மாகபா பாடிய வளையோசை கலகல.. ரொம்ப லகலக..ங்க!
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ உலகத் தமிழர்கள் மத்தியில் ரொம்ப பிரசித்தி பெற்ற ஷோ.
எல்லாருக்கும் பிடித்தமான இந்த நிகழ்ச்சியில் செலிபிரிட்டி ஸ்பெஷல் நிகழ்ச்சி என்று கடந்த இரண்டு வாரம் களைக்கட்டியது.
அதாவது போட்டியாளர்கள் செலிபிரேஷன் மூடில், அதே மாதிரி உடை அணிந்து பாடுவார்கள். முதலில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரியங்கா ரண்டக்க பாடலை பாடி அசத்தினார்.

வெற்றி ரகசியம்
விஜய் டிவி வெற்றி ரகசியமே திறமையாளர்களை முடக்கிப் போடுவது அல்ல. என்னதான் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தாலும், அவர்களுக்கு என்று ஒரு தனி ஸ்பேஸ் கொடுத்து அழகு பார்ப்பதில் விஜய் டிவிக்கு நிகர் விஜய் டிவிதான். திறமையாளர்களை ஊக்குவிப்பதில் தனித்தன்மை விஜய் டிவிக்கு உண்டு.

பொழுது போக்கு
நிகழ்ச்சியில் காமெடி பொழுது போக்கு, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது என்று மட்டுமே பிரியங்கா, மகபா ஆனந்த் இவர்களைத் தெரியும். ஆனால், இவர்களுக்கு ஒரு புரஃபஷனல் சிங்கர் போல பாடவும் தெரியும் என்று அவர்களுக்கு பயிற்சி கொடுத்து பாடவும் வைத்து அழகு பார்த்து இருக்கிறது விஜய் டிவி.

ஸ்வேதாவுடன் மகபா
பாடகி ஸ்வேதாவுடன் மகபா சத்யா படத்தின் கமல்ஹாசன் கெட்டப் போலாவந்து வளையோசை கலகல கலவென்று பாடலை பாடி அசத்தினார். கொஞ்சமும் ஷ்ருதி விலகாமல் சுத்தமாக பாடியதாக நடுவர்கள் பாரட்டினார்கள். நடுவில் இவர் ஆடிக்கொண்டே பாடியதும் ரசிக்கும்படி இருந்தது.

சாப்பிட்டாலும் குளிச்சாலும்
ஒரு வாரம் சாப்பிட்டாலும், குளிச்சாலும் இந்தப் பாடலைத்தான் சத்தமாக ஒலிக்கவிட்டு பயிற்சி எடுத்ததாக மகபா கூறினார். சிறு வயது முதலே இந்த பாடல் தனக்குப் பிடிக்கும்.பாடலில் நடித்த அமலாவையும் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
தங்கமான வாய்ப்புக்களை எல்லாரும் எல்லா நேரத்திலும் வழங்கிவிடுவதில்லை. அந்த வகையில் விஜய் டிவியை பாராட்டலாம்.












Click it and Unblock the Notifications