குழந்தையின் பெயரை அறிவித்த மாதம்பட்டி ரங்கராஜனின் 2வது மனைவி! நேற்றைய சம்பவத்திற்கு பதிலா? குவியும் கமெண்ட்ஸ்
நசென்னை: சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட விவகாரம், இன்னும் ஓய்ந்தபாடில்லை. கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ரங்கராஜ், தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் கலந்துகொண்ட நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஜாய் கிரிசில்டா, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஜாய் கிரிசில்டாவின் பதிவு
ஜாய் கிரிசில்டா, தான் மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக, கடந்த ஜூலை 26-ம் தேதி அறிவித்தார். அந்த அறிவிப்பு வந்த சில மணிநேரத்திலேயே, தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அவர் ட்வீட் செய்திருந்தார். இதைப்பார்த்த சமூக வலைத்தளவாசிகள், "கர்ப்பமாகிவிட்டுத்தான் கல்யாணமே நடந்ததா?" என்று கேள்வி எழுப்பினர்.
திருமண வாழ்க்கை
தற்போது, ஜாய், தனது எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில், "நாங்கள் சில ஆண்டுகளாக கணவன், மனைவியாகப் பயணித்து வருகிறோம் (மிஸ்டர் அன்ட் மிஸஸ் ரங்கராஜ்)," என்று தெரிவித்துள்ளார். மேலும், "இந்த ஆண்டு, நாங்கள் எங்கள் குழந்தையை வரவேற்க தயாராகியிருக்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று, கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மாதம்பட்டி ரங்கராஜும், அவரது முதல் மனைவி ஸ்ருதியும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துக்கூட பேசிக்கொள்ளவில்லையாம். இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள் திடீரென்று ஒரு நபரை பார்க்கும்போது ஒரே பக்கமாக அந்த நம்பரை பார்த்து சிரிக்கிறார்களே தவிர இருவரும் முகம் கொடுத்து ஒரு இடத்திலும் பேசவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு மாதம்பட்டி ரங்கராஜன் தனியாக ஒரு காரில் வந்ததாக கூறப்படுகிறது.
இந்தப் புகைப்படம், இந்த விவகாரம், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதை உணர்த்துகிறது.இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஜாய் கிரிசில்டா, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், 'Hospital visits be like' என்ற தலைப்பில், ஒரு பதிவைப் போட்டுள்ளார். அந்தப் பதிவில், 'Joy Rangaraj' என்று எழுதப்பட்ட ஒரு லேபலுடன் கூடிய, ஒரு புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார். மேலும், அதில், 'Raha Rangaraj', 'BabyRahaRangaraj' போன்ற ஹேஷ்டேக்குகளையும் பயன்படுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளவாசிகள் கேள்விகள்
ஜாய் கிரிசில்டாவுக்கு, 2023-ம் ஆண்டுதான், இயக்குனர் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக்குடன் விவாகரத்தானது. அப்படி இருக்கும்போது, "சில ஆண்டுகளாக எப்படி ரங்கராஜ் மனைவியாக இருக்க முடியும்?" என்று, சமூக வலைத்தளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி, தனது பெயருக்குப் பின்னால், இன்னும் 'ரங்கராஜ்' என்ற பெயரைப் போட்டு இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ், தன் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், "இந்தத் திருமணம் செல்லாதுமா ஜாய் கிரிசில்டா," என்று சமூக வலைத்தளவாசிகள் கூறியுள்ளனர்.
மௌனம்
"பொண்டாட்டி, பிள்ளைகள் இருக்க, இந்த மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி நான் என்று, ஜாய் கிரிசில்டா இப்படி தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறாரே. ஸ்ருதி ரங்கராஜ் வேறு அமைதியாக இருக்கிறார். மாதம்பட்டியும் சத்தம் இல்லாமல் இருக்கிறார்," என்று, ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 'குக் வித் கோமாளி 6' நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும், லட்சுமி ராமகிருஷ்ணனிடம் போய், சமூக வலைத்தளவாசிகள், ரங்கராஜின் இரண்டாவது மனைவி பற்றி கேட்கிறார்கள். இந்த விவகாரம், இன்னும் எந்தத் திசையை நோக்கிச் செல்லும் என்பது, ஒரு பெரிய மர்மமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications