யாரு சாமி இவரு? சர்ச்சைகள் ஒருபக்கம் இருக்க, மீண்டும் மாலையும் கழுத்துமாக மாதம்பட்டி ரங்கராஜ்! குவியும் வாழ்த்து
சென்னை: சமீப நாட்களாக இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் பெயர்களில் ஒன்று மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபலமான சமையல் கலைஞராகவும், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் நடுவராகவும் வலம் வரும் இவர், இப்போது தன் தொழில் வளர்ச்சியால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட சர்ச்சை தான் இணையத்தில் அதிகம் அடிபடுகிறது. இந்தச் சர்ச்சைக்கு மத்தியிலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், தன் தொழிலில் முழு கவனத்தைச் செலுத்தி, தென்னிந்தியாவின் சுவைகளைத் தலைநகர் டெல்லி வரை கொண்டு சென்றிருக்கும் இவருடைய செயல் இப்போது வைரலாகி வருகிறது!

சமையல் கலைஞர் முதல் கதாநாயகன் வரை
மாதம்பட்டி ரங்கராஜ் வெறும் சமையல் கலைஞர் மட்டுமல்ல. இவர், சமையல் கலைஞராகப் பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அனைவராலும் அறியப்பட்டவர். இவருடைய சமையலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டில் இருக்கிறது.
சமையல் மட்டுமின்றி, இவர் "மெஹந்தி சர்க்கஸ்" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அந்தப் படம் பெரிதாக வரவேற்பைப் பெறாவிட்டாலும், இவருடைய முயற்சி பாராட்டப்பட்டது. இவர், ஏற்கனவே ஸ்ருதி என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இந்தக் காதல் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் சமையலில் கவனம்
அண்மைக் காலமாக, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் இரண்டாம் திருமணச் சர்ச்சைதான் இணையத்தில் உச்சக்கட்ட பரபரப்பைக் கிளப்பியது. கல்லூரி நாட்களில் இருந்தே ஜாய் கிரிஸில்டாவுக்கு மாதம்பட்டி ரங்கராஜை அறிமுகம் என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில், ஜாய் கிரிஸில்டா, ரங்கராஜ் மீது பல குற்றச்சாட்டுகளை வைக்க, அது சமூக வலைதளங்களில் பெரிதாகப் பேசப்பட்டது.
தற்போது, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஜாய் கிரிஸில்டா, ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும், அவர் தன்னை ஒதுக்குவதாகவும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இந்தப் பிரச்சனைகள் ஒருபுறம் போய்க்கொண்டிருந்தாலும், மாதம்பட்டி ரங்கராஜ் அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலத் தன்னுடைய தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
'குக் வித் கோமாளி சீசன் 6' நிகழ்ச்சியில் நடுவராக இறுதிவரை பங்கேற்றுத் தன் பயணத்தை வெற்றிகரமாக அவர் முடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூரிலிருந்து கன்னாட் பிளேஸ் வரை
தற்போது, அனைத்து சர்ச்சைகளுக்கும் மத்தியிலும், மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள ஒரு காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்தியாவின் மனதைத் தொடும் சுவைகளை நாட்டின் தலைநகர் டெல்லிக்கு கொண்டு செல்கிறார்!
"கோயம்புத்தூரிலிருந்து கன்னாட் பிளேஸ் வரை ஒரு சுவைப் பயணம்..." எனக் குறிப்பிட்டு, டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ்-ல் (Connaught Place) தனது மாதம்பட்டி டிஃபன் சென்டரின் புதிய கிளையைத் திறந்திருக்கும் காணொளியைப் பகிர்ந்திருக்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கைச் சர்ச்சைகளால் பெயர் அடிபட்டாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தன் சமையல் தொழிலின் மூலம் தேசத்தின் தலைநகரில் கொடி நாட்டியிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் இந்தப் பயணம், "யாரு சாமி இவரு?" என அனைவரையும் ஆச்சரியத்துடன் கேட்க வைத்திருக்கிறது! டெல்லியில் இவருடைய கோயம்புத்தூர் சுவை எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications