Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம்பட்டி ரங்கராஜன் 2 மனைவிகளும் ஒரே நேரத்தில் போட்ட போஸ்ட்.. ஒரு முடிவோட தான் இருக்காங்க போல!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜின் குடும்ப விவகாரம்தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய பேசுபொருளாகியிருக்கிறது. இரண்டாம் மனைவி ஜாய் கிறிஸில்டா அவர் மீது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த நிலையில், இருவரும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் பதிவுகள் இந்தச் சர்ச்சைக்கு மேலும் சூட்டைக் கிளப்பியுள்ளன.

Mathampatti Rangaraj Joy Crisilda Cook with Comali Vijay TV

ஜாய் கிறிஸ்டில்லா பதிவு

மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிறிஸில்டா, 'திருமணம் செய்து ஏமாற்றியது, துன்புறுத்தியது' போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதற்கு முன்பே, ரங்கராஜ் ஜாய் கிறிஸ்டில்லா தொடர்ந்து தன் மீது அவதூறு பரப்பி வருவதாகவும், அதனால் தன்னுடைய நிறுவனம் நஷ்டம் அடைந்ததாகவும் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்தச் சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில், ஜாய் கிறிஸில்டா தனது கர்ப்ப காலத்தை பற்றிய உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

நேற்று வெளியிட்ட பதிவில் அவர் மருத்துவமனைப் படத்தைப் பகிர்ந்துள்ளதோடு, "மருத்துவமனை அறையின் அமைதியை விட, தன்னுடன் இருப்பதாக உறுதியளித்த ஒருவரின் அமைதிதான் வலிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "ஒவ்வொரு முறையும் மருத்துவர், 'குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் எங்கே?' என்று கேட்கும் போதும், வார்த்தைக்குப் பதிலாக நான் கண்ணீரை விழுங்குகிறேன்" என்று தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனாலும், தன் உள்ளிருக்கும் குழந்தை தனக்கு நம்பிக்கையைத் தருவதாகவும், "ஒரு நாள், இந்தக் குழந்தை தன் அம்மா ஒருபோதும் சரணடையவில்லை என்பதை அறிந்துகொள்ளும்!" என்றும் அவர் உறுதியுடன் பதிவிட்டுள்ளார். அதோடு, #karmawillservethemsoon (கர்மா அவர்களுக்கு விரைவில் பதிலளிக்கும்) என்ற ஹாஷ்டேக்கையும் சேர்த்திருக்கிறார்.

முதல் மனைவியின் துபாய் போஸ்ட்

ஜாய் கிறிஸில்டா கண்ணீருடன் புகார் கொடுத்த பரபரப்பு அடங்குவதற்குள், ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு, இந்தப் பிரச்சனைக்கு வேறு ஒரு கோணத்தைக் கொடுத்திருக்கிறார்.

அவர், தான் மிகவும் மகிழ்ச்சியாகப் புன்னகைக்கும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், "Energising with Vitamin D(ubai) #habibiyouarethebest" என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த ஹாஷ்டேக்கில் 'ஹபிபி' (Habibi - அரபு மொழியில் அன்பானவரை அழைப்பது) என்று குறிப்பிட்டிருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு கர்ப்பிணி மனைவி, கணவர் மீது புகார் கூறி கண்ணீருடன் போராடும் இந்தச் சூழலில், முதல் மனைவி வெளியிட்டிருக்கும் இந்த 'மகிழ்ச்சியான துபாய்' பதிவு, ஜாய் கிறிஸில்டாவின் புகார்களுக்கு ஒரு மறைமுகப் பதிலடியா என்றும், இந்தச் சர்ச்சையைக் கண்டு தான் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறுவது போலவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஸ்ருதி பதிவு வெளியிட்ட சில நிமிடங்களில் ஜாய் கிறிஸ்டில்லா மாதம்பட்டி ரங்கராஜனுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து "ஹலோ டாடி மாதம்பட்டி ரங்கராஜ்.. ரெடியா? ஆரம்பிக்கலாமா டாடி? இன்னும் சில வாரம்தான் இருக்கு! இப்படிக்கு உங்கள் வாரிசு மாதம்பட்டி ராகா ரங்கராஜ் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த இரண்டு பதிவுகளும் மாதம்பட்டி ரங்கராஜின் குடும்பப் பிரச்சனையில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறதா, அல்லது இவை இரண்டின் பின்னணியிலும் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+