"உனக்கு சாராயம் கொடுக்கல, புத்தகம் கொடுத்திருக்கேன்!" திருநெல்வேலியில் மாரி செல்வராஜ் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிச்சிருக்கிற 'பைசன் - காளமாடன்' திரைப்படம் ரிலீஸானதுல இருந்தே சமூக வலைதளங்கள்ல ஒரே விவாதம்தான்! தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸான இந்த படம், மாரி செல்வராஜுக்குக் கிடைச்ச ஐந்தாவது வெற்றி படம்னு சொல்லலாம். இப்போ, இந்த வெற்றியைத் தொடர்ந்து, தன்னோட சொந்த ஊரான திருநெல்வேலியில ரசிகர்களைச் சந்தித்தமாரி செல்வராஜ், அங்க சில ரசிகர்கள் நடந்துகிட்ட விதத்தை பார்த்து பேசுனதுதான் இப்ப பெரிய ட்ரெண்டிங்!

Mari Selvaraj Dhruv Vikram Tirunelveli

பைசனுக்கு பின் வாழ்க்கை

கதை என்ன? தமிழ்நாட்டோட தென்மாவட்டங்கள்ல நிலவும் சாதியை மையமா வெச்சு, வன்முறை சூழல்ல இருந்து வந்த ஹீரோ கபடி மூலமா தேசிய அளவுல சாதிச்சு காட்டுறதுதான் இந்த படத்தோட மையக் கதை. இது அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனோட வாழ்க்கையோட, மாரி செல்வராஜ் சந்தித்த வலிகள் மற்றும் கற்பனைகளைச் சேர்த்து எடுத்த படம்.

துருவ்வுக்கு திருப்புமுனை

துருவ் விக்ரம் இந்த படத்துக்காக இரண்டு வருஷம் கபடி பயிற்சி எடுத்தாராம். தென் மாவட்ட இளைஞர்களோட வாழ்வியலையும் கத்துக்கிட்டாராம். 'பைசன்' படத்துக்கு முன்னாடி, 'பைசனுக்குப் பின்'னு துருவ் விக்ரமின் திரைப்பயணத்தை இனி பிரிக்கலாம்னு சொல்ற அளவுக்கு, அவரது உழைப்பு ஒவ்வொரு ஃப்ரேம்லயும் இருந்திருக்கு.

மாரி மேஜிக்

சொந்த சாதிக்குள்ளேயே இருக்கும் பகை, வலுக்கட்டாயமா பிடிச்சிருக்கிற சாதி வெறின்னு, மாரி செல்வராஜ் இந்த படத்துலயும் யாரும் பேசாத முக்கியமான விஷயங்களைத் திரையில பேசியிருக்கார். இதனாலதான் ரசிகர்கள் முதல் செலிபிரிட்டிகள் வரை படத்தை கொண்டாடுறாங்க.

திருநெல்வேலியில் நடந்த சலசலப்பு

படம் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தும், துருவ் விக்ரம் பெரிசா தியேட்டர் விசிட் எதுவும் பண்ணாம இருந்தாரு. இந்தச் சூழல்லதான், நேற்று (அக்டோபர் 20) மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், ரஜிஷா, அனுபமான்னு படக்குழுவினர் திருநெல்வேலியில் இருக்கிற ஒரு தியேட்டருக்குப் போனாங்க. நம்ம ஊர்க்காரர் ஜெயிச்சு வந்திருக்காருன்னு ரசிகர்கள் பெரிய வரவேற்பை கொடுத்தாங்க.

மாரி செல்வராஜின் கோபம்

தியேட்டர்ல மாரி செல்வராஜ் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரோட சொந்த ஊர் ரசிகர்கள் சிலர் சத்தம் போட்டு கொண்டும், ஆடிக்கொண்டும் இருந்திருக்காங்க. இதை பார்த்த மாரி செல்வராஜ் கோபப்பட்டு உடனே பேசியதுதான் இப்போ வைரலாகியிருக்கு:

"நான் ஒன்னும் உனக்கு சாராயம் கொடுக்கல ஆடுறதுக்கும், கத்துறதுக்கும்! ஏன் கத்துற? கத்தாத! உனக்கு நான் புத்தகம் தான் கொடுத்திருக்கேன்... சினிமா புத்தகமாக இருக்கணும்னு தான் ஆசைப்படுறேன். நான் உனக்குச் சாராயம் கொடுத்து ஆட வைக்க வரல! தயவு செஞ்சு சாராயம் கொடுத்த மாதிரி ஆடாதீங்க!" என்று கண்டிச்சிருக்கார்.

பக்குவம் இல்லாமல் நடந்துகிட்ட ரசிகர்களை, மாரி செல்வராஜ் ஒரு வாத்தியார் அல்லது சகோதரர் ஸ்தானத்தில் இருந்து கண்டிச்சிருக்காருன்னு பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவிச்சிட்டு வராங்க. இது மூலமா, தன்னோட படங்கள் வெறும் பொழுதுபோக்கு இல்லை; அது ஒரு சினிமா புத்தகமா இருக்கணும்னு அவர் எதிர்பார்க்கிறார்னு புரியுது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+