நடிகை குஷ்பூவுக்கு வந்த சோதனை.. இப்படியும் ஏமாத்துறாங்க.. இது பலருக்கு பாடம்! உருக்கமான பதிவு
சென்னை: நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ (Khushbu Sundar) தனது பெயரை பயன்படுத்தி சிலர் போலி மெயில் அனுப்பி வருவதாக கூறி சமூக வலைதளத்தில் முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

குஷ்பூ வெளியிட்ட பதிவு
தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் குஷ்பூ வெளியிட்ட பதிவில், "என் பெயரில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் முக்கிய பதவிகளில் இருப்பவர்களுக்கும் சந்திப்பு கேட்டு சில மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதை எல்லோருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
'[email protected]' என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து வரும் எந்த மெயிலும் என்னுடன் தொடர்புடையது அல்ல. அது முற்றிலும் போலியானது. இது ஏமாற்று முயற்சியாக இருக்கலாம்.
எனக்கு யாரையாவது சந்திக்க வேண்டியிருந்தால் நான் எப்போதும் செய்வது போல நேரடியாகவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரம் கேட்பேன். எனவே இந்த மாதிரி வரும் மின்னஞ்சல்களுக்கு தயவுசெய்து பதில் அளிக்க வேண்டாம்.
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்த நபரை விரைவில் பிடிப்போம். இந்த விஷயத்தை எனக்கு தெரிவித்த உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களுக்கு எச்சரிக்கை
இந்த பதிவின் மூலம் குஷ்பூ தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளை பற்றி பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவருடைய பதிவு வெளியானதும் பலரும் அதனை பகிர்ந்து மற்றவர்களையும் எச்சரித்து வருகின்றனர்.
சினிமா முதல் அரசியல் வரை
குஷ்பூ தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர். 1990-களில் பல ஹிட் படங்களில் நடித்த அவர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.
தொலைக்காட்சி மற்றும் அரசியல்
சினிமாவுக்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராகவும், தொகுப்பாளராகவும் குஷ்பூ கலந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது அரசியல் கருத்துகள் மற்றும் சமூக விஷயங்களில் அவர் வெளிப்படையாக பேசுவது காரணமாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கும்.
தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவ்
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ, சமூக பிரச்சனைகள் முதல் சினிமா வரை பல விஷயங்களில் தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில், தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் போலி மின்னஞ்சல் மோசடி குறித்து அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தற்போது இணையத்தில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications