இதுதான் என் பதில்.. சர்ச்சைக்கு மத்தியில் மாதம்பட்டி ரங்கராஜன் திடீர் பதிவு! ஆனாலும் இப்படி ஒரு முடிவு!
சென்னை: நடிகர் மற்றும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜன், சமீப காலமாகப் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டினாவுடன் அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்தச் சூழலில், மாதம்பட்டி ரங்கராஜன், தான் கலந்துகொண்ட 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சினிமா பயணம்
மாதம்பட்டி ரங்கராஜன், முதலில் ஒரு சமையல் கலைஞர். கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், மாதம்பட்டி என்ற பெயரில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார். உணவகத் துறையில் இவர் மிகவும் பிரபலமானவர். இவரது சமையல் சேவை பல திரைப்படங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் இடம்பெற்றுள்ளது.
நடிகராக அறிமுகம்
மாதம்பட்டி ரங்கராஜன், 'பென்குயின்' மற்றும் மெஹந்தி சர்க்கஸ் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்ற அதிலும் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் இடம் பிடித்த பாடல்கள் இப்போதும் பலருடைய ப்ளே லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது. மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற கோடி அருவி கொட்டுதே பாடலுக்கு பிறகு பிரபலமடைந்த மாதம்பட்டி ரங்கராஜன் அதற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சின்ன திரையில் இறங்கிவிட்டார்.
சமீபத்திய சர்ச்சைகள்
மாதம்பட்டி ரங்கராஜன் தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டினா என்பவருடன் அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்ததாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியாகி இந்தப் புகார்களுக்கு மேலும் வலு சேர்க்கின்றன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து மாதம்பட்டி ரங்கராஜன் நேரடியாக இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
சமீபத்தில், அவர் தான் கலந்துகொண்ட 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "மசாலாக்கள் முதல் ஸ்டைல்கள் வரை, நாங்கள் உலகத் தட்டுகளை ஆட்சி செய்தோம். குக் வித் கோமாளியில் இந்த வாரம் சிக்கன் சமைப்பதுதான் போட்டியாக இருந்தது. அதற்கு 'ஸ்வாக்' தான் பதிலாக இருந்தது!" என்றும், "இந்த வார இறுதி அத்தியாயங்களைத் தவறவிடாதீர்கள் - முழுக்க முழுக்க தீ மற்றும் வேடிக்கை நிறைந்ததாக இருக்கும்!" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கமெண்ட் ஆப்
இந்தக் குழப்பமான சூழ்நிலையில், சர்ச்சைகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், தனது பணி சார்ந்த பதிவுகளை அவர் வெளியிட்டு வருவது, ரசிகர்கள் மத்தியில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதோடு தன்னுடைய போஸ்ட்க்கு கமெண்ட் செக்ஷனை ஆப் செய்து வைத்திருக்கிறார். தன்னை பற்றி யாரும் நெகட்டிவாக கமெண்ட் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக இவர் இப்படி செய்திருக்கிறார் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications