Mareesan Review: ஃபகத் பாசில் வடிவேலுவின் மர்ம பயணம்.. மாரீசன் வெற்றி பெற்றாரா? இல்லையா? ஒரு அலசல்
சென்னை: இந்திய அளவில் அறியப்பட்ட நடிகர் ஃபகத் பாசில் மற்றும் தமிழ் சினிமாவின் நவரச நாயகன் வடிவேலு ஆகியோர் மீண்டும் இணைந்து, சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாரீசன்' திரைப்படம் இன்று (ஜூலை 25) திரையரங்குகளில் வெளியானது. 'மாமன்னன்' பட வெற்றிக்குப் பிறகு வடிவேலுவின் அடுத்த முக்கியமான படைப்பு என்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அது 'மாமன்னன்' வெற்றியைப் பெற்றதா? விரிவாக அலசுவோம்.

மாரீசன் கதைக்களம்
பாளையங்கோட்டை சிறையிலிருந்து ரிலீஸாகும் ஃபகத் பாசில், தனது பழைய திருட்டுத் தொழிலைத் தொடர நினைக்கிறார். அப்படி ஒரு வீட்டில் திருட நுழையும்போது, அங்கு சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் வடிவேலுவைக் காண்கிறார். வடிவேலுவின் மகன் அவரை சங்கிலியால் கட்டி வைத்துவிட்டு வேலைக்குச் சென்றிருக்கிறார்.
திருடன் எனத் தெரிந்தும், வடிவேலு ஃபகத்திடம் தன்னை அங்கிருந்து காப்பாற்றினால், ATM-ல் பணம் எடுத்துத் தருவதாகக் கூறுகிறார். வடிவேலுக்கு ஒரு வினோதமான நோய் உள்ளது - தனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நடந்ததையும், தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மறக்கும் வியாதி அது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஃபகத், வடிவேலுவின் வங்கிக் கணக்கில் இருக்கும் 25 லட்சத்தைத் திருட அவருடனேயே பயணிக்கிறார். இந்த எதிர்பாராத பயணம், வடிவேலு சில நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, ஃபகத் அவரை அந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்கிறார்.
ஆனால், அங்குதான் அசுரத்தனமான திருப்பம்! வடிவேலு யாரையெல்லாம் பார்க்க வேண்டும் என நினைக்கிறாரோ, அவர்கள் அனைவரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். உண்மையிலேயே வடிவேலுக்கு ஞாபக மறதிதானா? அல்லது அவர் ஒரு பெரிய மர்மத்தின் பின்னணியில் இருக்கிறாரா? என்பன போன்ற புதிரான முடிச்சுகளே 'மாரீசன்' திரைப்படத்தின் மீதிக் கதை.
படத்தைப் பற்றிய அலசல்
படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு குறியீடு: ஒரு எலி தன்னைக் கொல்ல வருபவரிடம் இருந்து தப்பித்து, ஒரு பாம்பின் பிடியில் சிக்கிக்கொள்கிறது. இந்தக் காட்சி, படத்தின் கதையின் ஆழமான மையக்கருவை, அதாவது ஒரு ஆபத்திலிருந்து தப்பித்து இன்னொரு ஆபத்தில் சிக்கும் கதாநாயகனின் நிலையைக் குறியீடாக உணர்த்துகிறது.
ஃபகத் பாசில்
ஃபகத் பாசில் தன்னுடைய கேரக்டரில் அசால்ட்டாக அசத்துகிறார். திருட்டு வேலைகளை அவர் செய்யும் விதம், 'இவர் நடிக்கிறாரா, இல்லை அப்படியே இருக்கிறாரா?' என்று கேட்கத் தோன்றுகிறது. அவரது கண்களில் தெரியும் அந்த நயவஞ்சகம், பார்வையாளர்களை உலுக்கி எடுக்கிறது. திருடனாய் வந்தாலும், ஒரு மனிதனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் அவனது தடுமாற்றங்களை ஃபகத் கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறார்.
வடிவேலு
'மாமன்னன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, வடிவேலு இந்தப் படத்தில் ஒரு செம எமோஷனல் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். ஆரம்பத்தில் தனக்கு மறதி நோய் இருப்பதாக அவர் வெளிப்படுத்தும் உடல்மொழி, இயல்பான கோமாளித்தனங்கள், பின்னர் அவரது கதாபாத்திரத்தில் நிகழும் அதிரடி மாற்றம் என வடிவேலு, ஃபகத்துக்குச் சவால் விட்டு நடித்துள்ளார். அவரது முகபாவனைகளும், வசன உச்சரிப்புகளும் கதாபாத்திரத்திற்குப் பெரும் உயிர் கொடுத்துள்ளன.
ட்விஸ்ட் கலந்த த்ரில்லர்
படத்தின் முதல் பாதி ஒரு 'பீல் குட்' பயண அனுபவமாகத் தொடங்கி, பார்வையாளர்களை ஆஹா என்று நினைக்க வைக்கிறது. ஆனால், இடைவேளையில் வரும் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட், கதையின் போக்கையே முழுவதுமாக மாற்றி, ஒரு த்ரில்லர் பாதையில் இழுத்துச் செல்கிறது. வடிவேலு எதற்காக இப்படி நடந்துகொள்கிறார், இந்தக் கொலைகளுக்குப் பின்னணி என்ன என்பதை இயக்குநர் சுதீஷ் ஷங்கர் இணைத்த விதம் அருமை. ஆனால், இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள், பார்வையாளர்களுக்கே ஓரளவு யூகிக்கக் கூடியதாக இருப்பது ஒரு சிறு பின்னடைவு.
ஃபகத், வடிவேலு யார் என்ற உண்மையை அறிந்துகொள்ளும் பயணத்தில், அந்த இடங்கள் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடியிருக்கலாம். அதற்கான களம் அங்கு இருந்தது. வடிவேலு என்றாலே காமெடிதானே என எதிர்பார்த்து வந்தவர்களுக்கு இந்தப் படத்தில் காமெடி இல்லை என்றாலும், ஒரு உணர்வுப்பூர்வமான த்ரில்லர் அனுபவமே காத்திருக்கிறது. குறிப்பாக, ஃபகத் தனது மகன் என்று நினைத்து சிகரெட் பிடிக்கும் பகத்தை வடிவேலு கன்னத்தில் அறைவதும், அடுத்த காட்சியிலேயே ஃபகத் வடிவேலுவிடம் "நான் யாருன்னு சொல்லுங்க" என்று கேட்டு சிகரெட் பிடிப்பதும் போன்ற காட்சிகள் செம கலகலப்பு. இவை இருவரின் ரசாயனப் பிணைப்பைக் காட்டுகிறது.
மாரீசன் வெற்றி பெற்றதா
'மாரீசன்' திரைப்படம், 'மாமன்னன்' போன்று ஒரு சமூகப் பிரதிபலிப்பாக இல்லாமல், ஒரு வித்தியாசமான த்ரில்லர் பயணமாக உருவாகியுள்ளது. வடிவேலுவின் நடிப்பு 'மாமன்னன்' படத்தைப் போல உணர்வுபூர்வமானது என்றாலும், கதைக்களம் முற்றிலும் வேறுபட்டது. எனவே, இந்தப் படம் 'மாமன்னன்' போன்று ஒரு சமூக மாற்றத்திற்கான படமல்ல, ஆனால், ஒரு சிறந்த த்ரில்லர் படமாக, ஃபகத் மற்றும் வடிவேலுவின் அசாத்திய நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து, வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'மாமன்னன்' வெற்றி வேறு ஒரு தளத்தில், 'மாரீசன்' வெற்றி வேறு ஒரு தளத்தில்!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications