சிரிப்பு சிங்காரி கோவை சரளா... காஞ்சனா 3 ல நீதான் மாஸா!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து இருக்கும் காஞ்சனா 3 திரைப்படம் இன்றைக்கு வெளியாகிறது.
இந்த சமயத்துல முனியில ஆரம்பிச்சு காஞ்சனா 3 வரைக்கும் நடிச்சு நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நம்ம கோவை சரளாவைப் பத்தி பேசாம எப்படி இருக்க முடியும்.

கோவை சரளா நல்ல அழகுதான், மனோரமா மாதிரி. அவங்க வரும்போதே கதாநாயகியா நடிக்கணும்னு வந்தங்களான்னு சரியா தெரிஞ்சுக்க முடியலேன்னாலும், நகைச்சுவை நடிகையாத்தான் அறிமுகமானாங்க.
முந்தானை முடிச்சு படத்துல கோவை தமிழ் பேசி, தில்லானா மோகனாம்பாள் படத்துக்கு ஊர்வசியை ஜன்னல் வழியா படத்துக்கு கூப்பிடற சீன்..பிரமாதமா இருக்கும்.

உச்ச நட்சத்திரமா ஆன போது கூட இவங்க கூடத்தான் ஜோடியா நடிப்பேன்னு சொன்னதில்லை. சின்ன வயசுலேயே பாட்டி, பாக்கியராஜுக்கு அம்மான்னு பெரிய வயசு கேரக்டரில் நடிச்சவங்க..
மூத்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி இவங்க கூடவும் நடிச்சு இருக்காங்க. அப்புறம் கேட்கவே வேணாம், கவுண்டமணி, செந்தில், வடிவேலு இப்படி இவர் கூட ஜோடியா நடிச்ச நடிகர்கள் இவரை விட வயசுல ரொம்ப பெரியவங்கதான்.
நடிகர் விவேக் காம்பினேஷனில் இவர் நடிச்ச படங்கள் அத்தனையும் முத்து.. அதிலும் சிநேகிதனை..சிநேகிதனை பாட்டு பாடி இவங்களை பிச்சைக்காரியா நடிக்க வச்சு படம் முழுக்க ரெண்டு பேரும் சிரிக்க வச்சிருப்பாங்க.

நம்மவர் கமல்ஹாசன் கூட சதி லீலாவதி படத்துல ஜோடியாவே நடிச்சு, கமல் கூட ரொமான்ஸ் பண்ணி, ஒரு டூயட்டும் பாடி அசத்தி இருப்பார் கோவை சரளா. இதே போலத்தான் மனோரமா ஆச்சியும் சிவாஜி கணேசன் கூட ஜோடியா ஒரு படத்துல நடிச்சு இருப்பாங்க.ஆனா, ரொமான்ஸ்லாம் கிடையாது.
கோவை சரளா, மனோரமா மாதிரி, நகைச்சுவை நடிப்புன்றது, பாடி லாங்குவேஜ்லயும் வரணும்.. அதே சமயம் வாயிலும் நகைச்சுவையா வசனத்தை சொல்லி நடிக்கணும்ன்றதுல மிக உறுதியா இருந்தவங்க. எப்படி நடிக்க சொன்னாலும், நடிப்புன்னு வந்துட்டா கோவை சரளா கீ கொடுக்கற பொம்மை மாதிரிதான்.
பாட்டாளி படத்துல வடிவேலு பொம்பளை வேஷத்தில் நடிக்க, அவருக்கு இணையா இறங்கி நடிச்சு சரளா தூள் கிளப்பினாங்க.இப்படித்தான் ஒவொரு படத்திலும் தரை லோக்கலா எப்படி கத்தி, கையை காலை தூக்கி நடிக்க சொன்னாலும் யோசிக்காம இறங்கி வந்து நடிச்சு குடுப்பாங்க.அந்த நகைச்சுவை ஓஹோன்னு பேசப்படும்.
இப்போ முனியிலேர்ந்து காஞ்சனா 3 வரைக்கும் வந்தாச்சு.. பயத்துல நடுங்கறது. அந்த பயத்தோடயே பன்ச் வசனம் பேசறது..பேய்கிட்ட அடிவாங்கினா எப்படி இருக்கும்னு யோசிச்சு தன்னை அலங்கோலமா ஆக்கிக்கறதுன்னு இவருக்கு நிகர் இவர்தான்.
லாரன்ஸை இடுப்புல தூக்கி வச்சுக்கறது.. ரெண்டாவது படத்துல உச்சி முடியை தூக்கி நிறுத்தி வச்சுக்கிட்டு பேய்கிட்ட அடிவாங்கின ஃபீலிங்க்ல வர்றதுன்னு ஐயோ.. கிரேட் கோவை சரளா.
ஒரு பிரபல வார பத்திரிகையில் மனோரமா ஆச்சிக்குப் பிறகு நகைச்சுவையில் அந்த இடம் யாருக்குன்னு ஒரு கேள்வி கேட்டு இருந்தாங்க. பதிலில், தூரமா பாருங்க கோவை சரளான்னு ஒரு ஒளி தெரியறாங்கன்னு இன்னிக்கு நேத்து இல்லை 20 வருஷத்துக்கு முன்னாடியே அந்த பத்திரிகையில சொல்லி இருந்தாங்க..
இன்னிக்கு காஞ்சனா 3 ரிலீஸ் ஆகுது. படத்தை பார்த்து கோவை சரளா காமெடியை நல்லா என்ஜாய் பண்ணுவோம்... இன்னும் இன்னும் என்று அவர் நிறைய படங்களில் நடிக்க வாழ்த்துவோம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications