ரஜினியிடம் வாழ்த்து.. புத்தாண்டில் விவேக் போல தரமான சம்பவம் செய்த கடி ஜோக் தங்கதுரை.. வீடியோ தான் ஹைலைட்
சென்னை: புதியதாக தொடங்கிய புத்தாண்டில் பலர் பல உறுதி மொழிகளை எடுத்து இருந்தாலும் நடிகரும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் பிரபலமான கடி ஜோக் தங்கதுரை எடுத்து இருக்கும் முடிவுதான் இணையத்தில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. கடி ஜோக் தங்கதுரை தன்னுடைய புது முயற்சி பற்றி ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது நடிகர் தங்கதுரை தான் விவேக் பாணியில் அவரை பின்பற்றி ஒரு வருடத்திற்கு 30000 மரக்கன்றுகளை நட இருக்கிறேன் என்று இயற்கை வளத்தை காப்பாற்றுவதற்காக தான் எடுத்திருக்கும் முயற்சி பற்றி அதில் பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு நடிகர் தங்கதுரை தான் மரம் வளர்ப்பதற்காக எடுத்து வைத்திருக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்திடம் நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறார். அது குறித்து அவர் வெளியிட்ட பதிவு பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அதைத்தொடர்ந்து பல பேரு சினிமாவில் பெரிய நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் தங்கதுரை. இவர் சின்னத்திரையிலும் பெரிய திரையிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமாகி வருகிறார்.
அதோடு தங்கதுரை என்று சொல்வதை விடவும் இவரை கடி ஜோக் தங்கதுரை என்று சொன்னால்தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக தெரியவரும். எக்கச்சக்கமான படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்துவரும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வந்து அதிகமான ரசிகர்களை கவர்ந்தார். அதற்குப் பிறகுதான் இவருக்கு பெரிய அளவில் சின்னத்திரை மக்களிடம் பிரபலம் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து இப்போது திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக தமிழில் எங்கேயும் எப்போதும், மாநகரம், அட்டகத்தி போன்ற பல திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். இதுபோல சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் தங்கதுரை அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு வெளியிட்டு வருவார். அந்த மாதிரி தான் தற்போது வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

அந்த வீடியோவில் அடுத்தவங்களுக்கு குழி பறிக்கிறதை விட்டு விட்டு ஒரு மரத்துக்கு குழி பறிச்சி அத நட்டு வைப்போம் என்று நான் முடிவு எடுத்து இருக்கேன். அதற்கான முயற்சியில் இப்போ இறங்கி இருக்கேன். அதை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஒரு மரத்தை கொடுத்து நான் இப்படி மரம் வளர்க்க தொடங்கி இருக்கிறேன் என்று சொன்னேன். அவர் அதற்கு சூப்பர் நல்ல விஷயம் அதை தொடர்ந்து செய்யுங்க என்று எனக்கு ஆசீர்வாதம் செய்தார் என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அதோடு அதற்கு ஒரு அழகான கேப்ஷனும் கொடுத்திருக்கிறார்.
அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பசுமை நாயகன் நடிகர் விவேக் சாரின் மரம் வளர்ப்பை மக்களிடம் எடுத்துச் சொல்லலாம் என முடிவெடுத்தேன். இதை தலைவர் ரஜினி சாரிடம் சொல்லி வாழ்த்து பெற்று இந்த வருடத்தில் இருந்து மரம் வளர்ப்பை ஆரம்பித்து இருக்கிறேன். அப்துல் கலாம் ஐயா வழியில் விவேக் சாரின் ஆசியோடு தொடர்ந்து வருடத்திற்கு குறைந்தது 30,000 மரக்கன்றுகள் நட இருக்கிறேன். உத்வேகம் கொடுத்த மக்களுக்கு நன்றி.. மரம் வளர்ப்போம், இயற்கை வளம் காப்போம் என்று பதிவிட்டு இருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பசுமை நாயகன் நடிகர் விவேக் சாரின் மரம் வளர்ப்பை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என முடிவெடுத்தேன். இதை தலைவர் @rajinikanth சாரிடம் சொல்லி வாழ்த்து பெற்று இந்த வருடத்தில் இருந்து மரம் வளர்ப்பை ஆரம்பித்திருக்கிறேன். அப்துல்கலாம் ஐயா வழியில் விவேக் சாரின்… pic.twitter.com/0Fa8UmO6Xf
— Thangadurai (@thangadurai123) January 4, 2024
தங்கதுரையில் இந்த பதிவு ரசிகர்களின் மக்கள் மத்தியில் மரம் வளர்ப்பை ஊக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவருக்கு அதனால் அதிகமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. பொதுவாக பல பேர் புத்தாண்டு தினத்தன்று இந்த வருடத்தில் இதை மாற்றிக் கொள்ள வேண்டும், அல்லது இதை தொடர வேண்டும் என்று உறுதி மொழி எடுப்போம். ஆனால் அதை ஒரு சில நாட்களிலே விட்டுவிட்டு பழையபடி திரும்பி விடுவோம்.
ஆனால் இந்த முறை நடிகர் தங்கதுரை எடுத்து இருக்கும் இந்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் காற்று மாசுபாடு அதிகரித்து காலநிலை மாற்றம் ஏற்பட்டு அனைவரையும் கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அனைவரும் மரம் வளர்த்து அடுத்தவர்களுக்காக மட்டுமல்லாமல் நம்முடைய சந்ததியினருக்கும் சிறப்பான ஒரு உலகத்தை கொடுக்க நடிகர் தங்கத்துரையோடு சேர்ந்து நாமும் முயற்சி செய்யலாம்.












Click it and Unblock the Notifications