Maaman Vs DD Next Level Box Office: டாப் கியரில் மாமன்! டல்லடித்த டிடி நெக்ஸ்ட் லெவல்! வசூல் எவ்வளவு
சென்னை: மாமன் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் ஆகிய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் என்ன என்பது குறித்த ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் ஹாரர் ஜானர் சந்தானத்திற்கு கை கொடுக்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்தது.

லொள்ளு சபா எனும் காமெடி ஷோ மூலம் திரைத்துறைக்கு நுழைந்தவர் சந்தானம். இவர் ஹீரோக்களுடன் சேர்ந்து செய்யும் காமெடி கிளிக்கானதால் இவர் முன்னணி காமெடியனாக வலம் வந்தார்.
காமெடி கை கொடுத்த நிலையில் அவர் திடீரென ஹீரோ சப்ஜெக்ட் படங்களிலும் நடித்து வருகிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் இருந்து காமெடி, ஹீரோ கலந்த ரோல்களில் நடித்து வருகிறார்.
100ஆவது படம்
இவரது 100 ஆவது படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இதைத் தொடர்ந்து அவர் சில படங்களில் ஹீரோ ரோலில் காமெடியனாக கலக்கி வருகிறார். இந்த நிலையில் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் கடந்த மே 16 ஆம் தேதி வெளியானது. இது ஹாரர் படம் என சொல்லப்படுகிறது. இது கடந்த 2023 ஆம் ஆண்டு ஹிட்டடித்த டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.
சூரி நடித்த மாமன்
இந்த நிலையில் அதே நாளில் சூரி நடித்த மாமன் எனும் படமும் வெளியாகியுள்ளது. இது காமெடியும் குடும்ப கதையும் கொண்டது. சூரியும் ஆரம்பத்தில் காமெடியனாக நடித்து பின்னர் விடுதலை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இரண்டுமே காமெடி
இரண்டுமே காமெடி கலந்த படங்கள். சூரியின் மாமன் படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்த படத்தில் ராஜ்கிரண், விஜி, பாபா பாஸ்கர், சுவாசிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அக்காவுக்கும் மனைவிக்கும்
உடன் பிறந்த அக்காவுக்கும் மனைவிக்கும் இடையே மாட்டிக்கொண்டு படாதபாடுபடும் கேரக்டரில் சூரி நடித்துள்ளார். இதை ஒவ்வொரு சீனிலும் உணர்ச்சி பொங்க சொல்லியிருக்கிறார் இயக்குநர். இந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாக்ஸ் ஆபீஸ்
பாக்ஸ் ஆபிஸில் சந்தானத்தின் படத்தை காட்டிலும் மாமன் படம் சக்கை போடு போடுவதாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் முந்திய நிலையில் தற்போது மாமன் படம் டாப் கியரில் செல்கிறதாம். நேற்று 6ஆவது நாளில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் வசூல் ரூ 90 லட்சம் என்கிறார்கள்.
எத்தனை கோடி வசூல்
ஆனால் மாமன் படத்திற்கு ரூ 2 கோடி வசூலானதாக சொல்லப்படுகிறது. இந்த இரு படங்களுமே தமிழகத்தில் இதுவரை ரூ 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மாமன் வசூல்
மாமன் படம் ரிலீஸான நாளில் ரூ 1.75 கோடியும் இரண்டாவது நாளில் ரூ 2.5 கோடியும் மூன்றாவது நாளில் ரூ 3.85 கோடியும் 4ஆவது நாளில் 2.05 கோடியும் 5ஆவது நாளில் 2.25 கோடியும் 6ஆவது நாளில் ரூ 2 கோடியும் வசூலானது. அதாவது மொத்தம் ரூ 14.40 கோடி வசூலானது.
டிடி நெக்ஸ்ட் லெவல் வசூல்
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் முதல் நாள் வசூல் ரூ 3 கோடி, 2ஆவது நாள் ரூ 3.1 கோடியும், மூன்றாவது நாள் ரூ 3.2 கோடியும் 4ஆவது நாள் ரூ 1.4 கோடியும் 5ஆவது நாள் 1.25 கோடியும் 6ஆவது நாள் 90 லட்சமும் என மொத்தம் இதுவரை 12.85 கோடி வசூலானது.












Click it and Unblock the Notifications