்

கரு.பழனியப்பன் விளக்கம்

ஒரு பக்கம் விமர்சனக்கள் அதிகரித்து சென்றாலும் கரு.பழனியப்பன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக முதல் முறையாக அவர் வாய் திறந்தார்.

வெட்டியாக இருக்கிறார்கள்

வெட்டியாக இருக்கிறார்கள்

"ஏற்கனவே இதேபோல் சமூக வலைதளங்களில் எனக்கு பாராட்டுக்கள் வந்தபோது நான் அதை நினைத்து மகிழ மாட்டேன். அவர்கள் பாராட்டுவார்கள். மீண்டும் திட்டுவார்கள். மீண்டும் பாராட்டுவார்கள். அவர்கள் பாராட்டும் இடத்திலேயோ திட்டும் இடத்திலேயோ இருக்கிறோம் என்றால் நாம் ஒரு வேலை செய்துகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். அவர்கள் எல்லாம் சும்மா இருக்கிறார்கள்.

English summary
While meme creators and netizens are severely criticizing the director Karu Palaniappan who is conducting the show Tamila Tamila comparing him to Neeya Nana Gopinath, he has given an explanation about this issue in a interview to a YouTube channel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X