தேடித் தேடி கிங்காங் பத்திரிகை வெச்சாரே? பெரிய நடிகர்கள் போகலயா? அவ்ளோ பிஸியில் முதல்வரே போயிருக்காரே
சென்னை: நடிகர் கிங்காங் மகள் திருமணம் நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. இதற்கு பல தரப்பினரும் திரண்டு வந்து வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.. முதலமைச்சர் ஸ்டாலின் நேரிலேயே சென்று மணமக்களை வாழ்த்தியிருந்தார்.. அதேபோல, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை ஆசீர்வாதம் செய்திருந்தனர். எனினும், பெரிய நடிகர்கள் பங்கேற்காதது, பெருத்த அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி வருகிறது.
நடிகர் கிங்காங்குக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், 2 பெண், ஒரு ஆண் பிள்ளை இருக்கிறார்கள்.. இதில், மூத்த மகள் கீர்த்தனா பி.காம்., எம்.பி.ஏ படித்துள்ளார்.. இவருக்குதான் திருமணத்தை தற்போது நடத்தி முடித்துள்ளார் கிங்காங்.

அரசியல் பிரமுகர்கள்
வீட்டில் முதல் திருமணம் என்பதால், இதற்கான ஏற்பாடுகளை கடந்த சில மாதங்களாகவே கிங்காங் செய்து வந்தார்.. அதேபோல, அனைத்து தரப்பினருக்குமே தன்னுடைய மகளை மனமார வாழ்த்த வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.
இதற்காக, சில வாரங்களாகவே சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் வீடு தேடி சென்று, அழைப்பிதழை கிங்காங் வழங்கி வந்தார்.... ஒவ்வொரு நபரையும் தேடி தேடிச்சென்று கிங்காங் பத்திரிகை வைத்திருந்தது, போட்டோக்களாக சோஷியல் மீடியாவில் வைரலானது.
சிம்பிள் திருமணம்
சென்னையில் நேற்று காலை திருமணமும், மாலையில், வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.. இந்த வைபவத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அதேபோல், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட அரசியல் தலைவர்களும், வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களுக்கு ஆசீர்வாதம் செய்தனர்.
இதில், மூத்த தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கலந்து கொண்டபோது, கிங்காங்கை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டு மகிழ்ந்தார்.. இதைப்பார்த்ததுமே, மணமக்களும், சுற்றியிருந்தவர்களும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்...
உறவினர்கள், நண்பர்கள்
முன்னதாக நடைபெற்ற திருமணத்தில், கிங்காங்கின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சினிமா தரப்பில் முத்துக்காளை உள்ளிட்டோர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். எனவே வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி யாருமே வரவில்லை.
குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.. விஜய் சேதுபதி, கார்த்தி, சிவகார்த்திகேயன், டி ராஜேந்தர், கன்னட நடிகர் சிவராஜ்குமார் என முன்னணி நடிகர்களின் வீட்டுக்கே சென்று பத்திரிக்கை வைத்திருந்த நிலையில் யாருமே கிங்காங் மகள் திருமணத்துக்கு வராதது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது..
அரசியல் தலைவர்கள்
கிங்காங் அரசியலில் சம்பந்தப்பட்டவர் இல்லை என்றாலும், முதலமைச்சர், மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் என அரசியல் தலைவர்கள், கிங்காங்குக்காக, அவரது மகளை வாழ்த்த சென்றனர். ஆனால், சினிமா துறையை சேர்ந்தவர்கள் ஏன் வரவில்லை? என்று தெரியவில்லை.
பல்வேறு அரசியல் பணிகளுக்கு இடையிலும், தமிழக முதல்வர் திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்து சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.. இது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.
வழக்கமாக, திரைத்துறையில், பிரபலம் அல்லாதவர்கள் இறந்துவிட்டால், அந்த துக்க நிகழ்ச்சியில்கூட நடிகர், நடிகைகள் பங்கேற்பதில்லை என்ற விமர்சனம் ஏற்கனவே உள்ளது.. சின்ன நடிகர்களை, பெரிய நடிகர்கள் ஒதுக்குவதாக அதிருப்திகளும் பலமுறை எழுந்துள்ளன..
பெரிய நடிகர், சின்ன நடிகர்
ஆனால் கிங்காங்கை சிறிய நடிகர் என்று ஒதுக்கிவிட முடியாது... பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.. மக்களிடம் அனைத்து தரப்பிலுமே பிரபலமானவர்.. சினிமாவில் வாய்ப்பில்லாமல் தவிக்கும் எத்தனையோ நகைச்சுவை கலைஞர்களுக்கு, தான் சொந்தமாக நடத்திவரும் பல பல மேடை நிகழ்ச்சிகள் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்கி கொண்டு இருப்பவர்.. டாக்டர் பட்டத்தை வென்றவர்.. நடிப்பு திறமைக்காக தேசிய விருதினை பெற்றவர்.
இத்தனை பெருமைகளையும், சிறப்புகளையும் பெற்ற , சக நடிகரான கிங்காங் வீட்டு திருமணத்தையே பெரிய நடிகர்கள் புறக்கணித்திருப்பது பெருத்த ஆச்சரியத்தை தந்து வருகிறது... ரிதன்யா விவகாரத்துக்குதான் பெரும்பாலானோர் கருத்து சொல்லாமல் அமைதி காக்கிறார்கள் என்றால், இதுபோன்ற நல்ல விஷயத்துக்குகூட வந்து போகமாட்டார்களா? என்ற கவலையும் எழுந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications