மாதம்பட்டி ரங்கராஜனுக்கு சொத்து இல்ல, கடன் தான்! பல பெண்களுடன் தொடர்பு! அன்னைக்கு நடந்த சம்பவம்! ஜாய் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த விவகாரம் குறித்து ஜாய், சிவசங்கரி யூடியூப் சேனலில் ஒரு பெரிய பேட்டி கொடுத்திருந்தார். அதில், அவர் பேசிய பல விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

Mathampatti Rangarajan Joy Grizelda vijay tv

முதல் மனைவிக்கு தெரிந்த உறவு

அந்த பேட்டியில் ஜாய், "மாதம்பட்டி ரங்கராஜனும் நானும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வந்தோம். எங்கள் திருமணம் ரங்கராஜனின் மனைவி மற்றும் அவரது பெற்றோருக்கும் தெரியும். முதலில் என்னுடைய உறவு பற்றி அவருடைய மனைவி எந்தப் பிரச்சினையும் செய்யவில்லை. அவர் அன்று பிரச்சினை செய்திருந்தால், நான் இப்போது ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறி இருக்க மாட்டேன்" என்று பேசியுள்ளார். மேலும், இந்த குழந்தைக்கு யார் பொறுப்பு என்று பேசி, தனது நிலையை விளக்கினார்.

ஜாய் கொடுத்த பதிலடி

"நான் மாதம்பட்டி ரங்கராஜனுடன் பணத்திற்காகப் பழகினேன்" என்று சிலர் சொல்வதாக ஜாய் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த அவர், "அவருக்கு அதிகமான கடன் தான் இருக்கிறது. வெளியே தெரிவது எல்லாம் போலி. அவருடைய பெயரில் பைனான்சில் கார் கூட வாங்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அந்த அளவிற்கு அவருக்குக் கடன் இருக்கிறது. நான் அவருடன் வாழ்ந்த நாட்களில் என்னுடைய உடைகளுக்கும் கூட நான் தான் காசு செலவழித்து வாங்கினேன். அவரிடமிருந்து எந்தப் பணமும் நான் வாங்கியது கிடையாது. ஒரு லீஸ் வீட்டில் தான் நாங்கள் தங்கி இருந்தோம்" என்று மாதம்பட்டி ரங்கராஜனின் நிதி நிலைமை குறித்துத் தெரிவித்தார்.

கர்ப்பத்தை கலைக்க சொன்னார்

ஜாய் கிரிசில்டா, தான் கர்ப்பமாக இருப்பதாகவும், ஆனால் மாதம்பட்டி ரங்கராஜன் அந்த கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்னதாகவும் முன்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். கடந்த வருடத்தில் மாதம்பட்டி ரங்கராஜரின் முதல் மனைவி ஸ்ருதி தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பதாக ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதற்கு பிறகு ஜாய் மாதம்பட்டி ரங்கராஜன் உடன் கர்ப்பமானது சரிதானா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

மாதம்பட்டி ரங்கராஜனை மட்டுமல்ல; ப்ளூ சட்டை மாறனை வைத்து குரோஷி செய்த அட்ரா‌சிட்டி! ஓபனா பேசிட்டாரே
அதற்கு ஜாய், ரங்கராஜன் உன் மூலமாக எனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று 2023இல் என்னுடன் பழகும் போது சொல்லிக்கொண்டே இருந்தார். அதற்கு பிறகு எங்களுடைய திருமணம் முடிந்த சில மாதங்களில் நான் கர்ப்பமானேன். அந்த குழந்தை தங்கவில்லை அது அபார்ஷன் ஆகிவிட்டது. அப்போது ரங்கராஜன் ரொம்பவே மனதுடைந்து அழுது கொண்டிருந்தார். அதனால் தான் நான் அவருக்காக ஒரு குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் என்று ஜாய் கூறியிருந்தார். ஆனால் இந்த குழந்தை உருவான பிறகு மாதம்பட்டி ரங்கராஜன் குடும்பத்தினரின் வற்புறுத்தலினால் இந்த குழந்தையை கலைக்க வேண்டும் என்று அவர் என்னிடம் சண்டை போட்டார். நான் முடியாது என்று சொன்னபோது என்னுடைய போன் மற்றும் என்னுடைய டேப் எல்லாவற்றையும் போட்டு உடைத்து விட்டார் என்று ஜாய் பேசி இருக்கிறார்.

இன்னொரு குற்றச்சாட்டு

அதோடு மாதம்பட்டி ரங்கராஜன் பெற்று இன்னொரு குற்றச்சாட்டையும் ஜாய் வைத்திருந்தார். அதாவது மாதம்பட்டி ரங்கராஜன் அவருடைய மனைவியை ஆறு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்போது அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது அவர் பல பெண்களுடன் பழகி இருந்திருக்கிறார். ஆனால் என்னிடம் பேச தொடங்கிய பிறகு அந்த பெண்கள் நம்பரை பிளாக் செய்துவிட்டார். அவர்களிடம் பேசுவதை துண்டித்து விட்டார் என்னுடன் அவர் இருக்கும்போது அவருடைய குடும்பத்தில் இருந்து எந்த போனும் வந்ததே கிடையாது.
அவரைப் பற்றிய உண்மைகள் எல்லாம் எனக்கு இப்போதுதான் தெரியவந்தது என ஜாய் பேசியது இணையத்தில் அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

மொத்தத்தில், ஜாய் கிரிசில்டாவின் இந்த பேட்டி, மாதம்பட்டி ரங்கராஜன் மீதான சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த விஷயங்கள் குறித்து ரங்கராஜன் என்ன சொல்லப் போகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+