Joy: டிஎன்ஏ டெஸ்ட்க்கு ரெடின்னு சொல்லிட்டு இப்படி..? மாதம்பட்டி ரங்கராஜ் போட்டோவை வெளியிட்டு ஜாய் போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ்க்கும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கும் இடையில நடந்துக்கிட்டு இருக்குற சண்டையும், நீதிமன்ற விவகாரமும் இப்போ பெரிய ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்டாக் கொடுத்துட்டு இருக்கு! நீதிமன்றம் வரைக்கும் போன இந்த வழக்கோடக் கதை என்ன, இப்போ இந்தச் சண்டையில புதுசா என்ன நடந்ததுன்னுப் பார்க்கலாம்.

Madhampatty Rangaraj vijay tv cook with comali

சட்ட சிக்கல்

மாதம்பட்டி ரங்கராஜ் தான் தனக்கு முறைப்படித் தாலி கட்டியக் கணவர் என்றும், தான் பெற்றெடுத்த ஆண் குழந்தைக்கு அவர்தான் அப்பா என்றும் ஜாய் தொடர்ந்து சொல்லி வராங்க. பிறப்புச் சான்றிதழையும் சமூக வலைதளத்துல போட்டுப் பரபரப்பை கிளப்பினாங்க. இந்த நிலையில் ரங்கராஜ் போட்ட அவதூறு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துல விசாரணைக்கு வந்தப்போ, நீதிபதி என். செந்தில்குமார் ஒரு கேள்வியைக் கேட்டாரு. ஜாய் கிரிசில்டாவுக்குக் 2024 ஜூலையில்தான் விவாகரத்தே கிடைச்சிருக்கு. ஆனா, அவங்க ரங்கராஜ் கூடக் கல்யாணம் பண்ணது 2023 டிசம்பர்லன்னுச் சொன்னாங்க. அதனால, முதல் விவாகரத்துக்கு முன்னாடி நடந்த இந்தத் திருமணம் எப்படி சட்டப்படிச் செல்லும்?னு நீதிபதி கேள்வி கேட்டாரு.

ஜாய் தரப்பின் குற்றச்சாட்டு

ரங்கராஜ் ஏற்கனவேத் தன் மனைவி ஸ்ருதி பிரியாவை பிரிஞ்சு வாழ்றதா பொய் சொல்லித்தான் பழகினாரு. கல்யாணத்துக்குப் பிறகு, இரண்டு தடவை கட்டாயப்படுத்தி அபார்ஷன் செய்ய வச்சாருன்னும் ஜாய் தரப்பு நீதிமன்றத்துலக் கடுமையானக் குற்றச்சாட்டுகளை வச்சிருக்காங்க.

ரங்கராஜின் கோரிக்கை

இந்த சட்ட சிக்கலுக்கு நடுவுல, ரங்கராஜ் தரப்பு வழக்கறிஞர், ஜாய் பெற்றெடுத்த குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யணும்னு கேட்டாரு. டெஸ்ட்ல அது ரங்கராஜ் குழந்தைன்னு உறுதியானா, வாழ்நாள் முழுக்கக் குழந்தையைக் கவனிச்சுக்கத் தயார்ன்னு வாக்குறுதியும் கொடுத்தாரு.

ஜாய் கிரிசில்டாவின் புது கேள்வி

இந்த வழக்கோட தீர்ப்பு வர்றதுக்கு முன்னாடி, இப்போ ஜாய் கிரிசில்டா தன்னோட சமூக வலைதள பக்கத்துல ஒரு பதிவைப் போட்டுப் பெரிய கேள்வியை எழுப்பி இருக்காங்க: ரங்கராஜை TAG செஞ்சுப் போட்டுருக்க பதிவுல, "DNA பரிசோதனைக்கு நீங்கள் தயார்னு statement கொடுத்துள்ளீர்கள், ஆனால் அவர் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? என்ன பயம்? அடிக்கடிப்பணம் கொடுத்து ஊடகங்களில் எனக்கெதிராக YOUTUBEலயும் செய்திகள்லயுமா தகவல் வெளியீடு செய்கிறீர்கள். நான் அமைதியாக இருந்தாலும் உங்க உள்குத்து என்னன்னு தெரியாமல் இருக்குமா? தைரியம் இருந்தா DNA test-க்கு வாங்க!"ன்னுச் சவால் விட்டு இருக்காங்க.

சட்டப்படித் திருமணம் செல்லுமான்னு ஒரு பக்கம் சண்டை ஓடிக்கிட்டு இருக்க, இப்போ குழந்தைக்கான DNA பரிசோதனையை பத்தி வெளிப்படையாக் கேள்வி கேட்டு, இந்த விவகாரத்தை ஜாய் கிரிசில்டா அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு போயிருக்காங்க. நீதிமன்றத்தோட அடுத்தக் கட்ட உத்தரவு என்னவா இருக்கும்னு திரையுலகமேக் காத்துட்டு இருக்கு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+