மாதம்பட்டி ரங்கராஜனின் முதல் மனைவி வெளியிட்ட போஸ்ட்! அதிரடியாக ஜாய் கிறிஸ்டில்லா பகிர்ந்த ஸ்டோரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சை, அடுத்தடுத்த பதிவுகளால் மீண்டும் சூடுபிடித்துள்ளது. தனது முதல் மனைவியைப் பிரிந்து, கர்ப்பமாக இருக்கும் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டாவை ரங்கராஜ் விலக்கி வைத்திருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் முதலில் ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி ஒரு குறியீட்டுப் பதிவை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, தற்போது ஜாய் கிரிஸில்டா, தான் விரைவில் தாயாகப் போகும் மகிழ்ச்சியில், கணவரின் பிரிவினால் உண்டான வேதனையையும் சேர்த்து வெளிப்படுத்தும் விதமாகப் புதிய பதிவை வெளியிட்டுள்ளார்.

Mathampatti Rangaraj Joy Chrisilda Shruti vijay tv

மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை

மாதம்பட்டி ரங்கராஜ், தனது முதல் மனைவியான ஸ்ருதியை விவாகரத்து செய்யாமலேயே, ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைச் சந்தித்தது. ஜாய் கிரிஸில்டா கர்ப்பமான சில காலத்திலேயே, ரங்கராஜ் அவரை விட்டு விலக ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட ஜாய் கிரிஸில்டா, ரங்கராஜ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் ஜாய் கிரிஸில்டாவிடம் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா ஒரு பேட்டியில், "இந்த இரண்டாவது திருமணம் குறித்து ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதிக்கு எல்லாமே தெரியும்" என்று வெளிப்படையாகக் கூறியது, இச்சந்தேகங்களுக்கு மேலும் வித்திட்டது.

மௌனம் கலைத்த முதல் மனைவி ஸ்ருதி

ஜாய் கிரிஸில்டாவின் பேட்டி மற்றும் புகார்களுக்குப் பிறகு, இதுவரை இந்தச் சர்ச்சை குறித்து மௌனம் காத்து வந்த ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் முதன்முறையாக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில், "நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாவிகள்தான். நமக்கு வசதியான பாவங்களைத் தேர்ந்தெடுக்கிறோம், நமக்கு வசதி இல்லாத பாவங்களைச் செய்யும் மற்றவர்களை நியாயந்தீர்க்கிறோம்" என்ற சூஃபி ஞானியின் மேற்கோளைப் பகிர்ந்திருந்தார். இது, "யாரையும் குறை சொல்லாதீர்கள்" என்று பொது சமூகத்திற்கு வைக்கப்பட்ட ஒரு குறியீட்டுப் பதிவாக பார்க்கப்பட்டது.

கர்ப்பிணி ஜாயின் பதிவு

ஸ்ருதியின் இந்தப் பதிவைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தன் கர்ப்ப காலத்தைக் குறிக்கும் வகையில் கைகளில் அதிகமான வளையல்களை அணிந்தபடி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் படத்துடன் அவர் வெளியிட்டிருக்கும் கேப்ஷனில், இன்னும் சில வாரங்களில் தனது குழந்தை (மாதம்பட்டி ராகா ரங்கராஜ்) பிறக்கப் போவதாகவும், அதேசமயம் வாழ்க்கையின் கசப்பான உண்மையையும் குறிப்பிட்டுள்ளார்.

ஜாய் கிரிஸில்டா பதிவில்

"அவளுக்கு (பிறக்கப் போகும் குழந்தைக்கு), மனிதர்கள் நாடகம் நிறைந்தவர்கள், மனிதர்கள் சூழ்நிலைவாதிகள், இந்த மனிதர்கள் எப்போதும் காரண காரியவாதிகளைப் போல் செயல்படுவார்கள் என்றெல்லாம் தெரியாது. அவள் நம் மனிதர்களை எப்போதுமே நம்புவாள்." ஜாய் கிரிஸில்டாவின் இந்தப் பதிவு, தான் ஒரு தாயாகப் போகும் மகிழ்ச்சியையும், அதேசமயம், தனது வாழ்க்கையில் நடந்திருக்கும் கசப்பான அனுபவங்களையும், மனிதர்கள் சூழ்நிலைக்குத் தகுந்தபடிமாறிவிடுவார்கள் என்று சொல்வது போல இருக்கிறது.

முதல் மனைவி ஸ்ருதியின் 'பாவிகள்' என்ற பதிவிற்கு, "மனிதர்கள் நாடகம் நிறைந்தவர்கள்" என்று ஜாய் கிரிஸில்டா பதில் கொடுத்திருக்கிறாரா? அல்லது, தனது குழந்தைக்குத் தன் கணவரைப் பிரிந்த சோகத்தைச் சுட்டிக் காட்டுகிறாரா? என்ற கேள்விகளை இந்த உருக்கமான பதிவு ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. மொத்தத்தில், ரங்கராஜ் மீதான விவாகரத்துச் சர்ச்சை, இரு மனைவிகளின் உணர்ச்சிப்பூர்வமான பதிவுகளால் தொடர்ந்து தமிழ்நாட்டில் பேசுபொருளாகவே நீடிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+