விஜய் டிவியின் ஆங்கர் மாகாபா ஆனந்த்! மாகாபா இனிஷியல் இல்லையாமே! அப்படின்னா என்ன அர்த்தம்?
சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த், தனது பெயருக்கு முன்னால் இருக்கும் 'மாகாபா' என்பது தனது இனிஷியல் இல்லை என்பதை விளக்கியுள்ளார். அது ஒரு சுவாரஸ்யமான கதை என்கிறார்.
பல்வேறு எஃப்.எம். ரேடியோக்களில் ஆர்.ஜே.வாகப் பணியாற்றிய ஆனந்த், "சினிமா காரம் காபி" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இந்த நிகழ்ச்சி அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

இதற்கிடையே, "அது இது எது" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயன் வெள்ளித்திரைக்குச் சென்றதால், அந்த நிகழ்ச்சியை யார் நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அந்த நிகழ்ச்சி மாகாபா ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இருந்தே இவருடைய புகழ் அதிகரித்தது.
இதையடுத்து, விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளான சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆஃப் டான்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு, சவுண்ட் பார்ட்டி, ஊ சொல்றியா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
இவரும், இவருடன் இணைந்து பிரியங்கா தேஷ்பாண்டேவும் தொகுத்து வழங்குவதை ஏராளமான ரசிகர்கள் விரும்புகிறார்கள். இருவரும் காமெடியாகத் தொகுத்து வழங்கும் போது ரசிகர்கள் சிரித்து மகிழ்கிறார்கள். இவர்களுக்கு ஒரு எபிசோடுக்கு ₹2 லட்சம் முதல் ₹3 லட்சம் வரை ஊதியம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
'மாகாபா' பெயரின் ரகசியம்
விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளரான மாகாபா ஆனந்தில் இருக்கும் 'மாகாபா' என்பது அவருடைய இனிஷியலாக இருக்கும் என்று ஆரம்பத்தில் பலர் நினைத்தனர். ஆனால் அதுதான் இல்லையாம்.
இதுகுறித்து மாகாபா ஆனந்த் கூறுகையில், "முதலில் நான் சூரியன் எஃப்.எம்.-மில் பணியாற்றினேன். பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ரேடியோ மிர்ச்சியில் வேலை கிடைத்தது. ஆனால், சென்னைக்குச் செல்லுமாறு கேட்டார்கள். அப்போது எனது மனைவி கர்ப்பமாக இருந்ததால், அவரைக் கோயம்புத்தூரில் தனியாக விட்டுவிட்டுச் செல்ல எனக்கு மனமில்லை.
அதனால், கோயம்புத்தூரிலேயே வேண்டும் என்று அடம்பிடித்தேன். எஃப்.எம். மார்க்கெட்டிங் விவரங்களுக்கான ஐ.எம்.ஆர்.பி. (IMRB) கணக்கெடுப்பில் என் பெயர் வந்தது. அப்போது எனது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டார்கள். நானும் என்ன மாற்றலாம் என்று யோசித்தபோது, எனது பாஸ் மிர்ச்சி செந்தில்தான் 'மா.கா.பா.' என்று என் பெயருக்கு முன்னால் ஒரு அடைமொழியைக் கொடுத்தார்.
'மாகாபா' என்றால் இந்தியில் 'அம்மாவுடைய அப்பா' என்று அர்த்தமாம். பின்னர் அதுவே எனது பெயராகிவிட்டது. இந்த பெயரை நான் கெசட்டில் சேர்க்கவில்லை. மற்றபடி எல்லாரும் அழைப்பது 'மாகாபா'தான்" என்று ஆனந்த் தெரிவித்தார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications