சூப்பர் ஹிட் டிரைலரில் செம கதாபாத்திரத்தில் ஆஜித்..இந்த படமாவது கை கொடுக்குமா?வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை:சமீபத்தில் ரிலீஸ் ஆகி யூடியூப் ல் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கும் லவ் டுடே படத்தின் டிரைலரில் ஆஜித்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஆஜித்திற்க்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த படம் அவருக்கு வெற்றி பெற்று திரையுலையில் ஒரு நட்சத்திரமாக வருவதற்கு கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
90ஸ் கிட்ஸ் களின் பல்ஸ் அறிந்து படமெடுக்கும் வித்தை தெரிந்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் இப்படத்திற்கு இந்த டிரெயிலர் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.

பிக் பாஸ் பிரபலமாக பிரபலம்
விஜய் டிவியில் ஜூனியர் சூப்பர் சிங்கரில் பாடும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஆஜித் அந்த நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே ஓரளவுக்கு குறும்புத்தனமான சுட்டிப் பையனாக அறிமுகமாகி இருந்தார்.அதற்குப் பின்பு சில நிகழ்ச்சிகளில் பத்தோடு பதினொன்றாக நின்று பாடுவது போன்று சேனல்களில் வருவதும் போவதுமாக இருந்தாலும் பெரிய அளவில் பிரேக் கிடைக்காமல் இருந்தது ஆஜித்திற்கு. ஆஜித்தை தமிழக மக்களிடத்தில் அறிமுகப்படுத்திய விஜய் டிவியே அவரை பிரபலப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

பாசத்தால் கிடைத்த பப்ளிசிட்டி
பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக ஆஜித்தை களம் இறக்கியது விஜய் டிவி.அதற்கு முன்பு வரை ஓரளவு அறிமுகமான முகமாக இருந்தாலும் பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்த ஆஜித் பிக் பாஸ் வீட்டிற்குள் ரம்யா பாண்டியன் உடன்பிறவா சகோதரராக மாறி அவர்களுக்குள் பொழிந்த பாச மழைகளும், ஆஜித்தை போலவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீனியராக பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக வந்திருந்த கேபிரில்லாவுடன் இவருக்கு இருந்த கெமிஸ்ட்ரியும் ஆஜித்திற்கு நல்ல பப்ளிசிட்டியை கொடுத்தது.

பார்வையாளர்களின் ஆதரவை பெற்றது
பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஆஜித் சமூக வலைதளங்களில் தனக்கான பாலோயர்களை அதிகரிக்கும் பொருட்டு அவ்வப்போது தான் பாடும் வீடியோக்களையும், ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களையும் போஸ்ட் செய்து வந்தார். இதன் பலனாக பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து விஜய் டிவி நடத்திய பி பி ஜோடிகள் நிகழ்ச்சியில் கேபிரில்லாவுடன் இவர் இணைந்து பண்ணிய பெர்பாமன்ஸுக்கு எல்லாம் பெரிய அளவிற்கு ஆதரவு குவிந்தது.

ஸ்டார் ஆக வாழ்த்துக்கள்
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த நானே வருவேன் திரைப்படத்தில் நடித்திருந்த ஆஜித் படத்தைக் குறித்தும் தனுசை குறித்தும் நெகிழ்ச்சியாக தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருந்தார். ஆனால் படத்தில் ஒரு சில நிமிடங்களே ஆஜித்திற்கு நடிக்க வாய்ப்பு இருந்தது. பெரும்பாலானோருக்கு அது ஆஜித் தான் என்று கூட தெரிந்திருக்காது.ஆனால் தற்பொழுது வெளியாகி இருக்கும் லவ் டுடே படத்தின் டிரைலரில் ஆஜித்திற்கு முக்கியமான கதாபாத்திரம் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.ட்ரெய்லர் தற்பொழுது வரை யூடியூப் ல் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. பெரிய அளவிற்கு வெற்றி பெற்றுள்ள ட்ரெய்லர் படமாகவும் வெற்றி பெறும் என்று பலர் எதிர்பார்த்து வருகின்றனர்.அப்படி இருக்கும் பட்சத்தில் அதில் நடித்திருக்கும் ஆஜித்திற்கும் பெரிய அளவிற்கு வாய்ப்புகள் வந்து திரைத் துறையில் ஆஜித்தும் அவருக்கென்று ஒரு இடத்தை பெற ஆஜித் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications