சர்ச்சைக்கு மத்தியில் உருக்கமாக பேசிய மாதம்பட்டி ரங்கராஜன்.. இதை எதிர்பார்க்கவே இல்ல.. ஆனால், நெகிழ்ச்சி வார்த்தை
சென்னை: தமிழ் சினிமாவிலும், பிசினஸிலும் ஒரே நேரத்தில் தன்னை நிரூபித்த சிலரிலேயே முக்கியமானவர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு சாதாரண இளைஞன், இன்று "மாதம்பட்டி ஸ்டைல்" என்றே ஒரு பிராண்டாக மாறியிருக்கிறார் என்பதே அவரின் வெற்றிக் கதை. ஆனாலும் அவர் சமீப காலமாக சந்தித்து வரும் சர்ச்சைகள் அதிகமாக இருக்கும் நிலையில் அவர் பேசிய பேட்டி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கேட்டரிங் உலகிலிருந்து சினிமா வரை
ஆரம்பத்தில் "மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி" என்ற கேட்டரிங் சேவையை தொடங்கிய ரங்கராஜ், திருமணங்கள், பெரிய விழாக்கள், VIP நிகழ்ச்சிகள் என பல இடங்களில் தனது தனித்துவமான சாப்பாட்டு முறையால் கவனம் ஈர்த்தார். குறிப்பாக வாழை இலையில் பரிமாறப்படும் பாரம்பரிய உணவு, சுவை மட்டுமில்லாமல், பிரம்மாண்ட செட்டப் காரணமாக "மாதம்பட்டி ஸ்டைல்" என்று ரசிகர்களிடம் தனி அடையாளம் பெற்றது. சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இவரது கேட்டரிங் சேவையை நாடியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமா & டிவி பயணம்
கேட்டரிங் உலகில் வெற்றி கண்ட பிறகு, ரங்கராஜ் சினிமாவிலும் கால் பதித்தார். மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர், தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்தார். அதற்குப் பிறகு, தொலைக்காட்சியிலும் அவர் பிஸியாகிவிட்டார்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து ரசிகர்களின் அன்பை பெற்றார். சமையல் துறையில் இருந்தவர், அதே துறையிலேயே டிவியில் ஜட்ஜாக வருவது அவருக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
தனிப்பட்ட வாழ்க்கை
ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கையும் அடிக்கடி செய்திகளில் இடம் பெற்றது. ஏற்கனவே இவருக்கு ஸ்ருதி எந்த வருடம் திருமணம் ஆகி இருந்தது ஆனாலும், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்தது பெரிய சர்ச்சையாக மாறியது.
பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், புகார்கள், குழந்தை தொடர்பான விவகாரம் என பல பிரச்சனைகள் எழுந்தன. இறுதியில் டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தைக்கு தந்தை ரங்கராஜ் என்பதும் உறுதியானது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமாக மாறியது.
செஃப் தாமுவுடன் வேலை
இந்த எல்லா சர்ச்சைகளுக்கும் பிறகு, தற்போது ரங்கராஜ் அளித்துள்ள ஒரு பேட்டி மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர் கூறியது என்னவென்றால், சிறு வயதில் செஃப் தாமு நிகழ்ச்சிகளை தனது பெற்றோர் மிகவும் ரசித்துப் பார்த்தார்கள். இன்று அவருடன் ஒரே மேடையில் பணியாற்றுவது தன்னுடைய பெற்றோருக்கு பெருமையாக இருக்கிறது. "அது எனக்கு ஒரு சாதனை மாதிரி தான்". அவர் எனக்கு இப்போ ஒரு நல்ல நண்பராகவும் ஒரு குருவாகவும் பல விஷயங்களில் ஹைடு பண்ணுகிறார் என்று அவர் உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும், பறவை முனியம்மா - செஃப் தாமு இணைந்து நடத்தும் நிகழ்ச்சிகளையும் தனது குடும்பம் தவறாமல் பார்த்ததாக நினைவுகூர்ந்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். கேட்டரிங் நிறுவனம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. திருமண சீசன்களில் முன்பதிவு கிடைக்கவே கடினம் என்ற நிலை இருப்பதாகவும், அவரது சொத்து மதிப்பு பல கோடி ரூபாயை தாண்டும் என கூறப்படுகிறது
சினிமா, டிவி, பிசினஸ் என மூன்றிலும் ஒரே நேரத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் ரங்கராஜ், சர்ச்சைகள் இருந்தாலும் தொடர்ந்து தனது பயணத்தை முன்னெடுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications