விஜயகாந்த் இல்லாட்டி நான் இல்லை.. மன்சூர் அலிகான் உருக்கமாக வெளியிட்ட தகவல்.. ஃபீல் பண்ண வச்சிட்டாரே
சென்னை: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ராஜூ வூட்டுல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் விஜயகாந்த் பற்றி உருக்கமான தகவல்களை கூறியுள்ளார்.
திரைப்படங்களில் வில்லனாக பார்த்திருந்த ரசிகர்கள் மன்சூர் அலிகானுக்குள் இப்படி ஒரு குணம் இருக்கிறதா என்று வியந்து போய் உள்ளார்களாம்.
விஜயகாந்த் இல்லை என்றால் நான் இன்று இல்லை. நான் மட்டுமல்ல என்னை போல பலபேரை உருவாக்கி அழகு பார்த்தவர் அவர்தான் என்று உருக்கமாக மன்சூர் அலிகான் பேசியதற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய ஹாட்டின்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

விஜய் டிவி நிகழ்ச்சி
விஜய் டிவியில் புது நிகழ்ச்சியாக ராஜூ வூட்டுல பாட்டி என்னும் நிகழ்ச்சி நடந்து வருகிறது இந்த நிகழ்ச்சியில் காமெடி களைகட்டிக் கொண்டிருக்கிறது. ராஜுவின் வீட்டுக்கு ஒவ்வொரு வாரமும் பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வருகிறார்கள். இவர்களோடு லூட்டி அடிக்க மதுரை முத்து, விஜய் டிவி ராமர் போன்ற நகைச்சுவை நடிகர்களும் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த வார சிறப்பு விருந்தினராக நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டிருக்கிறார். அவர் எதார்த்தமான பேச்சால் பலரையும் சிரிக்க வைத்து மட்டுமல்லாமல் கண் கலங்கவும் வைத்துள்ளார்.

ஃபேவரைட் வில்லன்
நடிகர் மன்சூர் அலிகான் திரைப்படங்களின் வில்லனாக பலரையும் மிரட்டி உள்ளார். அதுவும் 90ஸ் திரைப்படங்களில் விஜயகாந்த் உடன் அதிகமான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார். இவரை பார்த்ததும் பல 90ஸ் கிட்ஸ்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு எதார்த்தமான பேச்சு மட்டுமல்லாமல் உடல் அசைவின் மூலமாகவும் அப்படியே கேரக்டராக மாறி இருக்கிறார். அவர் தற்போது ராஜூ வூட்டுல பார்ட்டி எனும் நிகழ்ச்சியில் பேசியது தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம். அப்போது விஜய் டிவி ராமர் மன்சூர் அலிகானிடம் உங்களை அடிச்சு பாப்புலர் ஆனவங்க நிறைய பேரு இருக்காங்க.. நீங்க எப்பவாவது இவங்க கிட்ட எல்லாம் அடி வாங்கணுமா..!??என்று நினைச்சு இருக்கீங்களா என்று கேட்டதும் அதற்கு மன்சூர் அலிகான் அப்படியெல்லாம் சத்தியமா நான் நினைச்சதே இல்லை என்று கூறியிருக்கிறார்.

எப்போதுமே விஜயகாந்த் தான்
உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று ராமர், மன்சூர் அலிகான் இடம் கேள்வி கேட்டதும் அதற்கு எப்போதுமே நமக்கு விஜயகாந்த் தான். அவர் கிட்ட உதை வாங்குவதை நான் பெருமையா நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார். அதைத்தொடர்ந்து உங்க வாழ்க்கையில் விஜயகாந்த் சார் எவ்வளவு முக்கியம் என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு, மன்சூர் அலிகான் ரொம்ப முக்கியம். அவர் இல்லாட்டி நான் இல்ல. நான் சொத்தை விக்கிறேன் வாங்குறேன் எதுவாக இருந்தாலும் அவரால் மட்டும்தான் என்று கூறி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் என்னை மாதிரி நூத்துக்கணக்கான பேர அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவரால் பல பேர் வாழ்க்கை நல்லாத்தான் இருந்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

கால் பவர்
அதுமட்டுமல்லாமல் விஜயகாந்த் தங்கமான மனுஷன் அவருக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை என்று தெரியவில்லை. கேப்டன் இரண்டுக்காக ரெடியா இருக்கிறேன். கேப்டன் தான் எந்திரிச்சு வரணும். பேக் கீ கொடுப்பார், ஒரு கால ஊன்றி இன்னொரு காலால் ரவுண்டு அடித்து வருவார். அவர் கால் ஒன்று அவருக்கு ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம். திருமலை நாயக்கர் தூண் மாதிரி இருக்கும் என்று அவரைக் குறித்து உருக்கமான பல தகவல்களை கூறியிருக்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜயகாந்த் மற்றும் மன்சூர் அலிகான் குறித்து வருத்தத்தையும் பெருமையாகவும் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications