kodeeswari: கலக்கும் கோடீஸ்வரி.. அதிரடியாக நடத்தும் ராதிகா.. இது கலர்ஸ் தமிழ் டிவியின் பிக் பாஸ்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களின் விதம் விதமான தனித் திறமைகளை கண்டு வியந்து பார்த்து ரசிக்கும்படியாக இருந்த கோடீஸ்வரி நிகழ்ச்சி கடந்த வெள்ளியன்று முடிவடைந்து இருக்கிறது.
கோடீஸ்வரி நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கியது ஒரு பிளஸ் பாயிண்டாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தான் உடுத்தி வந்த புடவை, அணிந்து வந்த ஆபரணங்கள் பற்றி எல்லாம் கூட ராதிகா விவரித்து வந்தது பெண்களைக் கவரும் விதத்தில் இருந்தது.
எந்த மாதிரி புடவை உடுத்தினால், எப்படிப்பட்ட ஆபரணங்களை அணியலாம் என்கிற கைடன்ஸ் கொடுப்பதாகக் கூட இந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் உண்டு. பல துறைகளை சார்ந்த பெண்களோடு, பிரபலங்களும் கலந்துக்கொண்டது நிகழ்ச்சியின் ஹைலைட்.

பிக்பாஸ் கோடீஸ்வரி
விஜய் டிவிக்கு எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியோ, அது போல கலர்ஸ் தமிழ் டிவிக்கு கோடீஸ்வரி நிகழ்ச்சி இருக்கும் போலும் என்று எண்ணும்படியாக இது சீசன் என்கிற அளவிலான நிகழ்சசியாகப் பார்க்கப்படுகிறது. வருடத்துக்கு ஒருமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருவது போல, கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியும் வருஷத்துக்கு ஒருமுறை என்று ஒளிபரப்பாகும் என்றே நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறும் தகவலாக இருக்கிறது.

ராதிகா கமல்ஹாசன்
வருடத்துக்கு ஒருமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் மூன்று மாதம் அதாவது 100 நாட்கள் என்று நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்துவிட்டு, பின்னர் தனது வேலையைப் பார்க்க ஆராம்பித்து விடுவார். இதற்கு நடுவிலும் அவர் தனது வேலையைப் பார்ப்பார் என்பதும் அறிந்த விஷயமே. அதே போல ராதிகா சரத்குமாரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியை வருஷத்துக்கு ஒரு முறை நடத்திவிட்டு, பின்னர் தனது வேலைகளில் முழுவதுமாக மூழ்கிவிடுவார் என்றே தகவல்கள் கூறுகின்றனர்.

டிசம்பர் 23 ம் தேதி 2019
கடந்த டிசம்பர் 23ம் தேதி 2019 இல் கோடீஸ்வரி நிகழ்ச்சி ஆரம்பித்தது என்றும், இது நாள் வரை இந்த பயணம் பல்வேறு இனிமையான அனுபவங்கள், பாடங்களை இந்த நிகழ்ச்சி தனக்கு தந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றும் ராதிகா கடைசி நாளில் பேசி இருக்கார். இது முடிவல்ல ஆரம்பம்தான் என்றும் அவர் கூறி இருக்கார். எனவே அடுத்தடுத்து கோடீஸ்வரி சீசன் நடைப்பெறும் என்றும் தெரிகிறது.

சுகமான முடிவு
நிகழ்ச்சியை நன்றாக நடத்த உறுதுணையாக இருந்தவர்களுக்கு, விளம்பரதாரர்களுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு என்று அனைவருக்கும் நன்றி கூறினார். கோடீஸ்வரி ஷோ பிரமாண்டமாக நடத்த காரணமாக இருந்த தொழில் நுட்ப கலைஞர்கள், தொழில் செய்த விதம் எப்படி என்பதையும் ஒளிபரப்பினார்கள். ஒவ்வொரு லைட்டாக அணைய அணைய ராதிகா சரத்குமார் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விடைபெற்று உள்ளார். நிகழ்ச்சியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் துவங்கும் என்றே இதன் மூலம் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications