மாதம்பட்டி ரங்கராஜனை மட்டுமல்ல; ப்ளூ சட்டை மாறனை வைத்து குரோஷி செய்த அட்ராசிட்டி! ஓபனா பேசிட்டாரே
சென்னை: விஜய் டிவியின் செல்லப் பிள்ளைகளில் ஒருவரான குரோஷி, அவர் வீடியோ போட்டாலும் சரி, நிகழ்ச்சியில் கலக்கினாலும் சரி, அது இணையத்தில் உடனே வைரலாகும். அப்படித்தான் இந்த வாரம் குரோஷி செய்த இரண்டு விஷயங்கள் ரசிகர்களைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துள்ளது. மாதம்பட்டி ரங்கராஜன் பாணியில் ஒரு வீடியோ வெளியிட்டவர், அடுத்ததாக 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் ப்ளூ சட்டை மாறன் போல வேஷம் போட்டு வந்து பங்கம் செய்திருக்கிறார்.

யார் இந்த குரோஷி
குரோஷி, விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி 'கலக்கப்போவது யாரு' மூலம் பிரபலமானவர். தன்னுடைய தனித்துவமான உடல்மொழி, பேச்சு மற்றும் நகைச்சுவை உணர்வு மூலம் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். குறிப்பாக, அவர் பிரபலங்களை மிமிக்ரி செய்யும் ஸ்டைல் மிகவும் தனித்துவமானது. சக கோமாளியான புகழ், பாலா, சுனிதா போன்றவர்களுடன் சேர்ந்து இவர் செய்யும் காமெடிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து, சின்னத்திரையின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக இவரை மாற்றின.
ஓய் பொண்டாட்டி
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜன் பேசிய ஒரு வீடியோ இணையத்தில் செம வைரலானது. இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ரங்கராஜன், தன்னுடைய மனைவியிடம், "ஓ பொண்டாட்டி.. நான் ரூமுக்கு வந்துட்டேன், குளிச்சிட்டு ஒரு இன்டர்வியூக்குக் கிளம்பணும்" என்று காதல் கொஞ்சும் குரலில் பேசியிருப்பார். இது சமூக வலைதளங்களில் பல மீம்ஸ்களுக்குக் காரணமாக அமைந்தது.
இப்போது, அதே பாணியில் குரோஷி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தன்னுடைய மனைவிக்கு ஓணம் வாழ்த்து தெரிவிப்பதற்காக, அதே ரங்கராஜன் தொனியில், "ஓ பொண்டாட்டி.. நான் ஷூட்டிங் போயிட்டு வந்துட்டேன்.. குளிச்சிட்டு ஒரு இன்டர்வியூக்குக் கிளம்பனும்" என்று பேசி அந்த வீடியோவை வைரலாக்கிவிட்டார்.
புளூ சட்டை போட்ட குரோஷி
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடில், குரோஷி ஒரு நீல நிற சட்டை அணிந்து, புளூ சட்டை மாறன் போல வேஷம் போட்டு வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி விமர்சனம் செய்வது போல, பலரையும் வெளுத்து வாங்கினார்.
ரக்ஷனை ஓட்டிய அட்ராசிட்டி
"இந்த நிகழ்ச்சி, 'ஓகே' என்பதை மட்டுமே வைத்து ஐந்து வருடங்களாகத் தொகுப்பாளரை ஓட்டிக் கொண்டிருக்கிறது" என்று ரக்ஷனை நேரடியாகக் கலாய்த்து, ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார். "பருத்தி மூட்டை எப்படி ஆற்றுக்கும் குடோனுக்கும் மீண்டும் மீண்டும் வருமோ, அதே போல இந்த நிகழ்ச்சியில் மூன்று நடுவர்கள் இருக்கிறார்கள்" என்று நடுவர்களையும் விடாமல் கிண்டல் செய்தார்.
துணியில் கொடி
"மாதம்பட்டி ரங்கராஜன் ஒவ்வொரு வாரமும் புது காஸ்டியூமில் வருவார். பொதுவாக எல்லோரும் துணியைக் கொடியில் காயப்போடுவார்கள், ஆனால் மாதம்பட்டி ரங்கராஜன் துணியில் கொடியைக் காயப்போட்டு வந்திருக்கிறார்" என்று அவரைப் பங்கமாக கிண்டல் செய்துவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, புளூ சட்டை மாறன் ரசிகர்கள் மத்தியிலும் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.
குக் வித் கோமாளி - இந்த வாரம் வெளியேறியது யார்
இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் உமைர், பிரியா ராமன், ராஜு ஆகியோருக்கு இடையே எலிமினேஷன் சுற்று நடந்தது. இந்த மூவருக்கும் 'குக் ஆஃப்' மோதல் நடந்தது. இதில் உமைர் எலிமினேட் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அடுத்த வாரம் 'வைல்ட் கார்டு' சுற்று நடக்க உள்ளதால், உமைர் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
மொத்தத்தில், குரோஷியின் இந்த அதிரடியான நகைச்சுவை நிகழ்ச்சியையும், சமூக வலைத்தளங்களையும் ஒருசேர கலக்கி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications