சரக்கு அடிக்கிறதை விட்ட பிறகு தான் குடிகாரன் ரோல்.. எந்த வெற்றியும் அனுபவிக்கல.. நடிகர் சேசு எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சேசு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் கடந்த மாதத்தில் எமோஷனலாக பேசிய வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதில் தான் மது அருந்துவதை விட்ட பிறகுதான் தனக்கு மது குடிப்போர் கேரக்டர் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றும் தான் சமீபத்தில் நடித்து வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்பட அனுபவங்கள் குறித்தும் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

Lollu Saba Shesu emotional speech last month is now being shared

இந்த நிலையில் சேசு சமீபத்தில் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி என்ற திரைப்படத்தில் கோவில் பூசாரி ஆகவும் அந்த திரைப்படத்தில் முழு நேர குடிகாரராகவும் நடித்திருப்பார். அதே நேரத்தில் சரக்கு அடிப்பதற்காக எவ்வளவு முயற்சிகளையும் எடுக்கும் கேரக்டரில் அவர் நடித்திருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட பேட்டியில் அவரிடம் உங்க கண்கள் இப்போதும் சிவப்பாக இருக்கிறதே அப்போ இப்பவும் சரக்கு போட்டுட்டு வந்து இருக்கீங்களா என்று கேட்க,

அதற்கு பேசு, சும்மா இருங்க நீங்க வேற... இப்படி எல்லாம் பேசாதீங்க. நான் சரக்கடிக்கிறதை விட்டு ரொம்ப நாள் ஆச்சு. நான் சரக்கடிக்கிறதை விட்ட பிறகு தான் எனக்கு அந்த மாதிரி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அதற்கு ஒண்ணும் நாம சொல்றதுக்கு கிடையாது. நமக்கு வர வாய்ப்பை நம்ம சரியா பயன்படுத்தணும். நம்முடைய கேரக்டர் எதுவாயிருந்தாலும் அதை திரையில் உள்ள கேரக்டரோடு ஒப்பிட்டுக்கொள்ள கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

அதுபோல அந்த படம் முழுக்க எங்க கண்ணுக்குள் ஒரு வித பிளட் தான் ஊற்றப்பட்டது. அதனால்தான் அந்த படத்தில் எங்களுடைய கண்கள் சிகப்பாக இருந்தது. நான் அந்த ரத்தத்தை ஏன் கண்ணுக்குள் ஊற்றுவதற்கு முன்பே இது இன்பெக்சன் வராதுலா என்று கேட்டு தான் ஊற்றவிட்டேன். அந்த திரைப்படத்தில் அதிகமான நேரத்தில் எங்களுடைய கண்கள் சிகப்பாகத்தான் இருக்கும்.

அதற்கு காரணம் அந்த ரத்தம் தான். நள்ளிரவு நேரத்தில் கூட அதை ஊற்றிக் கொண்டே இருந்தார்கள். திடீரென்று கொஞ்சம் கண்கள் நிறம் மாறினால் கூட மேக்கப் மேன் உடனே ஓடி வந்து விடுவார், உங்கள் கண்ணுக்குள் ரத்தத்தை ஊத்த வேண்டும் என்று சொல்லுவார். அப்போ ரொம்பவே கஷ்டப்பட்டு தான் அந்த காட்சிகளில் நடித்தோம் என்று சேசு கூறியிருக்கிறார். அதோடு நான் பல படங்களில் நடித்திருக்கிறேன்.

லொள்ளு சபா நிகழ்ச்சியிலும் நடித்திருக்கிறேன். ஆனால் அது எதிலுமே எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதுபோல நான் எவ்வளவு முயற்சிகள் செய்து உழைத்தாலும் என்னுடைய உழைப்புக்கு தகுந்த வெற்றியை நான் அனுபவிக்கல என்று அந்த பேட்டியில் உருக்கமாக சேசு பேசியிருக்கிறார். அந்த நிகழ்ச்சிகளில் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கும் சேசு தான் குறைவான சம்பளம் வாங்கினாலும் அதை வைத்து பலருக்கு உதவி செய்திருக்கிறார்.

அதோடு பல பெண்களுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு பொருட்கள் வாங்கிக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். தன்னிடம் பணம் இல்லாத போது கூட பலரிடமும் உதவி வாங்கி சேசு பல உதவிகளை செய்து இருக்கிறார். ஆனால் இன்று அவர் மாரடைப்பு காரணமாக காவிரி மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார்.

அவருக்கு சிகிச்சை செய்வதற்காக பத்து லட்சத்திற்கு மேல் செலவு ஆகும்னு சொல்லி இருக்கிறார்களாம். அதனால் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் அமுதவாணன் உட்பட சிலர் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல சேசு விரைவில் உடல்நிலை சரியாகி பலரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுதல் வைத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+