குப்புற படுத்த குபேரா.. தனுஷ் யோசிக்கல? முதல் கோணல் முற்றும் கோணல்.. இதுல பாக்யராஜ் எதுக்கு: பிரபலம்
சென்னை: இயக்குனர் சேகர் கம்முலா டைரக்டர் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சாயாஜி ஷிண்டே மற்றும் பாக்யராஜ் நடித்து வெளிவந்துள்ள படம் குபேரா.. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் தனுஷுக்கும் தமிழ் சினிமாவுக்கும் சக்ஸஸ் தரும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கலவை விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் குபேரா படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரவு தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "தெலுங்கு படமா? தமிழ்ப்படமா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.. இது தனுஷ் படமா? நாகார்ஜூனா படமா? என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை..

தனுஷ்தான் ஹீரோ போல தெரிகிறது, தனுஷ்தான் சண்டை போடுகிறார், தனுஷ்தான் படம்முழுக்க வருகிறார்.. ஆனாலும் தனுஷூக்கென ரசிகர்களுக்கென இந்த படம் உள்ளதா? என்பது சந்தேகம்தான்..
இந்த படத்தை பற்றி விழா ஒன்றில் பேசிய தனுஷ், இந்த படத்தின் கதை நிச்சயம் என்னுடைய ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று கூறியிருந்தார். ஆனால், இந்த படம் விருந்தாக அமையவில்லை.
கமர்ஷியல் தனுஷ்
சண்டை, நடனம், நடிப்பு என அனைத்தும் கலந்து, கமர்ஷியலாக நடிக்கக்கூடியவர்தான் தனுஷ்.. ஆனால், இந்த படத்தில் கமர்ஷியலாக அவரை பயன்படுத்தவில்லை.. அசுரன், கர்ணன் போன்ற கதையோடு கூடிய படமா? என்றால் அதுவும் இல்லை.. தனுஷின் ஆரம்ப காட்சியில், இந்த படத்தில் ஏதோ அழுத்தமான விஷயத்தை சொல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அப்படி எந்த விஷயமும் சொல்லப்படவில்லை..
தெலுங்கில் மாஸான ஹீரோ, நாகார்ஜூனாவுக்கு இந்த படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை. நாகார்ஜூனா கேரக்டர் சரியாக புரியவில்லை. அவர் நல்லவரா? கெட்டவரா? ஹீரோவா? வில்லனா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. மொத்தத்தில் இந்த படம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
தெலுங்கு இயக்குனர்கள்
தமிழிலேயே நல்ல இயக்குனர்கள் இருக்கிறார்கள், அவர்களை எல்லாம் விட்டுவிட்டு தெலுங்கு இயக்குனர்களை நம்பி ஏன் நடிகர்கள் போகிறார்கள் என்று தெரியவில்லை.. ஒருவேளை பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக செல்கிறார்களா தெரியவில்லை.. ஆனால், கதையை மிஸ் பண்ணிடறாங்க.
அடடா இந்த சீன் பிரமாதமாக இருக்கே? என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு சீன்கூட படத்தில் இல்லை.. ஒரே ஒரு ஆறுதலான விஷயம், ராஷ்மிகா மந்தனாவின் நடிப்புதான்.. கவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே நடித்து கொண்டிருந்த ராஷ்மிகா, இந்த படத்தில் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.. ஆனால், தனுஷ் - ராஷ்மிகா காதலர்களா? நண்பர்களா ? என்ற குழப்பம் வருகிறது.. வசனங்களும் படத்தில் பொருந்தாமல் இருக்கிறது..
முற்றிலும் கோணல்
ஒன்றிரண்டு வசனங்கள் இருந்தாலும், அழுத்தமாக சொல்லப்படவில்லை.. படத்தின் நீளம் 3 மணி நேரம் ஓடுகிறது.. சுவாரஸ்யமாக இருந்தால்கூட நீளம் தெரியாது.. ஆனால், படத்தின் கதையில், வசனத்தில், கேரக்டர்களில் அழுத்தம் இல்லை. அலுப்பு தட்டும் காட்சிகள்தான் அதிகமாகிறது.. தனுஷ் தப்பிப்பதும், அவரை ஒரு கும்பல் துரத்துவது ஒன்றிரண்டு சீன் வைக்கலாம். ஆனால், படம் முழுக்க கிளைமேக்ஸ் வரை இதுதான் நடக்கிறது..
தனுஷ் ஒரு பெரிய நடிகர், நாகார்ஜூனா ஒரு பெரிய நடிகர், சேகர் கம்முலா ஒரு பெரிய டைரக்டர்.. இவர்கள் எல்லாம் சேர்ந்து எப்படி இந்த கதையை தேர்ந்தெடுத்தார்கள் தெரியவில்லை. இது சென்டிமென்ட் படமாகவும் இல்லை, ஆக்ஷன் படமாகவும் இல்லை.. முதல் கோணல் முற்றும் கோணலாகிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications