நெப்போலியன் போட்ட அந்த ஆட்டோகிராப் தான் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்
சென்னை: சமையல் கலைஞராகவும், நடிகராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் தான் முன்னேற வேண்டும் என்ற ஆசை தனக்கு வந்ததற்கு காரணம் நடிகர் நெப்போலியன் போட்ட ஒரே ஒரு ஆட்டோகிராப் தான் என்று தன்னுடைய சிறு வயது நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.
இப்போதுள்ள இளம் தலைமுறையினரால் கொண்டாடும் பிரபலமாக மாதம்பட்டி ரங்கராஜ் இருந்துவரும் நிலையில் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் மாதம்பட்டி ரங்கராஜ் பேசுகையில், ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு ஸ்கூலுக்கு போகும் போது யூனிபார்ம் போட்டுட்டு போவதற்கு கூட சரியான வசதிகள் கிடையாது.

சில நேரங்களில் யூனிபார்ம் எடுத்து வைத்து தராததால் ஸ்கூலில் முட்டி போட்டு நின்றிருக்கிறேன். அதனாலேயே எனக்கு அதிகமாக உடைகள் மீது ஆர்வம் இருக்கிறது. புதியது புதியதாக பலவிதமான உடைகளை போட்டு பார்க்க நான் ஆசைப்படுகிறேன். சின்ன வயசில் எனக்கு கிடைக்காத பல விஷயங்களை இப்போது நான் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
பல விதமான சூ போடுவது எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதுபோல கார் என்னுடைய முதல் பேவரைட் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் புதியதாக ஒவ்வொரு கார் வாங்கும் போதும் எனக்கு அதிகமான சந்தோஷம் கிடைக்கும். நான் அதிகமாக டிராவல் செய்வதை விரும்புவேன். இரண்டு முறை நான் வாகனம் ஓட்டிக் கொண்டு போகும்போது விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால் அப்போது எனக்கு பெரிய அளவில் அடிபட்டது கிடையாது. காரில் மட்டும்தான் அடிபட்டு இருந்தது. அதற்கு காரணம் நான் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்துவது தான் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனாலையே நான் அதிகமான விலை உயர்ந்த கார்களை வாங்குகிறேன். அதுபோல இன்று நான் இவ்வளவு உயர்ந்திருப்பதற்கு காரணம் சின்ன வயதில் என்னுடைய மனதில் ஏற்பட்ட ஒரு ஆசைதான்.

அதாவது நான் ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முறை எங்கள் ஸ்கூல் பக்கத்தில் சினிமா சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அந்த படத்தில் நடிகர் நெப்போலியனும், சுகன்யாவும் நடித்துக் கொண்டிருந்தார்கள். சூட்டிங் பார்த்த எல்லோரும் நெப்போலியனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். நானும் அப்போது அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினேன். அதில் அன்புடன் நெப்போலியன் என்று கையெழுத்து போட்டு தந்தார்.
அந்த நேரத்தில் நெப்போலியனை சுற்றி எல்லோரும் நின்று கொண்டிருந்ததை பார்க்கும்போது எனக்கு இதே போல நாமும் ஒரு நாள் பெரிய ஆளாக வேண்டும் என்று ஒரு சிந்தனை வந்தது. அந்த ஆசைதான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்று அந்த பேட்டியில் மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருக்கிறார்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications