சர்க்கரை நோயால் இடது காலை இழந்து.. லொள்ளு சபா நடிகரா இது? சென்னை அரசு மருத்துவமனையில் நட்சத்திரங்கள்
சென்னை: லொள்ளு சபா நடிகர் சிரிக்கோ உதயாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.. காலுக்கு சரியான ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தினால், அவரது இடது காலை எடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, சக நடிகர்கள், மருத்துவமனைக்கு சென்று, சிரிக்கோ உதயாவின் உடல்நலனை விசாரித்து வருகிறார்கள்..
லொள்ளு சபா, விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியாகும். ஆரம்பத்திலேயே இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்தது.. இன்றும்கூட ரேட்டிங்கில் டாப்பில் உள்ளது லொள்ளு சபா நிகழ்ச்சிதான்..

ராம்பாலா இயக்கிய இந்தத் தொடரில், சந்தானம், சுவாமிநாதன், லொள்ளு சபா மனோகர், பாலாஜி, ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த தொடரில் நடித்த நடிகர்கள் பெரும்பாலானோர் டிவி சீரியல்களில் நடித்து புகழ்பெற்று, பிறகு, சினிமாக்களிலும் நடித்துள்ளனர்..
லொள்ளு சபா சீனியர் நடிகர்
பல கலைஞர்களுக்கு சினிமா வாய்ப்பு பெற ஒரு ஆரம்ப கட்டமாக இருந்ததே இந்த லொள்ளு சபாதான். இந்த லொள்ளு சபாவில், பிரபலமானவர்தான், நடிகர் சிரிக்கோ உதயா.. பிறகு, கனா காணும் காலங்கள் உள்ளிட்ட விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றவர்.. ஏராளமான டிவி நிகழ்ச்சிக்கு பிறகு, பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தார்..
பிறகு, சந்தானத்தின் பல படங்களுக்கு காமெடி வசனங்களை எழுதியுள்ளார். அந்த வசனங்கள் எல்லாம் ரசிகர்களால் இன்றும் ரசிக்கப்படுபவை ஆகும்.. 15 வருடங்களாக காமெடி ஸ்கிரிப்ட்டில் பணியாற்றியிருக்கிறார் சிரிக்கோ உதயா, தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் இடம்பெறும் காமெடி வசனங்கள் இவரது எழுத்தில் உருவானதுதான்..
கடுமையான சர்க்கரை நோய்
இந்த நிலையில்தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார் சிரிக்கோ உதயா.. ஒருகட்டத்தில் சர்க்கரை அதிகமாகவும், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு சர்க்கரை நோயின் அதிக தாக்கம் காரணமாக இடது காலை எடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிரிக்கோ உதயாவின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.. இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே, மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் சிரிக்கோ உதயாவுக்கு நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் என பலரும் திரண்டு சென்று தேவையான உதவிகள் செய்திருக்கிறார்கள்.
காலுக்கு ரத்த ஓட்டம் இல்லை
இதுகுறித்து, சிரிக்கோ உதயாவின் மகள் சொல்லும்போது, "இதுவரை சினிமா துறையில் உள்ளவர்களிடம் அப்பாவின் நிலை குறித்து தெரிவிக்கவில்லை. உதவி கேட்டு தொந்தரவு செய்யவும் விரும்பவில்லை
கடந்த சில மாதங்களாகவே அப்பா உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சர்ச்சரை நோய் தாக்கம் அதிகமாகிவிட்டது. காலுக்கு ரத்த ஓட்டம் சரியாக இல்லை.. அதனால், அவருக்கு இடது காலில் முட்டிக்கு கீழ் பகுதி முழுவதும் ஆபரேஷன் மூலமாக எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இப்போது அப்பா நன்றாக இருக்கிறார். விரைவில் வீட்டிற்கு செல்ல இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.
சிரிக்கோ உதயா சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த ஸ்கிரிப்ட் ரைட்டர் மட்டுமல்ல, சிறந்த வயலின் கலைஞரும் கூட. இவர் பல பாடலுக்கு வயலின் வாசித்துள்ளார். தற்போது அறுவை சிகிச்சை மூலம் கால் அகற்றப்பட்டுள்ள உதயா, உதவி வேண்டி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்..!!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications