கேபிஒய் பாலா வளர்வதை தடுக்கும் சிவகார்த்திகேயன்? காந்தி கண்ணாடி பேனரை கிழித்த சில்லறைத்தனம்: பிரபலம்
சென்னை: காந்தி கண்ணாடி படத்தின் இயக்குனர் ஷெரிப் ஒரு பேட்டியில், "படத்திற்கு ஷோ இல்லை என்று சொல்லி போன் வருகிறது. ஏன்? எதற்கு? என்று தெரியவில்லை. சில தியேட்டரில் பேனர்கள் கூட வைக்கவில்லை. வைத்த பேனரையும் கிழித்து இருக்கிறார்கள். போஸ்டர் கூட ஒட்டவும் விடவில்லை. பாலா காரைக்காலில் இருந்து சினிமா கனவோடு ஓடி வந்த பையன் சார். ஏன் அடிக்கிறாங்க? எதுக்கு அடிக்கிறாங்க? சத்தியமா எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. எங்கள அடிக்கணும்னு தோணுச்சுன்னா நேரில வந்து செலவு கூட அடிச்சிட்டு போங்க" என்று கூறியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "காந்தி கண்ணாடி படத்தின் டைரக்டர் ஷெரீப் தன்னுடைய ஒரு பேட்டியில், 50 பைசா, ஒரு ரூபாய்க்கு வண்ணாரப்பேட்டையில் போஸ்டர் ஒட்டியவன்..

இன்று மெல்ல மெல்ல வளர்ந்து, ஒரு படத்தை தற்போது இயக்கியிருக்கிறேன்.. அரும்பாடு பட்ட இந்த படத்தின் போஸ்டர்களை கிழிக்கிறார்கள், பேனர்களை கிழிக்கிறார்கள், பல தியேட்டர்களில் ஷோ இல்லைன்னு கேன்சல் பண்றாங்க என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை சொல்லி உள்ளார்.
காந்தி கண்ணாடி போஸ்டர்கள்
ஆனால், அந்த போஸ்டர்களை எல்லாம் யார் கிழித்தது? எந்த தியேட்டர்? என்று ஆதாரத்துடன் சொல்லவில்லை.. தன்னுடைய குமுறலை மட்டும் சொல்லி உள்ளார்.. புது பையன் பாலாவும், புது இயக்குனர் ஷெரீப்பும் சேர்ந்து முதல்முதலாக படம் எடுத்துள்ளனர்.. டைரக்டர் கண்ணீர் விடுவதை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
காந்தி கண்ணாடி படத்துக்கு என்ன எதிர்ப்பு இருக்க முடியும்? சிவகார்த்திகேயன் இன்று மிகப்பெரிய நடிகராக வளர்ந்துவிட்டார்.. ரூ.75 கோடி சம்பளமாக வாங்கக்கூடிய ஸ்டாராக வளர்ந்துவிட்டார்.. அவரது மதராஸி படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வந்தாகிவிட்டது.. அன்றைய தினம்தான் காந்தி கண்ணாடி படமும் வெளியானது..
கேபிஒய் பாலா
அப்படியானால் சிவகார்த்திகேயனுக்கு கேபிஒய் பாலா நேரடியாக போட்டியாக வந்துவிடுவாரா? இதன்காரணமாக, பாலாவுக்கு சிவகார்த்திகேயன் நேரடியாக தொந்தரவு செய்வாரா? என்றால், நிச்சயமாக அப்படியெல்லாம் சிவகார்த்திகேயன் செய்ய மாட்டார்..
காரணம், சிவகார்த்திகேயனே விஜய் டிவியிலிருந்து படிப்படியாக உயர்ந்து, சினிமாவுக்குள் நுழைந்து, காமெடி ஹீரோவாக வளர்ந்து, இன்று ஆக்ஷன் ஹீரோவாக உயர்ந்துள்ளார்.. இன்று சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாகிவிட்டார்.
சிவகார்த்திகேயன் - பாலா
அன்று கரடுமுரடு பாதையிலிருந்து வந்த சிவகார்த்திகேயனை போலத்தான், இன்று கேபிஒய் பாலாவும் வந்துள்ளார்.. எனவே, பாலாவுக்கு சிவகார்த்திகேயன் எதிர்ப்பை காட்ட வேண்டிய அவசியமே கிடையாது..அப்படியானால் பாலாவுக்கு எதிர்ப்பை காட்டுவது, சிவகார்த்திகேயனின் ரசிகர்கள்தான்.. தன்னுடைய தலைவன் படத்துக்கு போட்டியாக நீ வர்றியா? என்பது அந்த ரசிகர்களின் எண்ணமாக இருக்கலாம்
நடிகர்களை கொண்டாடும் போக்கு இருப்பதால்தான், இப்படியான விளைவுகள் ஏற்படுகின்றன.. ரஜினிகாந்த், கமல், அஜீத், விஜய் என எந்த நடிகர்களாக இருந்தாலும் அவர்களை ஏன் கொண்டாட வேண்டும்?
ஒரு நடிகன் என்பவன் தன்னுடைய தொழிலை செய்யக்கூடியவர்.. அதற்குரிய ஊதியம் 150, 200 கோடிகளை வாங்கி கொண்டு நடிக்கிறார்கள்.. எப்போதுமே நடிகர்களின் வாழ்க்கைத் தரமே வேறு மாதிரியாக இருக்கும்.. பங்களா, ஸ்விம்மிங் பூல், ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து என்று அவர்களது வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள்..
கூஜா தூக்கி பாலாபிஷேகம்
இதுபோன்ற நடிகர்களுக்காக, இந்த ரசிகர்கள் ஏன் தங்கள் வாழ்க்கையை இழக்கணும்? ஒரு நடிகரை பிடித்திருந்தால் அவரது படத்தை பார்த்து, கைதட்டி விசிலடித்து மகிழ்ச்சி அடையட்டும். தியேட்டரை விட்டு வெளியே வந்தால், தங்கள் சொந்த வாழ்க்கையை ரசிகர்கள் பார்த்து கொள்ள வேண்டும்.
நடிகனுக்கு எப்ப பாரு கூஜா தூக்கி, பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்தால், சொந்த வாழ்க்கை என்னாவது? ரசிகர்களுக்கென்று நடிகர்கள் எதுவுமே செய்யாதபோது, ரசிகர்கள் ஏன் நடிகர்களுக்காக தங்களது வாழ்வை தொலைக்கணும்?
சில்லறைத்தனமான விஷயங்கள்
சிவகார்த்திகேயனுக்கு ஒரு கூட்டம் இன்று சேர்ந்துவிட்டது.. தன்னுடைய தலைவன் படம் ரிலீஸ் ஆகும்போது, பாலாவின் காந்தி கண்ணாடி படமும் ரிலீஸ் ஆனதை சிவகார்த்திகேயன் ரசிகர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை..
தன்னுடைய தலைவருக்கு போட்டியாக பாலா படம் வெளியிடுகிறார் என்று நினைத்து, போஸ்டர்களை கிழித்து, பேனர்களை உடைத்து, தியேட்டர்களில் கலாட்டா செய்வது என சில்லறைத்தனமான விஷயங்களை ரசிகர்கள் செய்கிறார்கள்.. ஆனால், எக்காலத்திலும் இதுபோன்ற விஷயங்களை நடிகர்கள் செய்வது கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications